13 ஆகஸ்ட், 2009

பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன்!


எழுத்தாளர் ஞாநியின் ‘கோலம் குறுந்தகடு இயக்கம்’ பற்றி இந்தவார குமுதத்தில் வாசித்திருப்பீர்கள். படங்கள் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடாமல் நேரடியாக மக்களுக்கு குறுந்தகடு வாயிலாக (துட்டு வாங்கிக் கொண்டுதான்) அனுப்பும் இயக்கம் இது. இந்த இயக்கத்தின் தொடக்கம் இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு (13-08-09) சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது.

இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். அனைவரும் நண்பர்களோடு வரலாம் என்று ஞாநி அறிவித்திருக்கிறார்.

ஞாநியின் விழாக்களில் கவர்ச்சிகர அம்சமாக அவருடைய டிசைனர் பைஜாமா உடையலங்காரத்தை முக்கியமாக குறிப்பிடலாம். எங்கேயாவது ரெடிமேடாக கிடைக்கிறதா? இல்லை அவருக்கென்று ஆர்டர் செய்து தைக்கிறாரா என்று நேரில் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கோகுலாஷ்டமி கும்பிடாத புண்ணியவான்கள் வந்துசேரலாம். சென்னை பிலிம் சேம்பர் அரங்கு, அண்ணா மேம்பாலத்துக்கு கீழே இருக்கிறது.

6 கருத்துகள்:

 1. குறுந்தகடு இயக்கம்... பெயரே நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி. குருஜியே ரெக்கமண்ட் செய்கிறார் என்றால் சிறப்பான ஒன்றாகத்தான் இருக்கும். நமக்கு நேரில் பார்க்க கொடுப்பினை இல்லை. பார்த்தவர்கள் எழுதுவதை படித்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான்.

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 2. \\போய் வேலைய பாருங்க பாஸு..:)\\

  கேபிள்ஜி, ஞாநியின் ஒற்றை ரீல் இயக்க படங்களின் (நிலையில்)அடிப்படையில் ஏற்பட்ட
  பாதிப்பா?

  பதிலளிநீக்கு
 3. கிருபாநந்தினி3:22 பிற்பகல், ஆகஸ்ட் 14, 2009

  கோகுலாஷ்டமி கும்பிடாத புண்ணியவான்கள் வரலாம் என்று அழைத்திருக்கிறீர்களே, புண்ணியவதிகள் வரக்கூடாதா? (முடிஞ்சு போயிருக்கும். இருந்தாலும் ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன்.)

  பதிலளிநீக்கு
 4. Lucky

  I want to post a comment that no way connected to this post. Could you please publish this comment.

  I have no bloger account and I couldn't comment in Unmaithamalan's post about the malyalam movie review he wrote.

  Unmai thamilan I want to tell you that if you can't under stand malayalam please do not write review about the movie.

  I read lot of comments or questions about the movie in the comment section.

  Here is my reply for that

  1. Mohanlal's wife didn't kill the child in the movie. The child dead beacause of the fever and no body take care of it. (His wife is in a insane state)
  2. Mohanlal after the death of his wife and child went to his inlaw's house and brought the dead body to his house.
  3. He is in a state of insane (paithiam) and left the body in his house and went to find the persons who was the reason for all those things.
  4. He was in a split personality mode befote and after his family problom

  So If you don't understand the movie please do not write a review.

  Lucky ,

  please publish this comment

  Subu

  பதிலளிநீக்கு