
திண்டுக்கல் என்றதுமே எனக்கு தோழர் செந்திலை தான் இதுவரைக்கும் நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. சுண்டக்கஞ்சியிலிருந்து டக்கீலா வரை ஒருவாய் பார்க்கும் வீராதிவீரர். செந்திலுக்கு அப்புறம் என்ன நினைவுக்கு வரும்? ம்ம்ம்... பூட்டு. இனிமேல் சாரதியும் நினைவுக்கு வருவார்.
தன்னம்பிக்கையை அஸ்திவாரமாக்கி பின்னட்டப்பட்ட கதை என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காவே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கம்ப்ளீட் ஃபேமிலி எண்டெர்டெயினர். அந்தக் காலத்து பாக்யராஜ் படம் மாதிரி பளீரிடுகிறது. திண்டுக்கல் சாரதி குழு திடமாக ஜெயித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கப் போவது உறுதி.
பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் சாரதி கொஞ்சமென்ன நிறையவே கருப்பு. அண்டங்காக்கா நிறத்தில் இருக்கும் பெண்கள் கூட இவரைக் கட்டிக்கொள்ள சம்மதிப்பதில்லை. தரகர் வெயிட் கமிஷனுக்காக எப்படியோ சிவப்பான, அழகான ஒரு பெண்ணை காட்டுகிறார். யாரும் எதிர்பாராவண்ணம் அந்தப் பெண்ணும் சாரதியை கட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.
தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் அவதிப்படும் சாரதி சம்பந்தமேயில்லாதவற்றை கற்பனை செய்துகொண்டு மனைவி மீது சந்தேகப்படுகிறார். உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார். க்ளைமேக்ஸ் சுபம்.
சாரதியாக கருணாஸ். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசனோ, அதுபோல கருணாஸுக்கு திண்டுக்கல் சாரதி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த படங்களுக்கும் மிச்சம் வைக்க வேண்டாமா? நடிப்பு, நடனம், பாட்டு என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனுஷன். பச்சைத்தமிழன் தோற்றம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதிலும் அந்த ‘சாமியோவ்வ்வ்...’ காமெடி. வயிறு வலிக்கிறது.
ஹீரோயின் கார்த்திகா. டிப்பிக்கல் ஃபேமிலி ஃபிகர். அழகாக சிரிக்கிறார்.
சீனுவாசன் நடித்த ’வடக்கு நோக்கி யந்த்ரம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். முதல்பாதி காமெடியில் மலையாளம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தமிழ்தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் உண்டிக்கோல் வைத்து யூத்தை குறிவைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் துப்பாக்கி வைத்து தாய்க்குலத்தை குறிவைக்கிறார். குறி கச்சிதம்!
நாசரின் க்ளைமேக்ஸ் எக்ஸ்ட்ரா போனஸ்.
“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”
“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”
“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”
“போங்க டாக்டர்”
“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”
படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுக்கு க்ளைமேக்ஸ் தன்னம்பிக்கை ஹார்லிக்ஸ். சுயபச்சாதாபம் எவ்வளவு மோசமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
சன் பிக்சர்ஸின் கை ஆங்காங்கே புகுந்து விளையாடியிருப்பதால் ‘ரிச்னஸ்’ தெரிகிறது. இல்லாவிட்டால் ராவாக இருந்திருக்கும். உதாரணம் : திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு பாடல். படம் முடிந்தும் யாரும் தியேட்டரை விட்டு எழுந்துப் போகாவண்ணம் ஒரு குத்து குத்தியிருப்பதில் படத்தின் அபாரவெற்றி தெளிவாகிறது.
திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.


25 பின்னூட்டங்கள்:
7:56 PM, December 19, 2008
me the 15th.
7:59 PM, December 19, 2008
லக்கி சார்!
நம்பினா நம்புங்க!
நைட் ஷோவுக்கு போறதுக்கு முன்னாடி, யாராவது விமர்சனம் போடமாட்டாங்களான்னு ஏங்கிப்போய் இணையத்துல சுத்தி,உங்க பதிவுக்கு வந்தேன். சூப்பர்..தைரியமா போய் பாக்கப்போறேன்.
8:43 PM, December 19, 2008
கலக்கல் விமர்சனம்...
சுய பச்சாதாபம் மேட்டர் சூப்பர் !!!
திண்டுக்கல் என்றவுடனே அன்றைக்கு ஓட்டல் ரூமில் சரக்குடன் சாப்பிட்ட தலப்பாகட்டு பிரியாணியும் அதனோடமைந்த மட்டன் கொஸ்துவும் அல்லவா நியாபகம் வந்திருக்கனுமே ???
ஏன் வரவில்லை ? திராவிட முன்னேற்றக்கழகத்தவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியாவை பற்றி சொல்லியா கொடுக்கவேண்டும் ??
சண்டைய போட்டுக்குவீங்க அப்புறம் சமாதானம் ஆகிப்பீங்க...!!! என்னத்த சொல்ல :))
8:45 PM, December 19, 2008
Hi,
Simply superb.
Good commenting. Nice blog.
Happy blogging.
:-)
Insurance Agents
8:56 PM, December 19, 2008
கலக்கிட்டிங்க லக்கி... படம்பர்க்க் போற நாங்களும் லக்கின்னு செல்லிட்ங்க விரைவில் பார்த்துடுவோம்....
8:56 PM, December 19, 2008
மேல இருக்குற படத்த க்ளிக்கின பெருசகுமா ?? சொல்லவே இல்ல..... இவ்வளவு நாலா ரொம்ப வெகுளியா இருந்துடேனோ ???
9:10 PM, December 19, 2008
நான் online பார்பேன் thanks
www.ezdrivingtest.com
9:56 PM, December 19, 2008
சூப்பர் விமர்சனம்
10:07 PM, December 19, 2008
//திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன். //
படத்திற்கு பத்தி பத்தியாக விமர்சனம் எழுதுவதை விட இந்த ஒரு வரி, படம் எவ்வளவு நன்றாக இருக்கின்றது என்பதை புரிய வைக்கின்றது..
சூப்பர் விமர்சனம்
10:21 PM, December 19, 2008
பார்க்கலாம்னு நமபிக்கை கொடுத்திட்டிங்க.
ம்... விடுங்க 'தேட்டர்ல போய்யி' பார்த்துருவோம்.
10:48 PM, December 19, 2008
அருமையான விமர்ச்சனம்.....
11:36 PM, December 19, 2008
GOOD REVIEWS ABOUT THE FILM...ONCE AGAIN IT WILL LEAD OUR TAMIL CINEMA FANS TO GO TO THEATRES,BARRING THE OTHER MODES IF POSSIBLES.KEPP SENDING SUCH ARTICLES ABOUT GOOD TAMIL FILM, WHICH WILL BE MORE USEFUL FOR THE BIGGEST INDUSTRY...WHICH IS REALLY SINKING....WE NEED TO CREATE PILLARS TO RAISE THE INDUSTRY FROM DORMONT....JUST FOR FUN...NOTHING INTENTIONAL ABOUT IT...
2:05 AM, December 20, 2008
லக்கி.... படத்தின் முன்னோடங்களே மிகவும் அருமையான படம் என்று உணர்த்தி கொண்டு இருக்கின்றன... அதை ஆமொதிதற்கு நன்றி. படம் பார்த்து விட்டு கருத்துக்களை பகிர்கிறேன்.
மொத்தத்தில், சன் பிக்சர்ஸ் க்கு hat-trick வெற்றி தான் போலும்.
ரஃபிக் ராஜா
ராணி காமிக்ஸ் & காமிக்கியல்
10:55 AM, December 20, 2008
தோழர் நீங்களுமா?
வாட் ய கொய்ன்ஸிடென்ஸ்.
10:59 AM, December 20, 2008
/////“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”
“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”
“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”
“போங்க டாக்டர்”
“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”////
சூப்பரான எடுத்துக்காட்டு!
11:14 AM, December 20, 2008
அட கேட்கவே சந்தோசமா இருக்கு...... இந்த மாதிரி படங்கள் வெற்றி அடைந்ததால் நல்ல படங்கள் வர நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
11:16 AM, December 20, 2008
அட கேட்கவே சந்தோசமா இருக்கு...... இந்த மாதிரி படங்கள் வெற்றி அடைந்ததால் நல்ல படங்கள் வர நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
12:42 PM, December 20, 2008
How is Thiruvannamalai?
3:04 PM, December 20, 2008
இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம் // :))
8:55 AM, December 21, 2008
//திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்//
சொல்லிட்டீங்ள பாத்துரலாம்
12:19 PM, December 21, 2008
லக்கி லுக் ஐயங்கார், செலக்டீவ் பதிவர்களின் சூடான இடுகைக்கு ஆப்பு ஆப்பு ஆப்பு !
:)
8:52 AM, December 22, 2008
அடுத்த சன் பிக்சர்ஸ் வரும் வரையில் சாரதிதான் சன்டிவி ரேட்டிங்கில் முதலாவதாக இருக்கும் என நினைத்தேன். கலைப்படைப்புகள் கூட ஊடக அரசியலில் அகப்பட்டுக்கொண்டு தினறிக்கொண்டிருக்கிறது. வானிலை அறிக்கை தவிர்த்து அனைத்து செய்திகளும் எதிரும் புதிருமாக அமைந்துள்ளது. நல்ல நேர்மையான விமர்சனம் தேவையென நினைக்கும் போது தங்கள் திரை விமர்சனம் ஆறுதல் அளிக்கிறது.
- சென்னைத்தமிழன்
7:44 PM, December 23, 2008
அடுத்த சன் பிக்சர்ஸ் வரும் வரையில் சாரதிதான் சன்டிவி ரேட்டிங்கில் முதலாவதாக இருக்கும் என நினைத்தேன். கலைப்படைப்புகள் கூட ஊடக அரசியலில் அகப்பட்டுக்கொண்டு தினறிக்கொண்டிருக்கிறது. வானிலை அறிக்கை தவிர்த்து அனைத்து செய்திகளும் எதிரும் புதிருமாக அமைந்துள்ளது. நல்ல நேர்மையான விமர்சனம் தேவையென நினைக்கும் போது தங்கள் திரை விமர்சனம் ஆறுதல் அளிக்கிறது.
i agree too
7:48 PM, December 23, 2008
super அட கேட்கவே சந்தோசமா இருக்கு...... இந்த மாதிரி படங்கள் வெற்றி அடைந்ததால் நல்ல படங்கள் வர நிறைய வாய்ப்பு கிடைக்tகும். THIRUBUVANAM. MAHES
7:51 PM, December 23, 2008
MR R MAHES
திண்டுக்கல் என்றவுடனே அன்றைக்கு ஓட்டல் ரூமில் சரக்குடன் சாப்பிட்ட தலப்பாகட்டு பிரியாணியும் அதனோடமைந்த மட்டன் கொஸ்துவும் அல்லவா நியாபகம் வந்திருக்கனுமே ???
Post a Comment