July 25, 2009

லக் - மரணவிளையாட்டு!

ஒரிஜினல்!

டூப்ளிகேட்!

பிரெஞ்ச் படமான ட்ஸாமெடியை (Tzameti) யாருக்கும் தெரியாமல் நைசாக இயக்குனர் சோஹம்ஷா உருவிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஹாலிவுட் மொக்கையான டெத்ரேஸ் (Death race 2008) படத்தின் பாதிப்பும் நிறைய உண்டு இந்த லக்கில்.

லக்கியான ஆட்களைப் பற்றிய படமிது. சஞ்சய்தத் ஒரு லக்கியான ஆள். கரப்பான் பூச்சி மாதிரி. காலில் போட்டு நசுக்கினாலும் ஏதோ லக்கால் உயிர்பிழைத்துக் கொள்வார். உலகம் முழுவதுமிருந்து அவரை மாதிரி லக்கிகளை பிடித்து வந்து யாருக்கு அதிர்ஷ்டம் அதிகமென்று பெட் கட்டி விளையாடுகிறார். இண்டர்நெட்டில் கோடி கோடியாக பெட் கட்டுகிறார்கள். சஞ்சய்தத் மொழியில் சொன்னால் Its purely business. விளையாட்டு என்றால் சாதாரண விளையாட்டு இல்லை. தோற்றவர்களுக்கு உடலில் உயிர் இருக்காது. மரணவிளையாட்டு. செத்து செத்து விளையாடுவதுதான் இந்தப் படமே.

கலந்துகொள்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. எல்லோருக்கும் உயிரைவிட அதிகபட்சத் தேவையாக இருப்பது பணம் என்பது மட்டுமே ஒற்றுமை. தொடர்ந்து நடக்கும் தொடர் மரண விளையாட்டுகளும், மில்லியன் மில்லியனாக குவியும் பணமும்தான் மீதி கதை. ஒவ்வொரு காட்சியும், விளையாட்டும் இதயத்தை பலமாக பதம் பார்க்கும் வேகத்தோடு படமாக்கப்பட்டிருக்கிறது. நாடோடிகள் ‘சம்போ சிவ சம்போ’ ரேஞ்சில் ஹை-டெம்போவுக்கு ஒரு அதிரடி தீம் பாடலும் உண்டு.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அறிமுகமாகும் படம் என்பதால் தமிழகத்திலும் எதிர்ப்பார்ப்பு அதிகம். ஸ்ருதி ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் கவர்ச்சி காட்டுகிறார். நீச்சல்குளத்தில் இருந்து எழுந்துவரும் காட்சியில் விண்ணதிர விசில் பறக்கிறது. அப்பாவை மாதிரியே அச்சு அசலாக முகம், குறிப்பாக அந்த முண்டக்கண்கள். தாராளமாக பாஸ் மார்க் போடலாம். ஹீரோ இம்ரான்கான் அபிஷேக் பாதி, ஹ்ருத்திக் பாதி கலந்து செய்த கலவை.

துப்பாக்கியில் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொள்வது, பாராசூட்டில் குதிப்பது, சுறாமீன்களிடம் கடலில் தப்பிப்பது என்று விதம்விதமான விளையாட்டுகளை காட்டி எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்து விடுகிறார் இயக்குனர். ஆனால் க்ளைமேக்ஸில் அரதப்பழசான ட்ரெயின் விளையாட்டு காட்டுவது கொடுமையிலும் கொடுமை. மெஷின் கன் வைத்து ஹீரோவை பத்து அடி தூரத்தில் இருந்து சுட்டால் கூட ஒரு குண்டு கூட அவர் மீது படுவதில்லை. லக்கோ லக்! மொத்தமாக வெடித்துச் சிதறிய பெட்டியில் இருந்து மேஜர் மிதுன் சக்ரபோர்த்தி எழுந்து வருவதன் மூலமாக டன் கணக்கில் காதில் பூ சுற்றுகிறார்கள்.

கேமிரா, ஸ்டண்ட், பிண்ணனி இசை, தடதடவென்று ஓடும் திரைக்கதை என்று பல தளங்களிலும் தரம் அபாரம். படம் நல்ல டைம் பாஸ். தயாரிப்பாளருக்கு லக் அதிகம். பணம் வானத்தைப் பிளந்துகொண்டு கொட்டோ கொட்டுவென்று கொட்டப்போகிறது!

லக் - இரண்டரை மணி நேர பக்.. பக்..

9 comments:

 1. நம்பி போலாமா சார்..................பயமா இருக்கு..................

  ReplyDelete
 2. கடைசி வரியை படித்துவிட்டு முதலில் படிக்க ஆரம்பித்தேன்

  ReplyDelete
 3. லாஜிக் பாக்கலைனா ஒகேவா?

  ReplyDelete
 4. யாருக்கு யாரோ4:21 PM, July 25, 2009

  பாஸ் அது Tzameti இல்ல

  13tzameti !

  ReplyDelete
 5. எல்லாம் எதோ .....?

  ReplyDelete
 6. ஐயா,

  நீங்க

  The Condemned (http://www.imdb.com/title/tt0443473/)

  Wanted (http://www.imdb.com/title/tt0493464/)

  இதெல்லாம், பார்த்தது இல்லயா?

  Wanted ஓட இறுதிக் காட்சி தான் இதுல First half End.

  சுத்தமா எங்கேயும் Logic இருக்காது.

  அது Hindi சினாமாவோட தலைவிதி.

  ReplyDelete
 7. என்ன லக்கி! ஸ்ருதியை வுட்டுட்டு இந்தத் தடியன் படங்களை எல்லாம் போட்டிருக்கீங்க!

  ReplyDelete
 8. இதே கதை அம்சத்தில் உலகில் எல்லா நாடுகளிலும் படம் வந்து விட்டது!

  இந்தியா தான் கடைசி போல!

  ReplyDelete
 9. தல, படம் அப்பீட்டு.. செம ஃப்ளாப்

  ReplyDelete