20 ஆகஸ்ட், 2009

காண்டம்.. காண்டம்..


ய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை கமர்சியல் செக்ஸ் ஒர்க்கர்ஸ் மத்தியில் ஏற்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு விளம்பர கேம்பைன் சம்பந்தமாக பேச என்னுடைய பாஸோடு போயிருந்தேன். அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு நடுத்தர வயதுப் பெண். அவரது டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் விவகாரமான ஷேப்பில் (லிங்க வடிவத்தில்) இருந்தது. எங்களோடு பேசிக்கொண்டேயிருந்தவர் ஒரு ஆணுறையை எடுத்து அந்த பேப்பர் வெயிட்டில் கேஷுவலாக மாட்டினார். எனக்கு கொஞ்சம் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது.

என் முகத்தைப் பார்த்த அந்த பெண், “இதுக்கே கூச்சப்பட்டா எப்படி நீங்க எங்களுக்கு கிரியேட்டிவ்ஸ் பண்ணித் தரப் போறிங்க?” என்று கூறி சிரித்தார். ஆணுறை மாட்டப்பட்ட அந்த பேப்பர் வெயிட்டுகள் 'அந்த மாதிரியான' லாட்ஜூகளுக்கு தரப்படுமாம். ஆணுறை என்ற மேட்டரை யாரும், எப்பவும் மறந்துவிடக்கூடாது என்பதால் அதுபோல பேப்பர் வெயிட்டுகள் தயாரிக்கப்பட்டதாம். ஆணுறையை நினைவுபடுத்தும் எந்த ஐடியாவாக இருந்தாலும் தாருங்கள், பரிசீலிக்கிறோம் என்றார்.

மீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸுக்கு போயிருந்தபோது வரிசையில் எனக்கு முன்பாக ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கும் முன்பாக ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். திடீரென்று 'காண்டம்.. காண்டம்.. காண்டம்' என்று இளைஞனின் செல்போன் அலற, எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த பெரியவருக்கு முகம் வேர்த்துவிட்டது. அருகிலிருந்த பெண்கள் சிலர் நாணத்தால் முகம் சிவந்தார்கள். அந்த இளைஞன் எந்த டென்ஷனுமில்லாமல் போனை எடுத்து பேசத் தொடங்கினான்.

வேறொன்றுமில்லை, ஆணுறை விழிப்புணர்வுக்காக பிபிசி வெளியிட்டிருக்கும் ஸ்பெஷல் ரிங்டோன் இது. டிவி விளம்பரங்களில் கூட இந்த ரிங்டோனை நீங்கள் கேட்டிருக்கலாம். பில் & மெலிடா கேட்ஸ் பவுண்டேஷன் நிதியுதவியோடு பிபிசி நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த ரிங்டோன் மூலமாக 'காண்டம்' என்ற சொல் மக்கள் மத்தியில் பரவலாக்கப்படும் என நம்பப்படுகிறது. அடிக்கடி இந்த சொல்லை கேட்டுக் கொண்டேயிருப்பதால் அச்சொல்லை கேட்கும்போது தோன்றும் வெட்கம் மக்களுக்கு மறையும் என்று நம்புகிறார்கள். டிவி, ரேடியோ மற்றும் இண்டர்நெட் மூலமாக இந்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. "புத்திசாலி ஆண்கள் ஆணுறையை உபயோகிக்கிறார்கள்" என்ற தலைப்போடு வரும் விளம்பரங்கள் ஆண்களை கட்டாயம் கவரும். "பேசுறவன் தான் புத்திசாலி" என்று ஒரு கிளி வந்து சொல்லுவதைப் போன்ற விளம்பரம் உங்களுக்கும் நினைவுக்கு வருகிறது தானே?

25 லட்சம் பேர் எச்.ஐ.வி. கிருமி பாதிப்போடு வசிக்கும் இந்தியாவுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரங்கள் மிகவும் அவசியம். இப்போதெல்லாம் ரிங்டோன்கள் மிக சீரியஸாக இளைஞர்களால் பரிசீலிக்கப்படுகிறது. வித்தியாசமான ரிங்டோன் வைத்திருப்பவர்கள் அனைவரையும் எளிதில் கவருகிறார்கள். ஆணுறை குறித்த விழிப்புணர்வை கொஞ்சம் நகைச்சுவையோடு ரிங்டோனில் சொன்னால் அது எளிதில் பலரையும் கவருகிறது. இந்த ரிங் டோனை மிக சுலபமாக இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இதன் பயனாளிகள் தங்கள் ரிங்டோன் மூலமாக ஒரு சிறிய விழிப்புணர்வை சமூகத்துக்கு ஏற்படுத்தும் வாய்ப்பை பிபிசி வேர்ல்டு ட்ரான்ஸ் இந்தியா சர்வீஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது.

இப்போதே ஒரு கோடி பேரையும் தாண்டி இவர்களது தொடர் விளம்பரங்கள் சென்றடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த விளம்பரங்களை கண்டவர்களில் 70 சதவிகிதம் பேர் தங்கள் நண்பர்களோடு இதுபற்றி பேசியிருக்கிறார்களாம். ஆணுறை குறித்த வெளிப்படையான கலந்துரையாடல் மக்கள் மத்தியில் நிலவவேண்டும் என்பதற்காக இந்த விளம்பரங்களை உருவாக்கியிருக்கிறார்கள் எனும்போது, அவர்களது நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்த விளம்பரங்களை கண்டவர்கள், கேட்டவர்கள் இதுவரை நாலு லட்சம் பேர் தொலைபேசி ஆணுறை குறித்த விவரங்களை அறிந்து கொண்டிருக்கிறார்களாம்.

எக்ஸ்ட்ரா பாக்ஸ் மேட்டர் : அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் பலவும் இவ்வாறாக பல கோடியை கொட்டி நூதனமுறையில் விளம்பரங்கள் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு இந்த விவகாரத்துக்கு செலவழிக்கும் பணம் என்னவாகிறது என்று பார்த்தோமானால் வருத்தமே மிஞ்சுகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சிலகாலம் முன்பாக நாடெங்கும் பல்லாயிரம் இடங்களில் ஆணுறை வழங்கும் இயந்திரத்தை நிறுவியது. ஒரு ரூபாய் போட்டு போன் பேசுவது போல மிக சுலபமாக காசினை இயந்திரத்துக்குள் செருகி ஆணுறை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி அது. மருந்துக்கடைகளில் ஆணுறை சொல்லி வாங்க கூச்சப்படுபவர்களுக்காக இதுபோன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டது.

படத்தில் இருப்பது சென்னை தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸில் ஒரு பெட்டிக்கடை வாசலில் இருக்கும் ஆணுறை வழங்கும் இயந்திரம். நிறுவியதோடு சரி, எந்த பராமரிப்பும் இன்றி சில மாதங்களிலேயே வெறும் பெட்டியாகிப் போனது. இப்போது சிகரெட் பற்றவைக்க விரும்புபவர்களுக்காக அதில் தீப்பெட்டியையும், கயிறு ஒன்றில் தீயையும் பற்றவைத்து நூதனமாக அந்த இயந்திரத்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் அந்த பெட்டிக்கடைக்காரர். நகரின் முக்கியப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தின் கதியே இதுவென்றால் மற்ற இடங்களில்

12 கருத்துகள்:

 1. Lucky, condomcondom site got affected with virus.. pls share if any other link available..

  Further details click below:

  http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.condomcondom.org/

  பதிலளிநீக்கு
 2. எக்ஸ்ட்ரா பாக்ஸ் மேட்டர் .. நச்...

  பதிலளிநீக்கு
 3. லக்கி... அந்த சைட் ஓப்பன் ஆகவில்லை. வைரஸ் என்று தெரிவிக்கிறது. சரி பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 4. என்ன மாதிரியான ஐடியா குடுத்தீர்கள் கடைசியா ?

  பதிலளிநீக்கு
 5. நானும் டவுண்லோடு செய்த படியே உள்ளது...

  ஆனால் மொபைலில் யுஸ் பண்ண முடியல்ல லக்கி...

  இங்கே இருந்தும் டவுண்லோடு செய்யலாம்..
  http://www.google.co.in/search?q=condom+condom+ring+tone+download&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு கிருஷ்ணா சார் ...!!

  பதிலளிநீக்கு
 7. லக்கி... அந்த சைட் ஓப்பன் ஆகவில்லை.


  Take Lot of Times also.

  yesterday Templ superbbbbbb

  பதிலளிநீக்கு
 8. யுவகிருஷ்ணா வுக்கு ஒரு காண்டம் பார்சல்

  பதிலளிநீக்கு
 9. ஆணுறை குறித்த விழிப்புணர்வு அவசியம் தான் என்றாலும், குடும்பப் பெண்களை தவறாகச் சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எனது கருத்துக்களை எழுதியுள்ளேன். உங்கள் உணர்வுகளை உரக்கச் சொல்லுங்கள். மேலும் விவரங்களுக்கு (கரிகாலன்-ல்) (http://karikaala.blogspot.com/2009/08/blog-post_28.html).

  பதிலளிநீக்கு