16 ஆகஸ்ட், 2009

ரகசிய சிநேகிதியும், கள்ளக்காதலனும்!


"ஹலோ யாரு பேசுறது"

"ஹலோ எங்கிட்டே பேசிக்கிட்டிருக்கிறது ரகசிய சிநேகிதியா?"

"ஆமாங்க நான் ரகசிய சிநேகிதி தான் பேசுறேன். நீங்க யாரு"

"என் பேரைச் சொல்ல விரும்பலீங்க. என் ப்ரெண்ட்ஸ்ஸெல்லாம் என்னை தோஸ்த்துன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க"

"சரி தோஸ்த். உங்க காதலி பேரு என்ன? எவ்வளவு நாளா காதலிக்கிறீங்க. இப்போ உங்க காதல் எந்த கண்டிஷன்லே இருக்கு?"

"என் காதலியோட பேரை சொல்ல விரும்பலீங்க. அவங்களுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சி"

"ஸோ பிட்டி. என்ன ஆச்சி? எப்படி பிரிஞ்சீங்க? ஏன் பிரிஞ்சீங்க?"

"என் காதலியோட அப்பா ஒரு அரசியல் கட்சி பிரமுகர். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பலை மேடம். அவரால என் உயிருக்கு ஆபத்து வருமுன்னு என் காதலியே என்னை பிரிஞ்சி வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க"

"அடப்பாவமே. உங்க காதலியை கடைசியா எப்போ பார்த்தீங்க?"

"இப்பக்கூட அவங்க கூட தியேட்டர்லே தான் இருக்கேன் மேடம். கல்யாணத்துக்கு அப்புறமா கூட எங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கு"

"அய்யய்யோ. இது அவங்க ஹஸ்பெண்டுக்கு தெரியுமா?"

"அது எப்படிங்க தெரியும்? எனக்கு என்ன வருத்தம்னா அவங்க எனக்கு கிடைக்காம போயிட்டாங்களேங்கிறது தான். அப்படியும் சொல்ல முடியாது. இப்பவும் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சிக்கிட்டு தான் இருக்கோம்"

"இண்ட்ரஸ்டிங்.... உங்களுக்குள்ளே வேற என்னவெல்லாம் இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"அதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க"

"உங்களுக்கு எப்போ கல்யாணம்"

"எனக்கும் கல்யாணம் சீக்கிரமா நடக்கப் போவுதுங்க. பொண்ணெல்லாம் கூடப் பார்த்தாச்சி"

"தேங்க்ஸ் பார் யுவர் காலிங் தோஸ்த். உங்க காதலியோட நீங்க லைப்பை என்ஜாய் பண்றதுக்கு இந்த ரகசிய ஸ்நேகிதியோட வாழ்த்துக்கள். இப்போ உங்களுக்கு புடிச்ச ஒரு லேட்டஸ்ட் சாங் வந்துக்கிட்டே இருக்கு"

- வெட்டியாக இருந்த பொழுதில் ஏதோ ஒரு எஃப்.எம்.மில் எப்பொழுதோ கேட்டது!

16 கருத்துகள்:

 1. உண்மையிலேயே எஃப்.எம்.மில் கேட்டதா?

  ரகசிய சிநேகிதி நம்பர் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
 2. நான் கூட லக்கி இவ்வளவு எளிதாக யூகிக்கும்படி ஒரு பக்க கதை எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன்.

  காலகொடுமை இதெல்லாம் ! :D

  பதிலளிநீக்கு
 3. //உண்மையிலேயே எஃப்.எம்.மில் கேட்டதா? //

  மண்டபத்தில் யாரோ பேசிக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டு வந்தா எழுதியிருக்கிறேன்? :-)

  பதிலளிநீக்கு
 4. பாவம் அந்த பொண்ணோட புருசன் மாதிரி நெறைய தியாகிகள் இருக்காங்க நாட்டுல பொண்டாட்டி யாரோட போறணு தெரியாம. என்னத்த சொல்ல, காலம் போற போக்கு இப்ப்டி தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. கிருஷ்ணா,

  வித்தியாசம் என்ற பெயரில் எஃப்.எம் காரர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. ஆனாலும் தொலைக்காட்டிசிக்கு இது பெட்டர் என்பேன். கருமத்தை கேக்காம கூட வேற வேலையை பாக்கலாம்.

  நன்றாக எழுதியிருக்கிறிர்கள்....

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 6. //
  பீர் | Peer said...
  உண்மையிலேயே எஃப்.எம்.மில் கேட்டதா?

  ரகசிய சிநேகிதி நம்பர் கிடைக்குமா?//

  பீர் ஆன்கீகம் பதிவு போட்டு இப்படி ரகசிய சிநேகிதி நம்பர் கேட்கிறாயே இது சரியா?

  பதிலளிநீக்கு
 7. //மண்டபத்தில் யாரோ பேசிக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டு வந்தா எழுதியிருக்கிறேன்? :-)
  //

  அப்படித்தான் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 8. லக்கி சூப்பர்,

  இந்த நிகழ்ச்சி பிக் எப் எம் ல் தினமும் இரவு 10 மணிக்கு ரகசிய சிநேகதி என்ற பெயரில் நடக்கிறது.

  இது போல பல அபத்தமான செய்திகளை நானும் கேட்டுகிறேன்.

  நீங்கள் ஒரு நல்ல பதிவாக போட்டு கலகிடீங்க.

  பதிலளிநீக்கு
 9. // பித்தன் said...

  good one.... can I get her number

  ஏற்கனவே பித்தனா இருக்கீங்க. அப்புறம் நம்பர் எதுக்கு

  பதிலளிநீக்கு
 10. மணிதர்கள் நிஜங்களை அறிந்தால் பித்தனாகித்தான் போவார்கள்

  பதிலளிநீக்கு
 11. இது கற்பனைதான் என்றாலும், நடக்க கூடியதுதான். பண்பலை வானொலியில் இரவு முழுவதும் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் தான் ஒலிபரப்ப படுகிற்து.

  பதிலளிநீக்கு
 12. கோவையில் ஒரு எம்.எம். மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடத்தும் காதலர் நேரத்தில்... காதலர்கள் ரேடியோவில் இந்த... அந்த இடம் என கூப்பிட்டு பார்த்துள்ளேன்...

  இது ரொம்ப ஓவரே இருக்கே?

  எப்படியோ கள்ள காதல் வாழ்க... கள்ள காதலின் தூண் பிக் எப்.எம். வாழ்க என சொல்ல வேண்டும் போல் உள்ளது...

  பதிலளிநீக்கு
 13. romba nalla irukku. summa kekuravangala kick yethuradhukkaga yaro pesina madhiri irukku.

  பதிலளிநீக்கு