தீபாவளி சினிமா கலெக்‌ஷன்!

November 9, 2009


இந்த வருடமும் சினிமாவுலகத்துக்கு தீபாவளி சரியாக களைகட்டவில்லை. ஆதவன் வெற்றிக்காக வேட்டைக்காரன் தியாகம் செய்யப்பட்டதாக சொன்னாலும், வேட்டைக்காரன் வேறு சில காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவுக்கு மூன்று சீசன் வசூலுக்கு மிக முக்கியமானது. தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லப்பட்ட ஏப்ரல் 14. தீபாவளிக்கு போனஸ் புரளும், எனவே வசூலை அள்ளலாம். பொங்கலைப் பொறுத்தவரையும் ஓரளவுக்கு கிராமப்புறங்களில் பணம் ஃப்ளோட் ஆகிக் கொண்டிருக்கும். ஏப்ரலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்டூடண்ட்ஸ் கலெக்‌ஷன் அள்ளலாம்.

உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக புதிய படங்கள் ஒளிபரப்பப்படுவதாலும், இப்போதெல்லாம் தீபாவளிக்கு பலருக்கும் போனஸ் நஹி என்பதாலோ என்னவோ, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தீபாவளி ரிலீஸில் முன்புபோல ஆர்வம் காட்டுவதில்லை. 1987 தீபாவளியில் பத்தொன்பது படங்கள் வந்ததே எனக்குத் தெரிந்து ரெக்கார்ட் ப்ரேக். 90களின் ஆரம்பத்தில் கூட குறைந்தபட்சம் பத்து படங்களாவது வெளியாகும்.

இம்முறை வெளியான படங்கள் மூன்றே மூன்று. ஆதவன், பேராண்மை, ஜெகன்மோகிணி.

ஆதவன் வெற்றிக்கு காரணம் சொல்லவே தேவையில்லை. சூர்யா, நயன்தாரா, வடிவேல், கே.எஸ்.ரவிக்குமார். முதல் இரண்டு வாரத்தில் சென்னையில் மட்டுமே மூன்று கோடியை வசூல் தாண்டிவிட்டது. எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிட் படமான ஈரம், ஏழு வாரங்களில் வசூலித்த தொகை இது. பொதுவான பார்வையில் படம் சுமார் என்றாலும், குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு மக்கள் முற்றுகையிடுவதின் காரணம் என்னவென்றே தெரியவில்லை. புதுப்பிக்கப்பட்ட தேவி காம்ப்ளக்ஸில் வாரநாட்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகிறது.

பேராண்மை - பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு புஸ்ஸான படம். ஆதவனின் கலெக்‌ஷனில் பாதியை எட்டுவதற்கே, இப்படம் திணறிக் கொண்டிருக்கிறது. மூன்று தீபாவளிக்கு முன்பாக ‘ஈ’ கொடுத்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜனநாதன் சறுக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியை சீட்டில் நெளியாமல் பார்ப்பவர்களுக்கு ‘சிறந்த திரைப்பட ரசிகர்’ விருது கொடுக்கலாம். இரண்டாம் பாதி அட்டகாசமாக ஆக்‌ஷன் பேக். முதல்பாதியை தட்டிவிட்டு, இரண்டாம் பாதியையே முழுநீளத்துக்கும் இழுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ? எப்படிப் பார்த்தாலும் ஜெயம் ரவிக்கு மட்டும் இப்படம் நல்ல கேரியர் ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது.

ஜெகன்மோகிணி - ரொம்ப ரொம்ப மொக்கையான படம். நமீதாவை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்தப் படம் கூட இரண்டு வாரங்களில் சென்னையில் மட்டும் அரை கோடியை குவித்தது வினியோகஸ்தர்களுக்கே ஆச்சரியமளிக்கக் கூடிய விஷயமாக இருந்திருக்கும்.

தீபாவளி முடிந்து இருவாரங்கள் கழித்து வேட்டைக்காரனை இறக்குவதற்கு முன்பாக எவ்வளவு ஆழம் என்று கால்விட்டுப் பார்க்கும் விதமாக ‘கண்டேன் காதலை’யை நைசாக சன் வெளியிட்டது. முதல் மூன்று நாட்களில் மட்டுமே சென்னையில் கால் கோடியை வசூல் எட்டிப் பிடித்திருக்கிறது. ‘சன்’னின் வீரியம் பிரமிப்பு தருகிறது. அனேகமாக வேட்டைக்காரன் முதல் நாள் வசூலே ஐந்து கோடியை எட்டினாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.

9 பின்னூட்டங்கள்:

Cable Sankar 4:27 PM, November 09, 2009  

/தேவி காம்ப்ளக்ஸில் வாரநாட்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகிறது.//

தேவியில் முதல் வாரத்துக்கு பிறகு சின்ன தியேட்டரான தேவிபாலாவிலோ, கலாவிலோ போட்டாச்சு.. அது மட்டுமில்லாமல் படம் வசூலில் சூப்பர் ஹிட் தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இது கொஞ்சம் எக்ஸாசரேஷன் என்பது என் கருத்து.:)

யுவகிருஷ்ணா 4:39 PM, November 09, 2009  

கேபிள் சார்!

உங்களுக்கு தெரியாதது இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சதை சொல்லித்தானே ஆகணும்?

படம் தேவி காம்ப்ளக்ஸில் தேவி மற்றும் தேவிகலா என்று இரு திரைகளில் திரையிடப்பட்டது. தேவியின் சைஸ் என்னவென்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

நான்கு நாட்களுக்கு முன்னால் நான் வாரநாளில் மேட்னி ஷோ படம் பார்க்கப் போனபோது தேவியில் ஃபுல். தேவிகலாவில் மூன்றாவது வரிசையில் டிக்கெட் கிடைத்தது. கொஞ்சம் பெரிய சைஸ் டிவியில் படம் பார்த்தேன். இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்க்காக தேவியில் ஆதவனை தூக்கியிருக்கிறார்கள்.

சினிப்ளக்ஸ்களில் ஓபனிங்குக்கு இரண்டு, மூன்று திரைகளில் திரையிட்டுவிட்டு. சில நாட்களில் தூக்குவது புதிய விஷயம் ஒன்றுமில்லையே? மவுண்ட்ரோடிலேயே சத்யமிலும் ஓடிக் கொண்டிருக்கும்போது, பெரிய திரையான தேவியில் எப்படி தொடர்ந்து ஓட்டுவார்கள்?

அதுபோலவே தான் உதயம், காசியிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் ஏதோ ஒரு திரையில் தூக்கினால்தானே, ஒரு தியேட்டராவது கன்சிஸ்டன்ஸியாக ஓட்டமுடியும். வினியோகஸ்தரான உங்களுக்கு தெரியாத விஷயங்கள் இல்லை இவை. இருந்தாலும் சும்மா சொல்லிவைக்கிறேன் :-)

செந்தழல் ரவி 5:07 PM, November 09, 2009  

ஒக்கே ரைட்டு விடு.

முரளிகண்ணன் 5:23 PM, November 09, 2009  

நல்ல ரிப்போர்ட் லக்கி.

யுவகிருஷ்ணா 5:35 PM, November 09, 2009  

மு.க, செந்தழல் நன்றி :-)


உஸ்ஸ்ஸ்... யப்பா முடியலை.. எப்படிப்பா எல்லாருக்கும் நன்றி சொல்றீங்க?

மதுவதனன் மௌ. / cowboymathu 6:21 PM, November 09, 2009  

ஆதவன் இலங்கையிலும் சுமாராக ஓடுகிறது. ஆனாலும் VIP ஷோ பார்த்து கடுப்பாகி வந்தோம்.. 550 ரூபாய்களல்லவா..

சாம்ராஜ்ய ப்ரியன் 8:11 PM, November 09, 2009  

எப்பவும் போல இந்த தீபாவளிக்கு மழையும் இல்ல. ஆனா எல்லாமே புஸ்ஸூ!!

Nataraj 8:22 PM, November 09, 2009  

"அப்பா படத்துக்கு போலாம்பா" என்று அனத்தும் குழந்தைகளை கூப்பிட்டு போகும் மிடில் கிளாஸ் அப்பாவின் சாய்ஸ் ஆதவனாக mostly இருப்பதே இப்படத்தின் வசூலுக்கு காரணமாக இருக்கலாம்.

Eeram hit-a? knew it had good reviews but it's a news to me..

கார்க்கி 3:50 PM, November 10, 2009  

பதிவு போட்டாதானே 1000 ஹிட்ஸ் நமக்கு வரும். இன்னைக்கு என்ன ஆச்சு.இப்பவே 600 ஆகுதேன்னு பார்த்தா விஷயம் இதுதானா?

சனி இரவு காசியில் ஆதவன் போனான் நண்பன். பால்கனியில் 25% கூட ஃபுல் ஆகவில்லையாம். உதயம்தான் காரணம் என்றான். ஆனாலும் மக்கள் பார்வையில் ஆதவன் சூர்யாவுக்கு சறுக்கல் என்றே சொல்கிறார்கள்.

Back to TOP