ஐந்தாவது நாள் நிகழ்வில் இந்துத்துவாவாதிகளின் வேட்டைக்காடாகிப் போனது மொட்டை மாடி.
ஐந்தாவது நாளான நேற்று செங்கிஸ்கான் நூலை ஐகாரஸ் பிரகாஷ் வெளியிட பத்திரிகையாளர் முத்துராமன் பெற்றுக் கொண்டார். இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை sishri.orgயை சார்ந்த ப்ரவாஹன் வெளியிட கணேசன் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் மதிப்புரை ஆரம்பமானது. சாதாரணமாகப் பேசும்போதே நகைச்சுவை ததும்ப பேசும் ஐகாரஸ் ஏனோ கொஞ்சம் அடக்கி வாசித்தது போலவே இருந்தது. அடக்கி வாசித்தலையும் மீறி மங்கோலிய குழுக்களை குறிப்பிடும்போது தமிழக காங்கிரஸோடு ஒப்பிட்டது கைத்தட்டலை அள்ளியது. கிழக்குப் பதிப்பகத்தின் நூல்நடை பற்றி தனக்கு விமர்சனங்கள் இருப்பதாக சொன்னார். நூலாசிரியர் முகிலின் உழைப்பை பாராட்டி வாழ்த்தினார்.
அடுத்ததாக இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை மதிப்புரை செய்ய ப்ரவாஹன் வந்தார். பேச்சின் ஆரம்பத்திலேயே மனுதர்ம விசுவாசி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. விமர்சனத்திலும் சரி, பின்னர் நிகழ்ந்த விவாதங்களிலும் சரி. ஆரியர்களைப் போல திராவிடர்களும் வந்தேறிகள் என்று நிறுவ ரொம்பவும் மெனக்கெட்டார். அவர் செய்தது மதிப்புரை என்பதை விட காழ்ப்புரை என்று சொல்வதே பொருத்தம். நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் கிட்டத்தட்ட நிராகரித்தே பேசிக்கொண்டிருந்தார்.
போதிய தரவுகள் இல்லை, அனுமானத்தின் பேரில் எழுதப்பட்டிருக்கிறது என்கிற ரீதியில் போய்க்கொண்டிருந்த அவரது எதிர்விமர்சனங்களுக்கும் எந்த தரவுகளையும் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புத்தகத்தில் ஆரியம், திராவிடம் தொடர்பான பக்கங்களை பற்றி குறிப்பிடும்போது அவரது பேச்சில் பதட்டம் தெரிந்ததாக உணர்ந்தேன். பதிப்பகம் இதை விஷயம் தெரிந்தவர்களிடம் கொடுத்து சரிபார்த்திருக்க வேண்டும் என்று இருமுறை சொன்னார். பழங்குடியினர் தொடர்பான ஒரு நூலை மதிப்புரை செய்ய கிழக்கு பதிப்பகத்தாருக்கு ஒரு மனுதர்மவாதி தான் கிடைத்தாரா என்று நொந்துக் கொண்டேன்.
'இருளர்கள் - ஓர் அறிமுகம்' நூல் கிழக்குப்பதிப்பகம் எட்டியிருக்கும் ஒரு மைல்கல். ஒரு வழக்கின்போது வழக்கறிஞரால் இந்நூல் இருளர்கள் தொடர்பான ஆதாரமாகவே எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது நூலாசிரியருக்கு மட்டுமல்ல, பதிப்பகத்துக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். இந்நூலை எழுதிய எழுத்தாளர் குணசேகரன் இடதுசாரி சிந்தனையாளர் என்பதாலோ என்னவோ ப்ரவாஹன் தனது மதிப்புரையின் ஆரம்பத்திலேயே இடதுசாரி சிந்தனைகளை கேலி செய்து சூடுவைத்துப் பேசினார். இந்நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை என்றாலும் இதுவரை வாசித்தவர்களின் பார்வையில் இந்நூல் மிகச்சிறப்பாக வந்திருப்பதாக அறிந்திருந்த வேளையில், ப்ரவாஹனின் மதிப்புரை எனக்கு கோபத்தையே ஊட்டியது. மிகச்சுலபமாக குணசேகரின் பல ஆண்டுகள் உழைப்பை அவர் நிராகரித்த விதம் எனக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியது. குணசேகர் பழம்பெரும் கம்யூனிஸ்ட்டு தலைவர் டாங்கே அவர்களின் கொள்ளுப்பேரன் என்பது இங்கே பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவல்.
அடுத்து கலந்துரையாடல் ஆரம்பித்தது. முதல் கேள்வியை நான் தொடங்கிவைத்தேன். நூலை விமர்சனம் செய்த ப்ரவாஹனுக்கு எதிரான விமர்சனம் அது. 'நூலில் போதிய தரவுகள் இல்லாமல் அனுமானத்தின் பேரில் நூலாசிரியர் எழுதியதாக விமர்சனம் வைக்கும் நீங்கள் உங்கள் மதிப்புரையின் போதே 'இருக்கலாம், இருந்திருக்கலாம்' என்று அனுமானத்தின் பேரில் மதிப்பீடு செய்கிறீர்கள். ஒரு விமர்சகருக்கு இருக்கும் இந்த அனுமான சுதந்திரம் எழுத்தாளருக்கு இருக்கக்கூடாதா?' என்றேன். உடனடியாக எந்த யோசனையும் செய்யாமல் என் குற்றச்சாட்டை மறுத்தார். மறுத்த அடுத்த நொடியே ஒரே ஒரு இடத்தில் அதுபோல சொல்லியிருக்கலாம் என்றவர் 'என்னை முட்டாள் என்று இந்த கேள்வியை கேட்டவர் நினைக்கிறார்' என்று அபாண்டமான குற்றச்சாட்டினை வைத்தார்.
இதற்கு மேல் இதுதொடர்பாக அவரிடம் விவாதம் நடத்த எனக்கு விருப்பமில்லை என்று விட்டுவிட்டேன். இந்துத்துவாவாதிகள் ஒரு வட்டத்துக்குள்ளாகவே விவாதம் நடத்த விரும்புவார்கள், வட்டத்தை விட்டு அவர்கள் வெளியே வரமாட்டார்கள். ஆனால் எதிர்விவாதம் செய்பவர்களை வட்டத்துக்குள் வந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவார்கள் என்பதையெல்லாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் அந்நேரத்திலும் குணசேகரனுக்கு ஆதரவான சிறுகுரலையாவது ஒலிக்க வேண்டும் என்பதாலேயே அக்கேள்வியை மட்டும் முன்வைத்தேன்.
அடுத்து விவாதம் பல்வேறு முனைகளை தொட்டுச் சென்றது. மரபணு ஆராய்ச்சித் தொடர்பான பேச்சும் வந்தது. கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவர் 'ஏராளமான ஆராய்ச்சி முடிவுகளை அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதுதொடர்பான ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தவும் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது' என்ற அதிர்ச்சிகரமான தகவலை சொன்னார். அது ஆதாரப்பூர்வமானதா அல்லது யூகத்தின் பேரிலானதா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. இதுபோன்ற பெரிய குற்றச்சாட்டுகளை பொத்தாம்பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் வைத்துவிடுவது பெரிய பிரச்சினைகளை கிளப்பும்.
இந்த விவாதத்தை தொடர்ந்து பேசிய ஒரு தொல்லியல் ஆய்வு நிபுணர் (நெற்றியில் குங்குமம் நீட்டுவாக்கில் வைத்திருந்தார்) பாபர்மசூதியின் கீழ் ஆய்வு செய்யப்பட்டபோது ஒரு 'பெருமாள் கோயில்' இருந்ததாகவும், அதை இந்திராகாந்தி மறைத்துவிட்டார் என்றும் சொன்னார். அந்த அன்பர் இன்னமும் ஒரு இருபது அடி கீழே தோண்டி பார்த்திருந்தால் ஒரு பவுத்த மடாலயத்தையும் ஒருவேளை கண்டிருக்கலாம். இதெல்லாம் என்னவோ புதிய கண்டுபிடிப்புகள் என்பதைப் போல சொல்லிவருகிறார்கள். பவுத்த, சமண வழிபாட்டு நிலையங்கள் அழிக்கப்பட்டு வைணவ, சைவ ஆலயங்கள் எழுப்பப்பட்டதும், அவை அழிக்கப்பட்டு பிற்பாடு மசூதிகள் உருவாக்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசர்கள் காலத்தில் நடந்தவற்றுக்கெல்லாம் இப்போதிருக்கும் நாகரிகமான மனித இனம் நியாய, அநியாயங்கள் கற்பிக்க முடியாது. வரலாறுக்கு ஏது நீதியும்? அநீதியும்?
நிகழ்வின் பெரும்பாலான நேரத்தை இருளர்களே ஆக்கிரமித்துக் கொள்ள பத்ரி இடையில் புகுந்து செங்கிஸ்கானையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்றார். அதிஷா, ஓகைநடராஜன் உள்ளிட்டவர்கள் செங்கிஸ்கான் குறித்து கேள்விகள் கேட்டும், தாங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொண்டார்கள்.
பதிவுக்கு சம்பந்தமில்லாத விளம்பரம் : இன்று (27-12-08) மாலை ஐந்து மணியளவில் சென்னை, தியாகராயநகர் நடேசன் முதலியார் பூங்காவில் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. பதிவர் விருது, சூடான இடுகைகள் என்று பதிவுலகில் தற்போது நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் குறித்த சூடான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் 'மணமானவர்களின் மனக்குமுறல்கள்' என்ற தலைப்பையொட்டி விவாதிக்க வேண்டும் என்று பதிவர் தாமிரா பலகாலமாகவே வற்புறுத்தி வருகிறார். சமீபத்தில் 1970களில் திருமணம் செய்துகொண்ட பதிவர்களும் இதுதொடர்பாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமன்றி திருமங்கலம், நாடாளுமன்றத் தேர்தல் என்று அரசியலும் களைகட்டுமென தெரிகிறது.
பிரபல பதிவர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொள்வார்கள் என்று அதிஷா நம்பிக்கை தெரிவித்திருப்பதால் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கும் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
சந்திப்பு தொடர்பான மேல்விவரங்களுக்கு : அதிஷா (9884881824), முரளிகண்ணன் (9444884964), லக்கிலுக் (9841354308), கேபிள்சங்கர் (9840332666)


19 பின்னூட்டங்கள்:
1:22 PM, December 27, 2008
ஹாய் லக்கி நீங்க கிழக்கில் சேர்ந்துடீங்களா? வரலாற்று ரீதியிலான புரட்டுகளை போகிற போக்கில் அள்ளித் தெளிப்பது. பார்ப்பனர்களுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. அதை எல்லாம் தாண்டி கிழக்கு பதிப்பகமே இந்துப் பரிவாரங்களின் இன்வெஸ்ட்மெண்ட்தான்.... இதை எல்லாம் சும்மாச் சொல்லவில்லை. அதன் அமெரிக்க தொடர்புகளை வைத்துச் சொல்கிறேன். அறைகுறையாக எழுதுவது. இண்டர்நெட்டில் இருந்து டவுன் கோட் செய்து அப்படியே வாந்து எடுப்பது என அத்தனையும் குப்பைகள். கிழக்கில் வேலை பார்க்கும் சம்பளக்காரர்கள் அனைவரும் மாசம் முப்பது நூல் எழுதுவார்கள் போல. ஒரு இண்டர்நெட் ஒரு மாசட்துக்கு செயலிழ்ந்து போகும் என வையுங்கள் கிழக்கே ஸ்தம்பித்துப் போனாலும் போகும்.
2:37 PM, December 27, 2008
வழக்கமான லக்கி லுக்கை பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி :( . சமீபத்தில் ஒரே விளம்பர பதிவுகள் மயம்தான். வேறு ஏதாவது எழுத கூடாதா பாஸ் ?
3:17 PM, December 27, 2008
//ஒரு இண்டர்நெட் ஒரு மாசட்துக்கு செயலிழ்ந்து போகும் என வையுங்கள் கிழக்கே ஸ்தம்பித்துப் போனாலும் போகும்.
///
அப்போ இண்டர்நெட் இல்லைன்னா சூரியன் மேக்கால வரும்ன்றீகளா ??
12:21 AM, December 28, 2008
கிழக்கு பதிப்பகத்தை பற்றிய ராவணின் கருத்தை நான் ஏற்கிறேன்...!!!!
அது முற்போக்கை போல தோற்றமளிக்கும் பார்த்தசாரதி அன்ட் கம்பேனி பிரைவேட் லிமிடெட்தான்....!!!
மற்ற எல்லோரையும்விட முற்போக்காளராய் நடிக்க இந்த நூல் கும்பல்களுக்கு சுளுவாய் வரும்...!!!
லக்கியைப்போல சுதந்திர சிந்தனையையுடைய ஓரளவுக்கு முற்போக்காய் இருக்க்ககூடியவர்களையும் இன்ட்டியூடனலைஸ் செய்து விட்டால் சில நூறு எதிரிகளை ஒழித்த்தற்கு சமம் ...!!!!
மற்றபடி நெட்டில் சுட்டு போடுவது இன்று பரவலாய் எல்லோரும் செய்து கொன்டிருப்பதுதான், அரசியல் பொருளாதார சூழல்களில் கிரியேட்டிவிட்டி ஸ்பான்டேனியஸாகி போனதனால் வேறு வழியில்லை.., இது விளம்பர நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அதிகம் உணர்ந்திருப்பர்...!!!!
12:41 AM, December 28, 2008
ஹரன்பிரசன்னாவின் பதிவையும் படித்த பிறகு எனக்கென்னவோ ப்ரவாஹனை திட்டமிட்டு வரவழைக்கப்பட்டுள்ளார் எனதான் தோன்றுகிறது...!!!!
6:14 AM, December 28, 2008
மேலே ராவணன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானில்லை!
வேறு யாரோ எனது பெயரில் புதிதாக வந்துள்ளதாகத் தெரிகிறது.
அய்யா புது ராவணா பேர மாத்துய்யா?
இல்லையென்றால் பல குழப்பங்கள் வரலாம்.
10:26 AM, December 28, 2008
கிழக்குப் பதிப்பகத்தின் இந்துத்துவா கொள்கை பரப்புவது திட்டமிட்ட செயல்.பல ஊர்களில் அவர்கள் கொண்டு சென்று விற்கும் நூல்களைப் பாருங்கள்.வியாபாரத்திற்கும்,விளம்பரத்
திற்கும் விற்பது தவிர மாற்றி எழுதப்பட்ட நூல்கள் விவேகானந்தரிலிருந்து பல சிறு நூல்கள் "நூல்"மயமானவையே.
8:17 PM, December 28, 2008
லக்கியாரே அவாளிடம் இருந்து நன்னா பேஷ கத்துக்கோங்கோ.
புத்தர், முவேந்தர் என்று வாழ்ந்தவர்களையும் தருமனையும் super ஆக link செஞ்சாரு பாருங்கோ அதை கேட்டவுடன் நேக்கு அப்படியே பொறி கலங்கி விட்டது.
எப்படி கொஞ்சம் கூட கூசாமல் இப்படி புருடா விட முடிகின்றதோ தெரியவில்லை.
8:57 PM, December 28, 2008
லக்கி,
எழுதுவது உனக்கு தொழிலும் கூட.உன் கொள்கையில் நீ சமரசம் செய்து கொள்ளாமல் கிழக்கில் என்ன எங்கயும் எழுதலாம்.
உன்னை நோண்டுபவர்களில் பாதி பேருக்கு பொறாமையாக இருக்க வாய்ப்புண்டு.
9:36 PM, December 28, 2008
இண்டர்நெட்டில் சுட்டு எழுதுகிறார்கள் என்ற வாதம் பொறுத்தமானது அல்ல. இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊடகங்களும், எழுத்தாளர்களும் தேவையான தகவல்களைப் பெற இண்டர்நெட்டின் உதவியை நாடத்தான் செய்கிறார்கள்.
இணையத்தின் மூலம் கிடைக்கின்ற ஒரு தகவலை தமிழில் எழுதுவதை 'சுட்டு' என்று கருதுவதைவிட தாய்மொழிக்கு கடத்தி பெரும் வாசகப்பரப்பிற்கு ஒரு 'விக்டோரியன் பிரசண்டேஷனில்' கொடுத்து வாசிக்க வைக்கிறார்கள் என்றும் கருதலாம்.
டிஸ்கி 1:
நான் கிழக்கில் வேலை பார்க்கவில்லை. பார்க்கும் அபிப்ராயமும் வாய்ப்பும் இல்லை.
டிஸ்கி 2:
எனக்கு கிழக்கில் நண்பர்களும் இல்லை.
10:44 PM, December 28, 2008
//அடக்கி வாசித்தலையும் மீறி மங்கோலிய குழுக்களை குறிப்பிடும்போது தமிழக காங்கிரஸோடு ஒப்பிட்டது கைத்தட்டலை அள்ளியது.//
மங்கோலியக் குழுக்கள் மட்டுமல்ல, உலகின் அனைத்து பிரதேசங்களிலும்...ஒரு அலெக்ஸாண்டர் பிறக்கும்வரை, ஒரு அகேனாத்தன் பிறக்கும் வரை, இங்கு அசோகன் பிறக்கும் வரை,தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தான். ப்லடி டாக்ஸ்.
கிழக்கு பதிப்பகம் என்ன வரலாற்று ஆசிரியர்களையா உற்பத்தி செய்கிறது? நிச்சயம் கிடையாது.
12:18 PM, December 29, 2008
கிழக்குப்பதிப்பக கூட்டத்திற்கு வரமுடியவில்லையே என்ற ஏக்கம் உங்கள் பதிவுகளால் அகற்றப்படுகிறது. நன்று. தங்களுடைய நடுநிலையான விமர்சனப்பார்வை மிக விரைவில் வெகுஜனத்தால் அங்கிகரிக்கப்படும் என நம்புகிறேன்.
- சென்னைத்தமிழன்
7:49 PM, December 29, 2008
//இண்டர்நெட்டில் சுட்டு எழுதுகிறார்கள் என்ற வாதம் பொறுத்தமானது அல்ல.//
இன்ஸ்பிரேசன் வேறு பிட்ட்டிப்பது வேறு
10:35 PM, December 30, 2008
ஐயா செம்புலம்
திராவிட இனமும் (மத்தியத் தரைகடல் இனமும்) வெட்டாய்ட் இனமும் ஒன்றா? நடுவுநிலையோடு விளக்குங்களேன்
இருளர் மொழி திராவிட மொழியா? இப்போது அது வழக்கில் உள்ளதா?
4:17 AM, December 31, 2008
வரலாறுக்கு ஏது நீதியும்? அநீதியும்?
appo onga argument padi paathaalum 'reservation' kooda thevai illayngara
maadhiri aavudhey
2:09 PM, January 01, 2009
Regarding Aryan Invasion:
Social Scientist, Vol.24, No.1/3 (Jan - Mar 1996) pp 3-29
The Theory of Aryan Race and India: History and Politics
Author: Romila Thapar.
"The decline of the Indus cities in the early 2nd millennium BC is no attributed to environmental changes, the closing of trade with the Gulf and the collapse of political authority in the cities. However, the decline of cities is not an abrupt termination of the Indus civilization as there is some continuity of Harappan traits in post-Harappan cultures and an overlap at some sites in Punjab and Haryana. In relation to cultural traits from Iran and central Asia, the possiblities of small-scal migrations into India and the interaction of peoples and cultures over a long period of time, can be assumed. The emphasis is both on smallness and long duration as there was no massive migration such as to overwhelm the existing cultures. This is also much more likely to have been the mechanism by which the Indo-Aryan language came to be established in north-Western India"
2:49 PM, January 01, 2009
A small correction in the comment regarding aryan invasion: instead of "The decline of the Indus cities in the early 2nd millennium BC is no attributed ..."
Read as: The decline of the Indus cities in the early 2nd millennium BC is now attributed
9:43 AM, January 06, 2009
What's the answer to the question posed to Sempulam on December 30th? If it's not answered then Pravahan would stand justified.
lucky look? doesn't look so.
7:28 PM, May 05, 2009
காலச்சுவடு, மே 2008 இதழில் பதிவுகள் பகுதியைக் காண்க. http://www.kalachuvadu.com/ இருளர்களின் திருவிழா என்ற தலைப்பில் ஓவியர் கு.கலைச்செல்வன் பதிவுசெய்துள்ளார். அது ப்ரவாஹனின் பேச்சை உறுதி செய்கிறது. அதாவது இருளர்கள் கடற்கரையில் கூடுவது பற்றி. ப்ரவாஹனின் பேச்சைக் கேட்க: www.sishri.org
Post a Comment