August 25, 2011

வெங்காயம்

பேய்மழை பொழிந்துக் கொண்டிருந்த நேற்று மாலை, முழுக்க நனைந்தும் முக்காடு போட்டுக் கொண்டு சென்னை அண்ணா திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருக்கலாம். அவர்களில் சிலர் மழைக்கு ஒதுங்கவே டிக்கெட் எடுத்துக்கொண்டு அரங்குக்குள் வந்தார்களோ என்றுகூட சந்தேகம்.

மாஸ் நடிகர்கள், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எந்த எதிர்ப்பார்ப்பையும் கிளறாத படம். ஆனால் படம் முடிந்த நொடியில் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் நிஜமான கவுரவம்.

இப்படத்தின் குழுவினருக்கு தொழில்நேர்த்தி சுத்தமாக இல்லை. ஏனோ தானோவென்றுதான் படமெடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. பல நடிகர்களின் நடிப்பு சுமாருக்கும் கீழே. இசை, கேமிரா, எடிட்டிங், கிராபிக்ஸ் என்று எல்லாத் துறையிலும் படுமோசமான வேலை. ஆனால் அத்தனையையும் அடித்து நொறுக்கி, படம் பார்ப்பவர்களை கவர்கிறது படத்தின் உள்ளடக்கம். இப்படியொரு படத்தை எடுத்தால், எந்த தயாரிப்பாளரும் அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வீட்டுப்படி ஏறிவரமாட்டார் என்று தெரிந்தும், தைரியமாக எடுத்திருக்கும் இயக்குனர் சங்ககிரி ராச்குமாரே ஒட்டுமொத்த பாராட்டுகளுக்கும் தகுதியானவர்.

இம்மாதிரியான பகுத்தறிவு முயற்சிகளுக்கு எப்போதும் தாமாகவே முன்வந்து ஆதரவு வழங்கும் இனமான நடிகர் சத்யராஜையும் இந்நேரத்தில் பாராட்டுகிறோம்.

ஜோதிடம் என்கிற புரட்டு வியாபாரத்தை புரட்டிப் போட்டு எடுத்திருக்கிறார் இயக்குனர். ஜோதிடம் குறித்த அறிவியல்ரீதியான, சமூகரீதியான நியாயமான கேள்விகளுக்கு இதுவரை எந்தவொரு ஏற்றுக்கொள்ளத்தக்க பதிலும் ஆன்மீக அன்பர்கள் தம் தரப்பில் இருந்து தந்ததில்லை. ஜோதிடத்தை விஞ்ஞானம் என்று கதை கட்டி அப்பாவி மக்களை ஏமாற்றித் திரியும் ஆன்மீக பயங்கரவாதக் கூட்டத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை, அவலங்களை, சுரண்டல்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது இப்படம். “தேவடியாப் பசங்களா. இனிமேலாவது திருந்துங்கடா” என்று பத்து வயது பெண் இறுதிக்காட்சியில் தொண்டை வலிக்க கத்துவது ஏமாற்றி வயிறு வளர்க்கும் ஊளைச்சதைக் கும்பலை பார்த்து மட்டுமல்ல. மூளையை அடகுவைத்து.. வாழ்வை, குடும்பத்தை பணயம் வைக்கும் சாமானிய தமிழனையும் பார்த்துதான்.

ஜன்லோக்பால் மட்டுமே தேசமக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பல்களுக்கு, ‘மூடநம்பிக்கை தானய்யா இந்த சமூகத்தின் நிஜமான பிரச்சினை’ என்று ஆணியடித்தது போல அழுத்தம் திருத்தமாக படமெடுத்திருக்கும் படக்குழுவினரை வணங்குகிறோம்.

நாத்திகக் கருத்துகளை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, கடவுளை உடனே தூக்கியெறிந்துவிட வேண்டும் எதிர்ப்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் மூடநம்பிக்கைகளில் உழன்று முட்டாளாக வாழ்க்கையைத் தொலைக்காமல் இருந்தால் கூட போதுமே என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் தற்போதைய ஆதங்கம்.

திராவிட இயக்கம் கலைத்துறையில் ஆரம்பத்தில் செய்து, பிற்பாடு செய்ய மறந்துவிட்ட கடமைகளை மிகச்சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறது இந்த வெங்காயம்.

நீங்கள் நாத்திகரோ, ஆத்திகரோ.. யாராக இருந்தாலும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டிய படம் இது.

15 பின்னூட்டங்கள்:

புகழன் said...

மிக அழகிய விமர்சனம்

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

சுருக்கென அமைந்த விமர்ச்சனம். நானும் படம் பார்க்க வேண்டும்.

குடிமகன் said...

பாத்துட வேண்டியதுதான்!!

கோவை நேரம் said...

பார்த்துடுவோம்...

ஒரு வாசகன் said...

ஒரே பிரச்சனை என்னவெனில் இம்மாதிரிப் படங்கள் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆவதில்லை. இன்னம் ஆரண்ய காண்டமே பார்க்ககிடைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்

basheer said...

மூட நம்பிக்கைகளை சாட வரும் இது போன்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில்,
டிவி சீரியலை விட மோசமான தரத்தில் வெளிவருகிறது.
மூட நம்பிக்கைகளை பரப்பி,மக்களை முட்டாள்களாக்கும் படங்கள்
கோடிக்கணக்கான பட்ஜெட்டில்,பிரம்மாண்ட கிராபிக்ஸ்களின்
துணையோடு வெளிவந்து வசூலை வாரி குவிக்கிறது.
வெறுப்பேற்றும் நகைமுரண்.

Anonymous said...

Boss...if you are not interested/trust in JAN LOKPAL...its your wish..how ever you dont have the rights to plunge Mr.Hazare and his team......

Philosophy Prabhakaran said...

அண்ணே... இந்த விமர்சனத்தை முன்னரே எழுதியிருந்தால் நான் படம் பார்த்திருப்பேன்... நாளைக்கு தியேட்டரில் படம் ஓடுகிறதோ இல்லையோ...?

Senthil said...

great!

senthil.doha

Ravikumar Tirupur said...

இப்போதுதான் உங்கள் தளத்திற்க்கு வருகிறேன். விமர்சனம் சிம்ப்ளி பெஸ்ட். படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் வலுவாகியிருக்கிறது.இப்போதுதான் உங்கள் தளத்திற்க்கு வருகிறேன். விமர்சனம் சிம்ப்ளி பெஸ்ட். படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் வலுவாகியிருக்கிறது.

Anonymous said...

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். விஜயகாந்த் கல்யாண மண்டபம் எதிரில், ஆக்சிஸ் பேங்க் ATM அருகில் உள்ள கட்டத்தில் மூன்று பெண் வழக்கரிஜர்கள் உண்ணா நிலைப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.

தோழர் கிருஷ்ணசாமி MLA அவர்கள் அங்கு வந்து பார்த்து, பேசி விட்டு சென்றார்கள். பேரறிவாளனின் தாயார், அற்புதம் அம்மா அவர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நூற்றுக்கும் மேலான நமது உணர்வாளர்கள் அங்கு உள்ளார்கள். நாளை காலை பரப்புரை ஆரம்பம் ஆகும். ஆயிரகணக்கான தமிழர்கள் அங்கு வரவேண்டும்.

பல தோழர்கள் இன்னமும் அங்கு இருக்கிறார்கள். லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவாளர்களுக்கு தகவலை பரப்புங்கள்.
லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

jaisankar jaganathan said...

படம் உங்களுக்கு பிடிச்சா போதுமா? விமர்சனம் எங்க?

Anonymous said...

//ஜன்லோக்பால் மட்டுமே தேசமக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பல்களுக்கு, ‘மூடநம்பிக்கை தானய்யா இந்த சமூகத்தின் நிஜமான பிரச்சினை’ என்று ஆணியடித்தது போல அழுத்தம் திருத்தமாக படமெடுத்திருக்கும் படக்குழுவினரை வணங்குகிறோம்.//

உங்களுக்கு ஏன் வலிக்கிறது.

ஊழல் கட்சிகளின் முன்னோடியான தி.மு.க. வில் இருப்பதால் ஊழலுக்கு எதிராக போராடுவது வலிக்கிறதோ.


உங்கள் மூட நம்பிக்கைக்கான கருத்து நல்லது.

கடவுள் உட்பட எல்லா மூடநம்பிக்கை பிரட்சினைகளையும் தாங்கள் தீர்க்கலாமே (ஜன் லோக்பால் போல்) .

சின்னதூரல் said...

சிறந்த விமர்சகர்.....

Anonymous said...

ithu pondrey nalla padangalai tamilagathil yaarum paarkkey virumbuvathillai endru ninaikum bothu varutham irukirathu...vaagai soodavah endrey padamum inthey listil seirkalam...aruva gun vididu arivai thidungey pa ithey mathiri padam paartavathu