18 மே, 2011

ஹீரோ!

இந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!


எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.

நேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.

தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

சென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.

அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.

தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.

இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

41 கருத்துகள்:

 1. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!

  பதிலளிநீக்கு
 2. //குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன்.//

  அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சூழல் அன்று இல்லை.

  //வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். //

  அந்த முகமும் உடலும் அவருடையது அல்ல என்பது அந்த ஜோடனைகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சேறு பூசப்பட்ட புகைப்படங்களில் இருந்து நன்றாகத் தெளிவாகியது.

  பதிலளிநீக்கு
 3. வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

  well said

  பதிலளிநீக்கு
 4. மதுரையில் வருடா வருடம் என் நண்பர்கள் நடத்தும் மாரியம்மன் திருவிழாவில், நன்கொடை அளித்த நண்பர்களை மேடை ஏற்றி "மாணிக்க மாலை" (அதாங்க துண்டு!) அளித்து மரியாதையை செய்வது வழக்கம் ( இல்லேனா வெட்டு குத்து ஆகி போகும்). நன்கொடை அளித்த ஒரு நண்பர் பெயர் பிரபாகரன். பால் வியாபாரம் செய்பவர். அவரை மேடை ஏற்றும் போது ஆத்தா குமார் மைக்கில் "அடுத்து எங்கள் அண்ணன் பிரபாகரனுக்கு இந்த மாணிக்க மலையை அணிவிபவர்..." என்ற போது, மதுரையே அதிர்ந்தது. நம்மாளுக்கும் ஒரே சிரிப்பு தான். ஏதோ அவருக்கு தான் இந்த கை தட்டல் என்று. அந்த பெயர் ஒரு மந்திரம்.

  பதிலளிநீக்கு
 5. மாவீரனுக்கு வாழ்த்து சொல்வதா அல்லது அஞ்சலி செலுத்துவதா என காலவெளி சதுரங்கம் ஆடுகிறது .. :-((

  சென்ற ஆண்டு இதேநாளில் எழுதிய அந்தப் பதிவினை
  எங்கள் பின்னூட்டங்களுடன் மீண்டும் பதிவிட்டால் ஆறுதலாக இருக்கும்,
  எங்கள் உணர்ச்சிக் குவியல்களை மீண்டும் முகர்ந்து கொள்ள.


  (நீங்கள் உங்கள் பழைய பதிவுகளை ஏனோ நீக்கி விட்டீர்!! )

  பதிலளிநீக்கு
 6. உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் , ஒவ்வொரு வரியிலும் நான் உடன்படுகிறேன்....

  அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.......

  நான் எப்படி நினைத்தேனோ அதை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள் .........மிக்க நன்றி யுவா.

  எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை...

  ஆனால் யுவகிருஷ்ணா வை 18 may 2010 ல் இருந்து பிடிக்கிறது ..........

  பதிலளிநீக்கு
 7. தமிழ்தாயின் தலைமகன், தமிழனை தலைநிமிரச் செய்த வீரமகன் எங்கள் அண்ணன் பிரபாகரன் நீடூடி வாழ்க...

  வதந்திகள் உனை சாகடிக்கலாம் - ஆனால்
  வரலாறு உனை வாழவைக்கும்...

  பதிலளிநீக்கு
 8. யுவகிருஷ்ணாவுக்கு ஏன் இவ்ளோ சப்போர்ட்னா. அவர் பிரபாகரன் தம்பிங்கிறதுனால தான். அதனால் தலைவர் பற்றிய அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம்.

  தலைவர் இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 9. நம் தலைவர் இருக்கிறார்.ஈழம் மலரும்.

  பதிலளிநீக்கு
 10. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்.

  அப்படியே லக்கிக்கும் ஒரு சபாஷ்

  பதிலளிநீக்கு
 11. பிரபாகரனை பற்றிய என் சிந்தனைகளின் அப்பட்டமான பிரதிபலிப்பு உங்கள் பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நம்பிக்கை வீண் போகாது
  யுவகிருஷ்ணா சார்
  உண்மை ஒருநாள் நிச்சயம் வெளி வரும்
  visit my blog
  www.vaalpaiyyan.blogspot.com

  பதிலளிநீக்கு
 13. புலிகள் இல்லாத ஈழத்தில் தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பது இந்த ஓராண்டில் நன்கு விளங்குகிறது..... முடக்கப்பட்ட மக்களின் வலிக்கு கூட மருந்திடாத சிங்களமா உரிமைகளைத்தரப்போகிறது??? சிங்கள அரசின் இந்திய கைக்கூலி பத்திரிக்கைகளும் ,அரசியல் வாதிகளும் இன்றுவரை புலிகளை குறை சொல்லியே .... சிங்களத்தை காப்பாற்றி வருகின்றனர்!

  பதிலளிநீக்கு
 14. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இனத்திற்காக தடம் மாறாமல் போராடிய உலகின் மிக சிறந்த போராளி... தமிழ் இனத்தின் வீரத்தை 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகிற்கு பறைசாற்றியவன் பிரபாகரன்.

  என்னை போன்றவர்களுக்கு அண்ணனாகவே அறியப்பட்டார்.

  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்க தலைவர் எங்கே ஒளிந்திருக்கிறார் என பார்ப்பன நண்பர்கள் வெறுபேற்றிய போதெல்லாம்... பிரபாகரன் என் அண்ணன், ஒளிய வேண்டிய அவசியம் எல்லாம், வந்து என் வீட்டில் பார்க்கலாமே பதில் அளித்ததும் உண்டு...

  நாமெல்லாம் 1991 மே 21 இல் ஒரு நவீன நீரோ மன்னன் பிண்டமான போது கூட... அண்ணன் பிரபாகரனை தூக்கி கொண்டாடியவர்களாவே இருப்போம்...

  பதிலளிநீக்கு
 15. மிக அருமையான பதிவு . நன்றி

  பதிலளிநீக்கு
 16. வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!//
  ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!
  Yes YEs YES

  பதிலளிநீக்கு
 17. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!

  பதிலளிநீக்கு
 18. நமது ஹீரோ விற்கு எனது அணில் சேவை..

  http://myheartmymind.blogspot.com/2009/05/blog-post.html

  பதிலளிநீக்கு
 19. தலைவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் இருக்கிறோம்.... நல்ல பதிவு யுவா... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. குழந்தை பருவ பிம்பங்களை இன்னும் பிடித்துக்கொண்டிருக்கும் வளர்ந்த குழந்தை யுவா வாழ்க!

  பதிலளிநீக்கு
 21. //ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன்//

  அருமை

  பதிலளிநீக்கு
 22. நன்றி யுவகிருஷ்ணா... அருமையான மனதைத் தொடும் பதிவு.

  பதிலளிநீக்கு
 23. இதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!

  பதிலளிநீக்கு
 24. I wanted to wear a black shirt to office today. I just realised that I had forgotten that today is "May 18", and was depressed / angry about my absent mindedness.

  Accidentally, I saw this article minutes after being conscious of my absent mindedness. I felt a sense of relief. Thanks for sharing this article again.

  I request all friends to always remember May 18 - May Day of Thamizhans.

  பதிலளிநீக்கு
 25. தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப் புதல்வனுக்கு வீர வணக்கம்.

  கட்சி சார்பற்று, திமுக செய்த துரோகத்தையும் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 26. இனி வரும் காலங்களிலாவது பிரபாகரனுக்குக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, கடமைகளை செய்வோம்.

  பதிலளிநீக்கு
 27. இலங்கையில் நாம் இப்போ தான் எந்தப்பயமும் இல்லாமல் நடமாட முடியுது.இவன் செத்தது எமக்கு பெரிய சந்தோஷம்..அப்பாவி மக்களின் பிணத்தின் மேல் தலைவர் பதவியை வைத்து வாழ்ந்த இவன் வீரனல்ல கோழை………..இவன் வைத்த வெடி குண்டில் எத்தனை குடும்பங்கள் நாசமாகி போhனது என்று இங்கு வந்து பாருங்கள்………..

  பதிலளிநீக்கு
 28. Lucky,
  We are expecting an aritcle about dmk's defeat and admk's victory. If you are a true journalist, you should have writen by this time. Before the couting you had written about dmk's vicotry now, you are trying avoid by writing about that.
  Expecting your article soon.

  பதிலளிநீக்கு
 29. Instead of writing something appropriate to his post, I dont know why people are expecting Lucky to comment about the defeat of DMK. Potitically, people are paying too much importance to Luckys verdict rather than states. Anybody has thier rights to express thier interest , passion on whatever they like. So i expect people not to expect a statement from Lucky everytime.

  பதிலளிநீக்கு
 30. ஏகவசனத்தில் அப்படிதாண்டா நாங்க செலவு செய்வோம் என்று செம்மொழி மாநாட்டிற்கு ஜால்ரா போட்டவர் எப்பொழுதும் இணையத்தில் திமுகவின் கொபசெ அளவிற்கு உதார்விட்டவர்.. ஒரு நண்பர் நீங்கள் பத்திரிக்கைதுறையில் இருக்கிறீர்கள் இப்படி வெளிப்படையாக திமுகவை ஆதரிக்க கூடாது என்று சைதாப்பேட்டை கூட்டத்தை பற்றி எழுதிய பொழுது சொன்ன பொழுது இது என் சொந்த தளம் என்று சொன்னவர் இப்பொழுது தோல்வியை பற்றி கருத்து சொல்லவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு...

  பதிலளிநீக்கு
 31. லக்கி தனது ஆசையை விருப்பத்தை எழுதினார்.

  நன்றி கெட்ட ஜனங்கள்...

  இதற்குப் போய் விளக்கம் வேறு தர வரவேண்டுமா...

  இப்பவே ஆரம்பித்து விட்டனர். பார்க்கத்தானே போகிறோம்.

  பதிலளிநீக்கு
 32. தனது கொள்கையை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் ... சுதந்திர ஈழத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒப்பற்ற மனிதன்... தமிழர்கள் என்ற உணர்வுள்ள அனைவருக்கும் சகோதரன்! பிரபாகரன் இல்லா தமிழீழம் தாய்ப்பறவை இல்லா குருவிக்குஞ்சுகளின் கூடு! தாய்ப்பறவை குஞ்சுகள் மடியும் முன் கூடு திரும்ப வேண்டும்............

  பதிலளிநீக்கு
 33. தனது மகனை தியாகம் செய்த பிரபாகரன் எங்கே? தனது மனுக்காக இனம் அழிந்து கொண்டு இருக்கும்போது பதவிக்காக அலைந்த கருணாநிதி எங்கே? (இத்க்கேல்லாம் சேத்து மொத்தமா மு.க வாங்கினாரு ஆப்பு)... பிரபாகரன் மறைந்தும்(?) வாழ்கிறார். ஆனால் கருணாநிதி இருந்தும் பிணம் தான். இருவரது போட்டோவையும் அருகருகே வைத்து வணங்கினால் உங்களைப் போல சந்தர்ப்பவாதி வேறு எவரும் இல்லை. நீங்கள் கருணாநிதி ஜால்ராவாக இருக்கலாம். ஆனால் போகிறபோக்கில் பிரபாகரனுக்கு இணையாக (அது போட்டோ தொங்கவிடுவதாக இருந்தாலும் சரி) கருணாநிதியை நிலை நிறுத்தும் உங்கள் வக்கிரமான எண்ணத்தை கைவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 34. தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை.

  இப்படித்தான் தி மு க தலைவர்களையும் கண்மூடித்தனமாக நேசிக்கிரிர்கள்...

  பதிலளிநீக்கு