31 மே, 2011

நமீதா இட்லி ரெடி!

நேற்று ராமசேரி இட்லி பற்றி எழுதியதை வாசித்த நிறைய நண்பர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ’குஷ்பு இட்லி’ தயாரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பேசினார்கள். குஷ்பு இட்லி என்பது வேறொன்றுமல்ல. கொஞ்சம் புசுபுசுவென்று பெரிய சைஸில் உருவாக்கப்பட்ட இட்லி, அவ்ளோதான். நம் லோக்கல் ஆட்களின் Branding அறிவே அறிவு. தற்போது வடபழனியில் ‘சிம்ரன் ஆப்பக்கடை’ கூட சக்கைப்போடு போடுவதும் கூட வரலாற்றில் பதியப்பட வேண்டிய நிகழ்வு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தின் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக பணிபுரிந்து வந்தேன். அவர்களது சினிமா தொடர்பான இணையத்தள பணிகளுக்கு தொடர்ச்சியாக கண்டெண்ட் அளித்து வருவது என்னுடைய வேலை. ‘அழகிய தமிழ் மகன்’ ரிலீஸ் ஆகும் நேரத்தில், மக்கள் தொடர்புக்காக ஒரு ‘குபீர்’ மேட்டரை களத்தில் இறக்கினேன். அது ‘நமீதா இட்லி’. விடிகாலை கற்பனையில் உதித்த ‘நமீதா இட்லி’ நிஜத்தில் Branding செய்து விற்கப்பட்டதா என்பது இன்றுவரை தெரியாது. யாராவது நமீதா பெயரில் இட்லிக்கடை தொடங்க விரும்பினால், என்னிடம் காப்பிரைட் உரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நமீதாவிடம் மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது.

அந்த மேட்டர் எக்ஸ்க்ளூஸிவ்வாக உங்களுக்காக...பொருட்களை விற்பதற்காக திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பெயரில் பிராண்டிங் செய்யப்படுவது உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பாக நதியா கம்மல், நதியா வளையல் என்று கூறி கம்மல், வளையல் வகையறாக்களை விற்றார்கள். அதன்பின்னர் கவுதமி தாவணி, கவுதமி மிடி, கவுதமி ஸ்டப்ஸ் என்று சொல்லி விற்கப்பட்டது. பிரபலமான படங்களின் பெயர்களில் துணிவகைகள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய கடைகளில் கூட வழக்கமானதுதான்.

குஷ்பு தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோது அவரது பெயர் சொல்லி பல பொருட்கள் விற்கப்பட்டது. முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டலில் 'குஷ்பு இட்லி' என்று அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் இட்லிக்கடைகளில் 'குஷ்பு இட்லி' என்று சொல்லப்படுமளவுக்கு இட்லி பிராண்டிங் ஆனது.

அதுபோலவே இப்போது நமீதா மிக பிரபலமாக இருக்கிறார். நமீதா இடம்பெறுவதே படங்களில் இப்போதெல்லாம் கூடுதல் தகுதியாக இருக்கிறது. நமீதா சிறு வேடங்களில் தோன்றும் படங்களை கூட அவரது ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே ஒரு பாடல்காட்சியில் அவர் இடம்பெற்றாலும் அப்படங்களை பலமுறை அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

ஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலும் MEALS READY என்றோ, TIFFEN READY என்றோ முகப்பில் போர்டு வைக்கப்பட்டிருக்கும். சில நாட்களாக சென்னையின் கையேந்தி பவன்களில் “நமீதா இட்லி ரெடி” என்று போர்டு வைக்கப்பட்டு வருகிறது. நமீதா இட்லி என்றதுமே இட்லியின் சைஸ் பிரம்மாண்டமாக இருக்கும் என்று நினைத்து நாக்கில் யாருக்கும் நீர் ஊற வேண்டாம். அதே பழைய சிம்ரன் சைஸ் இட்லி தானாம்.

நமீதா ட்ரெண்டினை நன்கு புரிந்துகொண்ட சென்னையின் கையேந்திபவன் காரர்கள் சிலர் நூதனமான முறையில் “நமீதா இட்லி ரெடி” போர்டு மாட்டி விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதே பழைய இட்லி, காரச்சட்டினி, தேங்காய் சட்டினி தான். ஆனாலும் சாதாரண இட்லிக்கு கூட நமீதாவின் நாமகரணம் சூட்டப்படும் கடைகளில் எல்லாம் விற்பனை இரண்டு மடங்காக இருக்கிறதாம். மிக விரைவில் தமிழ்நாடெங்கும் இட்லி நமீதா மயமாகும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்பு : மேலே படத்தில் நமீதா மட்டும் தானிருக்கிறார். இட்லி இல்லை. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் வெள்ளையாக காணப்படும் எல்லாமே இட்லி அல்ல.

9 கருத்துகள்:

 1. அப்போ....... ஷகிலா இட்லி எப்போ வந்துது .....????  ஆவலுடன்.....

  லவ்டேல் மேடி ......

  பதிலளிநீக்கு
 2. நமீதா வடை பற்றி ஏதேனும் சுவையான தகவல் உண்டா ?

  --வடை பிரியன்

  பதிலளிநீக்கு
 3. நமீதாவின் ஆப்பம் விற்பனைக்கு வந்தால் உண்ண ஆவலோடு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. //அதுபோலவே இப்போது நமீதா மிக பிரபலமாக இருக்கிறார். நமீதா இடம்பெறுவதே படங்களில் இப்போதெல்லாம் கூடுதல் தகுதியாக இருக்கிறது. நமீதா சிறு வேடங்களில் தோன்றும் படங்களை கூட அவரது ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே ஒரு பாடல்காட்சியில் அவர் இடம்பெற்றாலும் அப்படங்களை பலமுறை அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள்.///


  அண்ணே ஏன் இப்பிடி பொய் சொல்றீங்க?? :DDD உங்களுக்கு இருக்கிற நமீதா பக்திய எங்க மேல திணிக்கலாமா? :D

  பதிலளிநீக்கு
 5. அண்ணா இதெல்லாம் என்ன பதிவு?

  பதிலளிநீக்கு
 6. நமீதா (பால்)பாயாசம் எதாவது மார்கெட்டுக்கு வருதா.......!? தலைவரே ....

  குறிப்பு : வெளுத்ததெல்லாம் பால் இல்ல. அதுமாதிரி பாயாசம் மாதிரி இருக்கறது எல்லாம் பாயாசம் இல்ல.

  பதிலளிநீக்கு
 7. Here after i will not come to your blog b'cas lot of erotic stories are available in ' TAMIL KAMAM' like this one

  பதிலளிநீக்கு
 8. //குறிப்பு : மேலே படத்தில் நமீதா மட்டும் தானிருக்கிறார். இட்லி இல்லை. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் வெள்ளையாக காணப்படும் எல்லாமே இட்லி அல்ல.//

  மேலே காணப்படும் நமீதா படத்தில் இட்லி இல்லை என்று நீங்கள் கூறுவது உங்கள் அப்பாவித்தனத்தைக் காட்டுகிறது!! இட்லியின் மேல் வெள்ளைத் துணி போர்த்திதான் வேகவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்க!

  பதிலளிநீக்கு
 9. http://pstlpost.blogspot.com/2008/01/blog-post_8957.html

  என்ன கொடுமை சரவணன் இது?

  பதிலளிநீக்கு