January 6, 2009

அபியும், நானும்!

1/06/2009 11:53:00 AM by லக்கிலுக் ·
Labels: ,

சீக்கிரமாக ஒரு கல்யாணம் காட்சி செய்துகொண்டு ஒரு பெண்குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் தேவதைகள் என்றாலே அத்தைகளுக்கு மகள்களாக பிறப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. ‘அபியும் நானும்’ படம் பார்த்தபிறகு தேவதைகள் நமக்கும் மகள்களாக பிறக்கக்கூடும் என்ற இன்னொரு சாத்தியம் புரிந்தது. எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது மண்டையைப் போட்ட என்னுடைய ஆயா கோயிந்தம்மா எனக்கு மகளாக பிறக்க வேண்டும். அவளுக்கு திருமண வயதாகும்போது எவனோ ஒரு சர்தார்ஜி பயலை லவ்வித் தொலைத்து, வயிறு எரிந்துகொண்டே கன்னிகாதானம் செய்துத் தரவேண்டும்.

மங்கி குல்லாவோடு ஊட்டியில் வாக்கிங் செல்லும் பிரகாஷ்ராஜில் படம் தொடங்குகிறது. தன் குட்டிக் குழந்தையோடு பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கும் பிருத்விராஜிடம் பேச ஆரம்பிக்கிறார் பிரகாஷ்ராஜ். நர்ரேஷன் ஸ்டைலில் அபியும், நானும் தொடக்கம். பெண்ணை பெற்று, வளர்த்து, கட்டிக் கொடுத்தது வரைக்கும் முழுவதையும் நகைச்சுவைப் பொங்க சொல்கிறார். சின்ன வயதில் திண்ணையில் சிவராம் பெரியப்பாவிடம் கேட்ட கதையை விட பன்மடங்கு சுவாரஸ்யம்.

ரோஜாப்பூ மாதிரி பிறந்த மகளை கையில் ஏந்தும் காட்சியில் பிரகாஷ்ராஜ் காட்டும் ரியாக்‌ஷன். அடடா. பிறவி நடிகனய்யா நீர். ஸ்கூல் சேர்க்கும்போதும், அடம்பிடிக்கும் பெண்ணுக்காக பிச்சைக்காரரை வீட்டில் சேர்த்துக் கொள்ளும் போதும், பெண்ணுக்கு சைக்கிள் வாங்கித் தர மறுக்கும்போதும், மகளுக்கு முதல்முதலாக வந்த காதல் கடித மேட்டரை டீல் செய்வதும், மேற்படிப்புக்காக டெல்லிக்கு அனுப்ப மறுத்து அடம்பிடிக்கும் போதும் படம் முழுக்க பிரகாஷ்ராஜ்யம்.

கனவுதேவதை திரிஷா உருப்படியாக ஒரு படம் நடித்துவிட்டார். எல்லோரும் கைத்தட்டலாம். அழகான அம்மாவாக ஐஸ்வர்யா. நடிப்பு ஓக்கே. குரல் தான் பயமுறுத்துகிறது. தம்மாத்தூண்டு கேரக்டராக இருந்தாலும் படம் முழுக்க வரும் மனோபாலா. பிச்சைக்காரராக அறிமுகமாகும் குமாரவேலு நார்த் இண்டியன் ஃபிகரை மடக்கும்போது காட்டும் காதல் சென்சேஷன். ஒரே ஒரு குழந்தைக்காக ஏங்கும் தலைவாசல் விஜய் என்று படம் முழுக்க கேரக்டர்களாக செதுக்கித் தள்ளியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். இவர் கேரக்டர்களை உருவாக்கி விட்டு அதன் பின் காட்சிகளை பிடிப்பார் போலிருக்கிறது.

படத்தின் கதையை விமர்சனத்தில் வாசிப்பதை விட திரையில் பார்ப்பதே நியாயம். “என்னம்மா பேங்குலே மேனேஜரா இருக்குறாரு என்பது மாதிரி எங்க ஸ்கூல் வாசலிலே பெக்கரா இருக்குறாருன்னு சொல்றே” வசனங்கள் அநியாயத்துக்கு ஜாலி. இந்தப் படத்துக்கு பாடல்களே தேவையில்லை. முதல் பாதியின் சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதிக்கும் நீட்டியிருக்கலாம். செகண்ட் ஹாப்பில் கமர்ஷியல் காம்ப்ரமைஸுக்காக செருகப்பட்ட பாடல்களின் போது வெளியே சென்று கோன் ஐஸ் வாங்கி சாப்பிடலாமா என்றிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் - ராதாமோகன் கூட்டணியிடம் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போது பார்த்தாலும் மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸுகளை குறிவைத்தே படங்களை எடுத்துத் தொலைக்கிறார்கள். அபியும் நானும் படத்தின் கதாபாத்திரங்களை லோயர் மிடில்க்ளாஸ்களாக சித்தரித்திருந்தால் படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கக் கூடும். மேல்தட்டு வர்க்க கதாபாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம் ரிச்சாக காட்ட முடியும். அதுமட்டுமன்றி லொக்கேஷன்களிலும், காட்சியமைப்புகளிலும் ஆடம்பரத்தை ரசிகனுக்கு பரிசளிக்க முடியும் என்றாலும் சினிமா என்பது வெகுஜன ரசிகர்களின் உணர்வுகளோடு பேசாவிட்டால் என்ன பிரயோஜனம்?

இதே கூட்டணியின் ’மொழி’யை விட சிறந்த படமாக ’அபியும் நானும்’ எனக்கு தோன்ற இப்போதைய வயதும், வாழ்வின் காலக்கட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு அப்பனும், அப்பனாகப் போகிறவனும் கட்டாயம் பார்த்து தொலைக்கலாம்.

அபியும் நானும் - அழகானது வாழ்க்கை!


Tamilish - தமிழ்

25 பின்னூட்டங்கள்:

லக்கிலுக் said...
12:22 PM, January 06, 2009

abhi என்று டைப் செய்து கூகிள் இமேஜஸில் தேடினால் இந்த இமேஜ் தான் சிக்கியது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

Anonymous said...
12:26 PM, January 06, 2009

ஒரு மொக்கைப் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனமா.

எங்க ஏரியாவுல தியேட்டர்ல மொத்தம் 30 பேர் கூட கிடையாது.

கல்யாண ஆசை வந்துருச்சு, உங்களுக்கு. இந்த யுவகிருஷ்ணாவுக்கு ஏற்ற "ராதை" கிடைத்திட வாழ்த்துக்கள் சார் !

"நான் கடவுள்" வரட்டும் பாஸ் ! திரைப்பட ரசிகன் அதிர்ச்சி அடையப்போகிறான்.

"இசை ஞானியின்" தெய்வீக பாடல்களை பற்றி, "நான் கடவுள்" பாடல் விமர்சனத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

சரவணகுமரன் said...
12:39 PM, January 06, 2009

//abhi என்று டைப் செய்து கூகிள் இமேஜஸில் தேடினால் இந்த இமேஜ் தான் சிக்கியது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.
//

:-))

அக்னி பார்வை said...
2:28 PM, January 06, 2009

abiyum naanum type செய்திருக்கனும்..

Anonymous said...
2:46 PM, January 06, 2009

உங்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் பதிவுகளில் தெரிகிறது யுவ கிருஷ்ணா... நீங்கள் பதிக்கும் படங்களில் தெரியவேயில்லை...

இராம்/Raam said...
2:48 PM, January 06, 2009

/சீக்கிரமாக ஒரு கல்யாணம் காட்சி செய்துகொண்டு //

HuH....???

Cable Sankar said...
3:22 PM, January 06, 2009

லக்கி.. சில வெகுஜன ரசிகன் ரசிக்க வேண்டும் என்றால் எல்லா நிலையிலும் காம்பரமைஸ் செய்து கொள்ள வேண்டும்.. அதனால் படத்தின் தரம் மேலும் கீழே போகுமே தவிர.. உயராது. நம்மூரில் காதல், ஜாதி, திரில்லர், சோகம், என்பதை தவிர வெகுஜனத்துக்காக, கதை பண்ணினால் செல்ப் எடுக்காது. விடுங்க சாமி.. இவங்களாவது நல்ல படம் எடுக்குறாங்ளேன்னு சந்தோஷப்படுவீங்களா..?

நிமல்-NiMaL said...
3:34 PM, January 06, 2009

வயசாயிருச்சு பதிவுக்கு பிறகு இது....

//சீக்கிரமாக ஒரு கல்யாணம் காட்சி செய்துகொண்டு ஒரு பெண்குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. //

வாழ்துக்கள் சார்..!!

இந்த வருசம் லக்கிலுக் யுவகிருஷ்ணா ஆகி ஒரு ராதையையும் பிடிச்சுடுவார் போலதான் இருக்கு...!!

Anonymous said...
4:41 PM, January 06, 2009

padam superu..

கூகிள் இமேஜ்yai sonnen

தாமிரா said...
4:54 PM, January 06, 2009

சீக்கிரமாக ஒரு கல்யாணம் காட்சி செய்துகொண்டு ஒரு பெண்குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் தேவதைகள் என்றாலே அத்தைகளுக்கு மகள்களாக பிறப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. ‘அபியும் நானும்’ படம் பார்த்தபிறகு தேவதைகள் நமக்கும் மகள்களாக பிறக்கக்கூடும் என்ற இன்னொரு சாத்தியம் புரிந்தது. எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது மண்டையைப் போட்ட என்னுடைய ஆயா கோயிந்தம்மா எனக்கு மகளாக பிறக்க வேண்டும். அவளுக்கு திருமண வயதாகும்போது எவனோ ஒரு சர்தார்ஜி பயலை லவ்வித் தொலைத்து, வயிறு எரிந்துகொண்டே கன்னிகாதானம் செய்துத் தரவேண்டும்.
///

இப்பிடி நினைச்சுக்கிட்டிருக்கிறவங்களுக்கு பையன்கள்தான் பொறக்குறானுங்களாம்..

தாமிரா said...
4:57 PM, January 06, 2009

சில சமயங்களில் கண்ணில் படுகிறது.. பதிவின் கீழே 'லிங்க் டு த போஸ்ட்டில் எனது பதிவு இருக்கிற‌தே.. நீங்க பண்றீங்களா? நன்றி பாஸ்.!

பரிசல்காரன் said...
5:17 PM, January 06, 2009

ப்ரசண்ட் மட்டும் போட்டுக்கறேன்.

LOSHAN said...
5:17 PM, January 06, 2009

விமர்சனம் வழமையை விட வித்தியாசமாக உள்ளது.. இதற்கும் வயது தான் காரணமா லக்கியாரே??
நீங்க எழுதியதை வாசித்த பிறகு மேலும் இதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலும் கூடியுள்ளது.

படத்தின் கதையை விமர்சனத்தில் வாசிப்பதை விட திரையில் பார்ப்பதே நியாயம்//
பிரகாஷ் ராஜ் - ராதாமோகன் கூட்டணியிடம் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போது பார்த்தாலும் மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸுகளை குறிவைத்தே படங்களை எடுத்துத் தொலைக்கிறார்கள்.//

நானும் உடன்படுகிறேன்.. :)

LOSHAN said...
5:18 PM, January 06, 2009

advanced wishes.. ;)

Anonymous said...
5:57 PM, January 06, 2009

லக்கி, நீங்கள் எனக்கு $10 கொடுக்கவேண்டும். உங்கள் விமர்சனத்தை படித்துவிட்டு, அதிலுள்ள பிகரைப் பார்த்துவிட்டு அதுதான் புதுமுகம் திரிஷா என நினைத்து (கவனிக்கவும்: நடித்துள்ளார் என எழுதியுள்ளீர்கள் - நம்ம திரிஷாவாவது நடிப்பாவது) படம் பார்த்து ஏமாந்து விட்டேன், அப்புறம் கோபமாக பின்னூட்டம் போட வரும் போதுதான் உங்களது கூகிள் abhi கவனித்தேன்.
BTW: அடுத்த முறை திரிஷா வேண்டுமாயின் ஒல்லிப்பிச்சான் என தேடவும் - கவனம் - சிலவேளைகளில் தனுஷின் படமும் வரலாம்.
- குண்டு

KaveriGanesh said...
8:49 PM, January 06, 2009

லக்கி இந்த போட்டாவை இந்த பதிவிலிருந்து எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.


ரோஜாப்பூ மாதிரி பிறந்த மகளை கையில் ஏந்தும் காட்சியில் பிரகாஷ்ராஜ் காட்டும் ரியாக்‌ஷன். அடடா. பிறவி நடிகனய்யா நீர்.

உண்மையோ உண்மை.

அழகான அம்மாவாக ஐஸ்வர்யா. நடிப்பு ஓக்கே. குரல் தான் பயமுறுத்துகிறது.

என்னங்ககக‌

இந்த வார்தையை ஐஸ்வர்யா சொல்லும் மாதிரி சொல்லி பாருங்ககள், ஒரு பயம் வந்துவிடும்.



பிரகாஷ் ராஜ் - ராதாமோகன் கூட்டணியிடம் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போது பார்த்தாலும் மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸுகளை குறிவைத்தே படங்களை எடுத்துத் தொலைக்கிறார்கள்.


அந்த ஆடியன்ஸு தாணே 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறான்.


அபியும் நானும் - அழகானது வாழ்க்கை!

இந்தா இப்பவே பார்த்திரென் சாமி.


அன்புடன்

காவேரி கணேஷ்

செம்புலம் said...
10:50 PM, January 06, 2009

உண்மையில் பிராகஷ்ராஜ் - ராதாமோகன் கூட்டணிக்கு ஒரு கண்ணியாமான திரைப்படம் தரவேண்டுமென ஆர்வமிருக்கிறது.

அதெல்லாம் சரிதான். எப்பவும் ரைட்ல போடுர படத்த இப்ப லெப்ட்ல போட்டுடியேப்பா..... நான் எப்படி செல்லம் சொல்லி அழுவன்.

- சென்னைத்தமிழன்

முத்து தமிழினி said...
12:16 AM, January 07, 2009

லக்கி,

உணர்ச்சிவசப்பட்டு திரும்பவும் கல்யாணம் பண்ணிற போற...

பசங்க உசுப்பேத்தறானுங்க...:))

Idly Vadai said...
1:48 AM, January 07, 2009

lucky,

nalla vaelai, neengal "poo" vimarsanathukku google image search-il "poo" endru thaedavillai...


thaediyavargal karuthu therivikkavum :)

அருண்மொழிவர்மன் said...
5:17 AM, January 07, 2009

///அபியும் நானும் படத்தின் கதாபாத்திரங்களை லோயர் மிடில்க்ளாஸ்களாக சித்தரித்திருந்தால் படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கக் கூடும். மேல்தட்டு வர்க்க கதாபாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம் ரிச்சாக காட்ட முடியும். அதுமட்டுமன்றி லொக்கேஷன்களிலும், காட்சியமைப்புகளிலும் ஆடம்பரத்தை ரசிகனுக்கு பரிசளிக்க முடியும் என்றாலும் சினிமா என்பது வெகுஜன ரசிகர்களின் உணர்வுகளோடு பேசாவிட்டால் என்ன பிரயோஜனம்///

இதில் என்ன பிரச்சனை என்றால் பொதுவாக லோயர் மிடில் கிளாஸை வைத்து எடுக்கப்படும்போது செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக்க வேண்டுமென்ற ஒரு கட்டாயம் இருக்கின்றது. அவற்றை தாண்டி எடுக்க வேண்டும்போது இந்த ரிச்னஸ் வெளிநாட்டு ரசிகர்களை கவர பயன்படுகின்றது.

Natarajan said...
11:35 AM, January 08, 2009

pls visit http://www.rediff.com/news/2009/jan/08pbd-pm-vows-support-to-palestine.htm

I read your blog posts regularly and admire you.
it will be great if you could post your views on this article. If possible pls use your friends circle to post their comments, in their blogs.
Thanks,
Natarajan k r

சதிஸ் said...
3:23 PM, January 08, 2009

உங்கள் வலைத்தளத்தை எனது அலுவலகத்தில் பார்க்க முடிவதில்லை.

காரணம் ஸ்பேம் என்கிறது ஸ்கிரிப்ட்.

இருந்தாலும் கூகிள் ட்ரான்சிலேட் மூலமாக படித்துவிடுகிறேன்.

படம் அவ்வளவாக நன்றாக இல்லை.
சந்தோஸ் சுப்பிரமணியத்தின் நெகடிவோ எனத் தோன்றுகிறது.

ஸ்வாதி said...
9:05 AM, January 09, 2009

இன்னுமா கல்யாணம் பண்ணவில்லை? நம்பவே முடியலை. :)

இந்தக் கதை மத்திய தரக் குடும்பத்துக்கு ஒத்து வருமா? அன்றாட சாப்பாட்டுக்கே அந்தரப்படும்; ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கை இருக்கும்; பள்ளிக் கூட வாசலில் பிச்சை எடுக்கும் அந்த மனிதருக்கு தானம் செய்யக் கூட மனசு வராது , கூட வைச்சிருக்க முடியுமா? வாழ்கையே போராட்டமாக இருக்கும் போது மகளை ரசிச்சு ரசிச்சு வளர்க்கக் கூடிய மனநிலையில் குடும்பத் தலைவன் இருப்பாரா? மத்தியதரக் குடும்பத்தில் ஒரு மஹா பிரச்சினை அப்பாவிடம் மகள் தைரியமாக காதல் கடிதத்தைப் பற்றி விவாதிக்க மாட்டாள் என்பதும், அதை அவ்வளவு இயல்பாக அப்பா எடுத்து யோசனை சொல்வாரா என்பதும்...இப்படி பல்தரப்பட்ட முரண்பாடுகள் இக் கதையில் இரு வர்க்கத்துக்குமிடையில் இருக்கும். முற்றும் முழுதாக வித்தியாசமான கதையாகத் தான் இருந்திருக்கும் அந்த அபியும் நானும் என்பது எனது கற்பனை... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? :)

வண்ணத்துபூச்சியார் said...
2:16 AM, January 15, 2009

இந்த திரைப்படத்திற்கு இப்படி ஒரு படம் போட்டதிற்காகவே உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்..

You are {A} 100% perfect bachelor..

தை பிறந்தால் வழி பிறக்கும்.

வாழ்த்துக்கள்.

Kaliprasadh R said...
11:49 AM, January 16, 2009

ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவதை தாங்க முடியல....
( படத்துலப்பா...)

லைவ்!

லைவ்!

தொடர்புக்கு!

மின்னஞ்சல் :
luckylook32@gmail.com

கைப்பேசி :
+919841354308

மின் சந்தா

Your email address:


Powered by FeedBlitz

இடுகைகள்

Followers