28 ஜூலை, 2009

ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!


ச்சே.. கடுப்பாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஆபாசம்! ரோட்டில் நடந்தால், பஸ்ஸில் பயணித்தால், டிவியை போட்டால், பேப்பரைப் பிரித்தால், சைபர்க்ரைமை வாசித்தால்..

டென்ஷன் ஆகிவிட மாட்டாரா தோழர் வினவு?

புரட்சிகர செயல்பாடுகள் இந்த ஆபாசத்தொல்லைகளால் அமுங்கிப் போய்விடாதா? அதனால் தான் 'ஆடுறா ராமா, ஆடுறா ராமா' என்று ஆட்டித் தள்ளியிருக்கிறார்.

புதியஜனநாயகமும், புதிய கலாச்சாரமும் வாசித்து, புரட்சிப் பட்டு தீப்பொறியாய் தெறித்து, வீங்கிப்போக வேண்டிய தோழரின் புரட்சி விழிகள், ஆபாசம் குடம் குடமாக பொங்கி வழியும் அஜால் குஜால் தொடரான சைபர் கிரைமை வாசிக்கலாமா? பு.ஜ.வையும், பு.க.வையும் தோழர்கள் கூட வாசிக்காவிட்டால் வேறு யார்தான் வாசிப்பது? இல்லையேல் அஜால் குஜால் தொடரைத்தான் வாசிப்பேன், வாசித்துவிட்டு கண்டனப் பதிவு போடுவேன் என்று தோழர்கள் சங்கல்பம் கட்டிக் கொண்டிருந்தால், புரட்சியை வேறு யார் கட்டமைப்பது?

தோழர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். “நான் அவ்வளவு ஒர்த் இல்லே தோழர்!”

ஆபாசத்தைக் கண்டிக்கும் தோழர் வினவின் புனிதப்பதிவில் கண்ட சில வாசகங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. உதாரணத்துக்கு ”நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.” தோழர்களே! இதையே தானய்யா நானும் எழுதினேன். நான் எழுதினால் ஆபாசம். நீங்கள் எழுதினால் புரட்சி புண்ணாக்கு சிந்தனைகளோ?

தோழர் வினவு என்னவோ புற்றெடுத்து புரட்சித்தவம் செய்துகொண்டிருந்தது போலவும், ஆபாச சைபர் கிரைம் லக்கிலுக்கு மேனகையாய் வந்து புரட்சித்தவத்தை கலைத்துவிட்டதைப் போலவும் கழிசடைத் தோழர்கள் சிலர், வினவு தளத்தை கக்கூசுப் பொட்டியாக நினைத்து பின்னூட்டங்களை தனிநபர் தாக்குதல்களாக கழிந்து கொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் பேசிய விவரங்களை பொதுவில் வைப்பது எனக்கு ஏற்பில்லாத ஒன்று. இருந்தாலும் சில நேரங்களில் வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. லக்கியை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமான போக்கு வினவு தளத்துக்கு இல்லையென்று தோழர் வினவு தொலைபேசி உரையாடலில் வாக்களித்திருந்த போதிலும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து, மோசமான வார்த்தைகளில் சாடும் தனிநபர் பின்னூட்டங்களை வெளியிட்டுவிட்டு, சம்பிரதாயத்துக்கு ஆட்சேபித்து மகிழும் போக்கு புரட்சியோ புரட்சி!

தோழர்களின் பார்வையில் ஆபாச எழுத்தாளனாக மாறிவிட்ட எனக்கிருக்கும் அறமும், நேர்மையும், தார்மீகமும், நாகரிகமும் கூட புரட்சியைக் கட்டமைக்க மார்க்சியப் போர்வையில் மாங்காய் அடித்துக் கொண்டிருக்கும் தோழர்களிடம் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். எப்படியிருப்பினும் தோழர்களின் தியாகம், உழைப்பு போன்றவைக்கு என் நெஞ்சில் என்றுமே நல்லிடம் உண்டு!

* - * - * - * - * - * - * - * - * - *

நண்பர் பரிசல்காரன் சில நாட்களாக கவிதைகளாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார். ஓரிரண்டு கவிதை மாதிரிதான் இருக்கிறது. தினத்தந்தியில் வரும் சிங்கிள் காலம் மேட்டரை மடக்கி, மடக்கி எழுதிவிட்டால் கவிதையாகி விடும் என்ற சூட்சுமம் இப்போதுதான் விளங்குகிறது. ஆனால் அனுஜன்யா போன்றவர்கள் பரிசலின் கவிதைகளுக்கு(?) போடும் பின்னூட்டம்.. சூச்சூ.. மாரி... இதுமாதிரி எல்லாம் ஓவராக கும்மியடித்தால், ஏன் முந்தாநாள் மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் பிரபல/மூத்த பதிவர்கள் மீது ஒண்ணுக்கு அடிக்கமாட்டார்கள்?

நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லுங்கப்பூ. சும்மானாக்காச்சும் தெரிந்தவர் என்பதால் ஷேக்ஸ்பியர், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் ரேஞ்சுக்கு புகழ்ந்து பின்னூட்டம் போட்டால் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் மாதிரி திரியும் புதுசுகள் வயிறெரிவது நியாயம்தானே?

பரிசல் மிக நல்ல உரையாடல் ஆசிரியன். அவர் கவிதை, கிவிதை என்று கெட்டு சீரழிந்துப்போய் அருமையான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கவிதையாக்கி கொலைசெய்வது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!

* - * - * - * - * - * - * - * - * - *

சர்ச்சை நாயகன் நர்சிம் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று எட்டிப்பார்த்தேன். 'என்'ணங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். அரசியல், பதிவுலகம், இத்யாதிகள் கலந்த கலக்கல் காக்டெயில். திரட்டிகளில் இருந்து விலகியபிறகு அரசியல் கூட எழுத ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. ரொம்ப தைரியம்தான்!

* - * - * - * - * - * - * - * - * - *

அவ்வப்போது திட்டரில் (இதை ட்விட்டர் என்றும் சொல்கிறார்கள்) உலவ ஆரம்பித்திருக்கிறேன். வாழைப்பள ப்ளேவர் குறித்து நான் போட்ட ஒரு திட்டருக்கு, டோண்டு சாரின் பதில் திட்டரைக் கண்டு பேஜாராகிப் போனேன். அவருக்கு வயது அறுபத்து நான்கா, பதினான்கா என்ற சந்தேகம் வந்துவிட்டது. திட்டர் நேரத்தை தின்கிறது. ஆனாலும் டீக்கடையில் கூடி வெட்டியாகப் பேசுவதைப் போல சுவாரஸ்யமாக தானிருக்கிறது. 140 எழுத்துகளில் திட்டுவதற்கு வசதியான களமாக இருப்பதால் நான் திட்டர் என்றே சொல்கிறேன்.

* - * - * - * - * - * - * - * - * - *

வால்பையனின் வாய்க்குள் - சர்க்கரை கூட பத்தாது - சர்க்கரை கொடவுனையே கொட்டலாம். போனவார ஞாயிறு மதிய தூக்கத்தை போன் போட்டு கெடுத்தவர், “என்ன மாம்ஸூ. நீங்களும் பரிசல் மாதிரி ஆயிட்டீங்க. ஒரு சண்டை சச்சரவையே காணோம்!” என்றார். இதோ தோழர்கள் கும்மாளம் அடித்துவிட்டார்கள்.

* - * - * - * - * - * - * - * - * - *

இன்னும் தலைப்புக்கே வராமல், மொக்கை போட்டுக் கொண்டிருப்பதாக நினைப்பவர்களுக்கு...

ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை ஒன்று!

31 கருத்துகள்:

 1. //பரிசல் மிக நல்ல உரையாடல் ஆசிரியன். அவர் கவிதை, கிவிதை என்று கெட்டு சீரழிந்துப்போய் அருமையான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கொலைசெய்வது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!//

  அப்படியே வழிமொழிகிறேன்!
  அதை எடுத்து சொல்ல வேண்டிய நண்பர்கள், மேலும் அதை ஊக்கப்படுத்துவது கண்டிக்கதக்கதாகவே தோன்றுகிறது!

  நடந்து முடிந்தவைகள் சூரியகிரகணம் போல் சில நொடி மறைவுகள் என நினைத்து கொண்டு மீண்டும் கிளர்தெழ வாழ்த்துக்கள் பரிசலுக்கு!

  பதிலளிநீக்கு
 2. //வால்பையனின் வாய்க்குள் - சர்க்கரை கூட பத்தாது - சர்க்கரை கொடவுனையே கொட்டலாம். போனவார ஞாயிறு மதிய தூக்கத்தை போன் போட்டு கெடுத்தவர்,//

  சரிங்க மாம்ஸ் இனிமே நைட்டு பன்னிரண்டு மணிக்கு மேல் போன் பண்றேன்!

  பதிலளிநீக்கு
 3. வளர்ச்சி அடைய அடைய பதிவுகளில் நாகரிகம் குறைந்துவிடுமோ எனும் அச்சத்தைத் தந்துவிட்டது தங்களின் இந்த பதிவு!

  சில வருடங்கள் முன்னரே நீங்கள் எனக்கு முத்தமிழ்மன்றத்தில் அறிமுகம். அருமையாக எழுதிய தங்களின் பல பதிவுகள் அங்கே கண்டதுண்டு. 'எப்போப் பூப்பூக்கும்' எனும் அருமையான கதையினை உங்கள் வலைப்பூவில் படித்ததும் உண்டு.

  நேற்றுதான் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதுவது குறித்தும் அறிந்தேன். வாழ்த்துகள்.

  தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணி, இந்தப் பதிவில் சில வாக்கியங்களைத் தவிர்த்திருக்கலாம் என உங்களுக்குத் தோன்றவில்லையெனின் நீங்கள் எழுதுவது சரியாகவேப்படலாம் உங்களுக்கு. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. //ஏன் முந்தாநாள் மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் பிரபல/மூத்த பதிவர்கள் மீது ஒண்ணுக்கு அடிக்கமாட்டார்கள்?//

  அட நீங்க வேற டோலர், திரட்டிங்க மேல அவன் அவன் ஆய் போய்க்கிட்டு இருக்கானுங்க!

  //சர்ச்சை நாயகன் நர்சிம் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று எட்டிப்பார்த்தேன்.//

  இப்ப எட்டிப்பாருங்க ரூம் போட்டு அழுதுக்கிட்டு இருப்பார்:) சர்சை நாயகன் என்றதை படிச்சதும்!

  //டீக்கடையில் கூடி வெட்டியாகப் பேசுவதைப் போல சுவாரஸ்யமாக தானிருக்கிறது.// எனக்கு என்னமோ அவ்வளோ பிடிக்கல! யாரும் மொக்கை போட மாட்டேங்கிறாங்க:(

  பதிலளிநீக்கு
 5. படம் அருமை. எங்கிருந்து புடிக்கிறீங்களோ

  பதிலளிநீக்கு
 6. ம்ம்ம் நீங்கள் வேஸ்ட் .........135 தாண்டி விணவு -ல் பின்னுட்டங்கள்...இன்னும் ஹிட் ஆகலையே..

  பதிலளிநீக்கு
 7. //ஆபாசத்தைக் கண்டிக்கும் தோழர் வினவின் புனிதப்பதிவில் கண்ட சில வாசகங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. உதாரணத்துக்கு ”நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.” தோழர்களே! இதையே தானய்யா நானும் எழுதினேன். நான் எழுதினால் ஆபாசம். நீங்கள் எழுதினால் புரட்சி புண்ணாக்கு சிந்தனைகளோ?//

  இந்த பத்தியை படிக்கும் பொழுது உங்களால் படிக்க முடியும் ஆனால் வினவு சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது.

  எவ்வளவு நாள் தான் இந்த 'வெளிப்படை' நாடகம் என்று பார்ப்போம். உங்கள் கட்டுரையை படித்து அதிஷா கருத்து சொல்லலாம் , 'புரட்சி' செய்கிறோம் என்று சொல்பவர்கள் சொல்லக் கூடாது , அம்புட்டுதானே ?

  குமுதத்திடம் சிக்கி சின்னா பின்னமாகத வரை சரி !

  பதிலளிநீக்கு
 8. சபிதா பாபியின் கதை தமிழில் இன்னும் வருகிறதே படித்திருக்கிறீர்களா? லைவ்லியான மொழிபெயர்ப்பு, ஹிந்தி/ஆங்கிலத்திலிருந்து.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 9. :-)

  டோண்டுசார்!

  ஏற்கனவே பத்தி எரிஞ்சிக்கிட்டிருக்கு. இது எண்ணெய் வேற ஊத்தணுமா? :-)

  பதிலளிநீக்கு
 10. இது எல்லாம் தேவையில்லாத ஆணின்னு தான எழுதினது எல்லாத்தையும் எடுத்து விட்டீங்க...அப்புறம் மறுபடியும் ஏன் இந்த வேலை ?

  பதிலளிநீக்கு
 11. வாங்க குரு...

  அப்படியே இந்த ஃபுளோவோட தினம் ஒரு பதிவை புதுசா போடுங்க...

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 12. Naagareegama Yedhir vinaiyai padhivu seyya mudiyum nu nirubichuteengha..(Ungha nermai romba puduchirukku :) ...)
  Pinnotangal thavirtha "vinavin" Padhivum sari,ungal yedhir vinayum sari aarokiyamana vimarsanamagave yenakku padugirathu...Valthukkal..Krish

  பதிலளிநீக்கு
 13. //சபிதா பாபியின் கதை தமிழில் இன்னும் வருகிறதே படித்திருக்கிறீர்களா? லைவ்லியான மொழிபெயர்ப்பு, ஹிந்தி/ஆங்கிலத்திலிருந்து.//

  நீங்கள் சுயநலவாதி!
  தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைப்பதே சாலச்சிறந்தது!

  அனுப்புங்க சார்!

  பதிலளிநீக்கு
 14. ஐயோ தோழரே... கவித எழுதினது குத்தமாய்யா? எல்லாம் பண்ணனும்ல!

  சரி.. உங்களுக்காக இன்னைக்கு ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சுப் பார்த்து கும்முங்க! (ஏண்டா எழுதச் சொன்னேன்னு அழக்கூடாது. ஓகே?!?)

  பதிலளிநீக்கு
 15. //நீங்களும் பரிசல் மாதிரி ஆயிட்டீங்க. ஒரு சண்டை சச்சரவையே காணோம்!” //

  வாய் வெச்சுட்டாரா.. நானும் பார்த்து இருந்துக்கறேன்!

  பதிலளிநீக்கு
 16. யுவா,

  எப்படி உங்களால் எதையுமே இப்படி துணிச்சலாக சொல்லவும், எழுதவும் முடிகிறது?

  ஆனால், பரிசல் உங்கள் நண்பர்தானே (எனக்கும்தான்) போனில் சொல்லியிருக்கலாமே? ஏன் இங்கே இப்படி?

  மனதில் பட்டதை சொன்னேன். பிடிக்கவில்லையென்றால் பிரசுரிக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 17. எப்படியும் குமுதம் ரிப்போட்டருக்கு நல்ல விளம்பரம்

  பதிலளிநீக்கு
 18. //எப்படி உங்களால் எதையுமே இப்படி துணிச்சலாக சொல்லவும், எழுதவும் முடிகிறது?//

  உலகநாதன்!

  பரிசலுக்கும், எனக்கும் நல்ல புரிந்துணர்வு உண்டு. பரிசல் என்பதால் தான் துணிச்சலாக சொல்லவும் முடிகிறது. நெருங்கியவர் என்பதால் தான் அனுஜன்யாவையும் நக்கலடிக்க முடிகிறது.

  இவர்களிடம் உரிமை எடுத்துக் கொள்ளாமல் வேறு யாரிடம் நான் உரிமை எடுத்துக்கொள்ள முடியும்?

  பதிலளிநீக்கு
 19. என்ன ஆச்சு லக்கி உங்களுக்கு ? விளக்கம் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க ? :)-

  பதிலளிநீக்கு
 20. லக்கி ...

  நான் பதிவுலகத்திற்கு புதுசு என்றாலும், உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது. நீங்கள் ரிபோர்டேரில் எழுதும் தொடரை நான் படித்ததில்லை. ஆனால் அது சம்பந்தமாக நீங்களும் ,வினவும் எழுதிய இடுகைகளையும பின்னூட்டங்களையும் படித்து வருகிறேன். இதில் எழுதிய யார் அளவுக்கும் எனக்கு அனுபவம் இல்லை தான். ஆனாலும் எனக்கு தோன்றியதை சொல்கிறேன்... இடுகைகள் எழுதும்போது அதை படிப்பவர்கள் நூற்றுகணக்கில் இருந்தால், பத்திரிகையை படிப்பவர்கள் ஆயிரகணக்கிலாவது இருப்பார்கள். அதனால் இடுகை எழுதுபவர்களை விட பத்திரிகையில் எழுதுபவர்களுக்கு சமுதாய பொறுப்பு அதிகம். கண்டிப்பாக. பலருக்கு தெரியாத பல விஷயங்களில் சைபர் கிரைம் உம ஒன்று. இப்படியெல்லாம் தவறுகள் நடக்கிறது என்று சுட்டி காட்டும் போது, அந்த தவறுகளில் இருந்து மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதனால் வரும் சமூக கேடுகள் என்னென்ன என்று சொல்ல வேண்டும். அதே சமயம், மக்கள 'ஓ!! தவறுகளை இப்படி எல்லாம் கூட செய்யலாமோ ' என்று அறிந்து அவற்றை செய்ய ஆசையை வளர்க்கும் விதமாக அமைந்து விட கூடாது. இது இரண்டிற்கும் உள்ள இடைவெளி மிக சிறியது தான். படிப்பவன் தான் நல்லதையும் கேட்டதையும் பிரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் 2 மணி நேர திரை படத்தில், திருட்டு, ஆபாசம், இன்ன பிற எல்லாவற்றையும் காட்டிவிட்டு படம் முடியும் போது இதை எல்லாம் செய்யாதே என்று சொனால் , நல்ல கருத்தை சொல்லும் திரைப்படம் என்று கூற முடியுமா?

  தட்டி கொடுபவன் மட்டும் நண்பனல்ல தட்டி கேட்பவனும் நண்பன் தான். ஒரு எழுத்தாளன் சொல்லும் ஒரு விஷயத்தை ஒருவர் தவறென்றோ சரியென்றோ விமர்சித்தால், அந்த எழுத்தாளன் அதை ஆக்கபூர்வமாக எடுத்தால் மட்டுமே வளர முடியும். விமர்சனங்கள் அதிகமாக அதிகமாக அதற்க்கு ஏற்ப எழுத்தின் வீரியம் கூடும். ஒரு விமர்சனத்திற்கு பதில் சொல்லும் போது தான் உங்கள் எழுத்து தெளிவாகும். வகுப்பில் முதல் வர வேண்டிய மாணவன் இரண்டாவது வந்தால் கூட ஆசிரியர் கோபபடுவார். ஏனென்றால், அவருடைய எதிபார்பை அவன் பூர்த்தி செய்யவில்லை. நீங்கள் ரிபோர்டரில் எழுத போகிறீர்கள் என்று தெரிந்ததும் பதிவுலகில் எதிர்பார்ப்பு உங்கள் மீது அதிகமாகிவிட்டது. அப்படி அதிகமாக எதிபார்த்து ஏமாற்றம் அடைந்தவர்கள், அதை உங்களிடம் பகிர்ந்தால், அதை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்வது தானே சரி.... இல்லையா?

  காரணம் இல்லாமல் குற்றம் கண்டுபிடிப்பவர்களை பற்றி கவலை பட கூடாது. ஆனால் அது அவர்களது காரணம் உண்மை இல்லை என்று தெரிந்தால் மட்டுமே!

  பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும்!

  Just my opinion!

  பதிலளிநீக்கு
 21. //இவர்களிடம் உரிமை எடுத்துக் கொள்ளாமல் வேறு யாரிடம் நான் உரிமை எடுத்துக்கொள்ள முடியும்?//

  லக்கி.......
  நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!

  பதிலளிநீக்கு
 22. மெளனமான நேரம்! (அழகான பெயர்)

  விமர்சனங்கள் தவறு என்று எங்கேயுமே சொல்லவில்லை. விமர்சிப்பவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை வாசித்துவிட்டு விமர்சித்தால் நல்லது. சைபர் கிரைம் தொடரப் பொறுத்தவரை சில குட்டுகளும், நிறைய ஷொட்டுகளும் பெற்று வருகிறேன். எல்லாவற்றையுமே தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. லக்கி,

  படம் தூள்...

  அவ்ளோதாம்ப்பா..

  பதிலளிநீக்கு
 24. //ஆபாசத்தைக் கண்டிக்கும் தோழர் வினவின் புனிதப்பதிவில் கண்ட சில வாசகங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. உதாரணத்துக்கு ”நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.” தோழர்களே! இதையே தானய்யா நானும் எழுதினேன். நான் எழுதினால் ஆபாசம். நீங்கள் எழுதினால் புரட்சி புண்ணாக்கு சிந்தனைகளோ?// லக்கி ! இந்த வரிகள் உங்களுடைய பத்து (11 ?) அத்தியாயங்களையும் விளக்குவதற்காக எடுத்தாளப்பட்டவை. மேலும் வினவின் பதிவில் உங்களை விமர்சித்து விட்டு, உங்கள் பதிவினைப் படிக்காதவர்களுக்கு உதாரணமாகவே இதனைத் தந்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.இது தவறாகாது. மேலும் உங்கள் தொடர், படம் முழுவதும் பாலியல் காட்சிகளாகக் காட்டிவிட்டு பின்பு படமுடிவில் - இது தவறு என்று ஒருவரி வசனம் பேசுகின்ற தமிழ் படங்களைப் போல உள்ளது. சிகரெட் எச்சரிக்கையையே மிக பெரியதாகப் போடச் சொல்லு அரசு உத்தரவு போடும் போது, உங்கள் பதிவின் ஆபாசத்தை உதாரணம் காட்ட சில மேற்கோள்களைக் காட்டுவது (வினவு போல) தவறா ?

  பதிலளிநீக்கு
 25. புரட்சிக்கவி!

  லக்கிலுக் ஆபாசமாக எழுதுகிறான் என்று எடுத்துக்காட்ட ‘ஜோலி, கிக்' போன்ற புனித வார்த்தைகளைப் போட்டு, தோழர் வினவு ஆபாசமாகதான் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.

  சவிதாபாபி மாதிரியான ஆபாசத்தளத்தை எடுத்துச் சொல்ல நான் மட்டும் பகவத்கீதையில் இருந்தும், பைபிளிலும் இருந்துமா மேற்கோள் எடுத்தாள முடியும்?

  பதிலளிநீக்கு
 26. (மெளனமான நேரம்! )

  அப்படியே வழிமொழிகிறேன்!

  James Rajendran / Coimbatore

  பதிலளிநீக்கு
 27. லக்கி, நீங்கள் உங்கள் தொடர் முழுவதும் ஆபாசமாக எழுதி விட்டு, ஆபாசம் இப்படிதான் இருக்கின்றது, இது தவறு என்ற மாதிரி இறுதியில் ஒரு வரியில் சொல்வதற்கும், வினவு அவருடைய பதிவில் கொஞ்சமாக - (உங்கள் பதிவினுடைய) 'வீரியத்தை' புரிய வைப்பதற்காக உங்களுடைய வார்த்தைகளைதிருப்பி சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. வினவு ஊறுகாயைப் போன்று ஆபாசத்தை பதிவில் பயன்படுத்துகிறார். ஆனால் நீங்களோ நீலப்படத்திற்கு முதலில் வரும் '18 வயது வந்தவர்க்கு மட்டும்' என்பது போன்ற எச்சரிக்கை வாசகம் போன்று, தலைப்பை மட்டும் 'சைபர் கிரைம்' என்று வைத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 28. "A witty saying proves nothing-Voltaire"

  உங்கள் கருத்து சோ போன்றவர்கள் போல கருத்தியல் விவாதம் செய்யாமல் கேலி கிண்டல் செய்து அவர்களை சிறுமை படுத்தி பேச வேண்டியதை திசை திருப்பி தனி நபர் பிரச்சனை போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துவிடுவர் . உங்கள் எழுத்து திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது ஆனால்...மண்ணிக்கவும் உ.பி. அல்லாவ நீர்.....

  பதிலளிநீக்கு