ஆக்ஷன் ஜோதியில் ஹாஃப் பாயில் போட்டிருக்கிறார் பேரரசு. ஆக்ஷன் தான் வேலைக்காகும். ஆன்மீகத்தால் ஆட்டையைப் போடமுடியாது என்று அழுத்தம் திருத்தமாக மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆக்ஷன் கிங் என்றாலே அதிரடி. ஒன்றுக்கு இரண்டு ஆக்ஷன் கிங்குகள், நிறைய பெப்பர் போட்டு டபுள் ஆம்லெட். இரட்டை கிங்குகள் இம்சை அரசர்களாக மாறி மாறி வில்லன்களை வதைக்க, பேரரசுவும் தன் பங்குக்கு டாக்டர் சுவாமிமலை என்ற டுபுக்கு வேடத்தில் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி பஞ்ச் ஃபுட்பால் ஆடுகிறார். இங்கிட்டும் அங்கிட்டுமாக அலைபாயும் ஃபுட்பால் தான் ரசிகர்கள். தாங்கலை சாமியோவ்.
ரொம்பவும் லோபட்ஜெட்டில் படத்தை முடிக்க கவிதாலயா திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டொக்கு ஃபிகர் தான் ஹீரோயின். ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார். கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே அர்ஜூனின் கட்டுடலை கண்டு கதாநாயகிகள் காமம் கொள்ளும் அல்லது காதல் கொள்ளும் கருமம் இன்னமும் தொடர்கிறது. பேரரசு படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் ஒரு டெம்ப்ளேட்டில் அடக்கிவிடலாம். ஹீரோ, ஹீரோயின் மற்ற கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி மாற்றி ஃபிலிம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
பாவம், நல்ல நடிகரான சாய்குமார் பேரரசுவு படத்தின் வில்லனாகி ஐசியூ பேஷண்ட் மாதிரி பரிதாபமாக ஆகிவிட்டார். கவுண்ட் டவுன் சொல்லி அர்ஜூன் அறிமுகமாகும் ஓபனிங் ப்ளாக்கெல்லாம் அரதப்பழசு. இன்னுமா பேரரசுவை ஊர் நம்பிக்கிட்டிருக்கு? என்று தியேட்டரில் ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். பட்டாசுக் கிடங்கில் பஸ்பமான அர்ஜூன் டிரைனேஜ் வழியாக க்ளைமேக்ஸில் எழுந்துவருவது நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.
இந்தப் படத்தில் கருணாஸ் காமெடியன். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திண்டுக்கல் சாரதியே சக்கைப்போடு போடுகிறது. திருவண்ணாமலை? வையாபுரி என்றொரு காமெடியன் முன்பு இருந்தார் நினைவிருக்கிறதா? அவரும் வந்துப் போகிறார். மருந்துக்கு கூட காமெடி இல்லை. அர்ஜுன் படங்களில் இதுவரை காமெடி மட்டுமாவது உருப்படியாக இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்.
திக்குத்தெரியாத காட்டில் திசைபுரியாமல் குழம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்திருப்பவர்கள் இண்டர்வெல்லில் படம் திடுக்கென்று யூ டர்ன் அடித்து ஆன்மீகம் பக்கமாக திரும்பும்போது நிமிர்ந்து உட்காருகிறார்கள். அதுக்கப்புறமும் வழவழா கொழகொழா தான். வில்லன்கள் திரும்ப திரும்ப மோதுகிறார்கள். ஆக்ஷன் கிங் அடித்து உதைத்து ஓட ஓட விரட்டுகிறார். இந்த காட்சிகளையே இரண்டரை மணி நேரமும் பார்த்துத் தொலைத்தால் மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?
தமிழினத்தின் பெருமைக்காக தமிழர்கள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர் துறந்திருக்கிறார்கள். தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?


24 பின்னூட்டங்கள்:
1:41 PM, December 31, 2008
யோவ் படத்த பாத்தீய, பிலாக்ள நாலு பேர் கிட்ட வயிறு எரிஞ்சியான்னு போகாம எதுக்கு, போரட்டத பத்தி பேசற... நல்ல குருப்பா தான் அலையறாங்கையா...
1:43 PM, December 31, 2008
சரி எங்க நடு பக்க.. ஒ சாரி, கவர்ச்சி படத்த காணோம்..
இதற்க்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்
1:50 PM, December 31, 2008
// கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே அர்ஜூனின் கட்டுடலை கண்டு கதாநாயகிகள் காமம் கொள்ளும் அல்லது காதல் கொள்ளும் கருமம் இன்னமும் தொடர்கிறது.//
செம ஹாட்
1:56 PM, December 31, 2008
// தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா? //
:-)))...
1:57 PM, December 31, 2008
ஏதோ ஒரு படம் பார்க்கும்போது இதன் ட்ரெய்லரைப் போட்டார்கள். முடியும்போது ஒரு வேலோடு பேரரசு வருவார். அலறி அடித்துக் கொண்டு ஓடினேன்.
இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கமே போக பயமாய் இருக்கிறது!
2:17 PM, December 31, 2008
இந்த மாதிரி படமெல்லாம் வந்தால் தான் தரமான படம் எப்படி இருக்கும் என்று ஒப்பிட்டு பார்க்க முடியும்.
பேரரசு வாழ்க !
2:27 PM, December 31, 2008
//மாய்க்கானாக//
தூய தமிழ்?
3:35 PM, December 31, 2008
முக்கியமான விஷயம் எழுத விட்டுடிங்க;
பரங்கிமலை ஜோதி யில் , திருவண்ணாமலை ஜோதி ஓடிட்டிருக்கு, திரை அரங்கை பற்றி எழுதாமல் விட்டது கண்டனத்திற்கு உரியது.
குப்பன்_யாஹூ
3:37 PM, December 31, 2008
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
4:12 PM, December 31, 2008
பேரரசு படமெல்லாம் இன்னுமா பார்த்திட்டு இருக்கீங்க? நான் திருப்பதிக்கப்புறம் போறதில்லை.
4:17 PM, December 31, 2008
லக்கி!
உங்கள் மேலதிக கவனத்திற்கு:
புத்தகக்கடைகளின் அணிவகுப்புப் பட்டியல் வெளியிட்டு விட்டார்கள்! ஞானபானு பதிப்பகம் கடை எண் 353! (மொத்தம் 246). ஞாநி ஓட்டெடுப்பு நடத்துகிறாரா என்று கவனிக்கவும்!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
5:09 PM, December 31, 2008
வரும் புத்தாண்டிலாவது நீங்கள் மொக்கை படங்களில் இருந்து தப்பிக்க எல்லாம் வல்ல தகர நெடுங்குழை காதனை வேண்டுகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
5:59 PM, December 31, 2008
பேரரசுகிட்ட இப்போ எவ்ளோ முன்னேத்தம். மொதல்ல பேசினாரு,இப்போ ஃபைட் மாதிரி வெச்சு பேசுறாரு. வடிவேல் இருந்திருந்தா குறட்டையாவது மிச்சமாகி இருக்கும்
9:51 PM, December 31, 2008
மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?
Nice line
Krithika,
Houston - TX
10:16 PM, December 31, 2008
//கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது//
தமிழ் அமைப்புகளின் கண்டன ஆர்பாட்டங்களுக்கும் உண்ணாவிரத்தங்களுக்கும் வந்து சேர்ந்துள்ள கோராமைய என்னான்னு சொல்ல?
அவங்க ஏதோ பாவம் விடுங்க - சின்னச் சின்ன பிரச்சினைகளான ஈழ தமிழர் பிரச்சினைகள் போன்றவைகளுக்கு போராடிட்டு இருக்காங்க.. இம்மாம் பெரிய மேட்டருக்கெல்லாம் அவங்க லாயக்கில்லே..
11:17 PM, December 31, 2008
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
1:37 AM, January 01, 2009
ஆனாலும் உஙக்ளை பாராட்டுகிறேன் தலைவரே.. எனக்கு இல்லாத தைரியம் உங்ககளுக்கு இருப்பதால்..
2:48 AM, January 01, 2009
தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?///
இதை தான் நானும் சொல்லோனும் என்று நினைத்தேன், ஆனால் இவ்வளவு அழகாக சொல்ல வேறு யாராலும் முடியாது....
7:00 AM, January 01, 2009
Lucky:
The last paragraph..
I was browsing news before I read the review..The news summary around last year has not been very cheerful..I read your review with all seriousness..And the last para earned the first laughter of the new year..
Honestly, You are an underrated writer..My best wishes for great writing year..
Regards.
Ronin
9:02 AM, January 01, 2009
புத்தாண்டு வாழ்த்துக்கள் லக்கி
10:42 AM, January 01, 2009
பேரரசுவைப் பற்றித் தெரிந்தே இந்தப் ஓடும் திரையரங்குப் பக்கமே போகலை.. ;)
உங்க பதிவைப் பார்த்த பிறகு மேலும் நிம்மதி..
வாசித்து வாசித்து வயிறு குலுங்க சிரித்தேன்.. (ரெண்டு தரம் வாசிசேனுங்க.. )
\\அலைபாயும் ஃபுட்பால் தான் ரசிகர்கள்.
ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார்.
இன்னுமா பேரரசுவை ஊர் நம்பிக்கிட்டிருக்கு? என்று தியேட்டரில் ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள்.
இந்த காட்சிகளையே இரண்டரை மணி நேரமும் பார்த்துத் தொலைத்தால் மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?//
இந்த வரிகள் சூப்பர் ணா ..
லக்கி உங்க விமர்சனம் படிச்சா படம் பார்க்கத் தேவியா இல்லையா என்று தீர்மாநிசுக்கலாம்..
கே.பீக்கு தேவையில்லாத வேலை..
12:28 PM, January 02, 2009
இதுக்கெல்லாம் விமர்சனம் தேவையா..???
புது வருடத்திலாவது மாறுங்க நண்பரே...
11:51 PM, January 02, 2009
என் குத்துப்பாட்டு குருநாதனின் மாண்பைக் குறைக்கும் வகையில் பதிவெழுதிய லக்கியை வன்மையாகக் கண்டிக்கிறேன்....
- சிற்றரசு செல்வேந்திரன்.
12:56 PM, January 05, 2009
'தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?'
நீங்களே அப்படி செய்தால் உங்களுக்கு உடனடி புகழ் கிடைக்கும். அதை வைத்துக் கோடம்பாக்கத்தின் கவனத்தைப் பெறலாம். பேரரசுவின்
அடுத்த படத்திற்கு உதவி இயக்குனராக
வாய்ப்பும் கிடைக்கலாம்.
Post a Comment