டிசம்பர் மியூசிக் சீஸன் மாதிரி சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி புத்தகத் திருவிழா நடந்துவருகிறது. ஒருவார காலத்துக்கு தினமும் இரு புத்தக அறிமுகம் மற்றும் விமர்சனம் சரியாக மாலை 6 மணிக்கு தினசரி நடக்கும். முதல் நாளான நேற்று வால்டேரின் கேண்டிட் (தமிழில் : பத்ரி சேஷாத்ரி), சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம் (நாகூர் ரூமி) புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டது. இருபுத்தகங்களையும் மாலன் வெளியிட கேண்டீட் நாவலை இரா.முருகனும், சூஃபி வழி நாவலை ஜே.எஸ்.முருகனும் பெற்றுக் கொண்டார்கள்.
கேண்டிட் நூல் பற்றிய அறிமுகத்தை தந்து விமர்சித்தார் எழுத்தாளர் மாலன். வால்டேர் அந்நூலை எழுதிய சூழல், அந்நூல் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது போன்ற விவரங்களை சுவைப்பட கூறினார். மாலனுக்கெல்லாம் வயசு ஆகவே ஆகாதா? 35 வயது போன்ற தோற்றத்தோடே அவரை என் குழந்தைப் பிராயத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். மொழிப்பெயர்ப்பை பற்றி பொதுவாக மாலன் திருப்தி கொண்டிருந்தாலும் சிற்சில இடங்களை காரமாகவே விமர்சித்தார். "ஒரு நயாபைசா கூட இல்லே" போன்ற வார்த்தைகள் இதுபோன்ற நாவலுக்கு ஒட்டவில்லை. இதில் லாஜிக்கும் இல்லை, அந்தக் காலத்தில் ஏது நயா பைசா என்றார்.
அடுத்து 'சூஃபி வழி : ஒரு எளிய அறிமுகம்' நூலை பா.ராகவன் அறிமுகப்படுத்தி விமர்சித்தார். விமர்சித்தார் என்று சொல்லுவது கூட சரியல்ல, சம்பிரதாயத்துக்கு சில குறைகளை சுட்டிக் காட்டினார். ஆனால் அக்குறைகள் கூட எழுத்தாளருடையது அல்ல எடிட்டருடையது என்பது குறிப்பிடத்தக்கது (இந்நூலை ஒரே இரவில் 450 பக்கத்துக்கும் மேல் அசுரத்தனமாக வாசித்து எடிட்டியவரும் பா.ராகவன் தான்). உட்கார்ந்து கொண்டு மைக்கில் பேசுவது முறையல்ல என்று உட்கார்ந்து கொண்டே பேசினார்.
"சூஃபிக்களை மதக்கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பது தவறு. ஆண்டாள் கூட ஒரு சூஃபி தான்!" என்று ஒரு போடு போட்டவர், சாமியார்களுடனான தனது பால்யகாலத்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார். ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேலாக அவர் போட்டுக் கொண்டிருந்த பிளேடின் ஒருவரி சாரம் என்னவென்றால் "வாழ்க்கையை எளிமையாக, சுலபமாக வாழும் ஒரு வழி சூஃபி வழி".
இரு அறிமுக விமர்சனங்களுக்குப் பிறகு எழுத்தாளர்களுடன் வாசகர்கள் கலந்துரையாடல் சுவையாக நடந்தது.
மதக்கண்ணாடியோடு சூஃபி வழியை காண்பது தவறு என்று பாரா சொல்லியிருந்தாலும் மதத்தை அடிப்படையாக வைத்தே சில கேள்விகள் எழுப்பப்பட்டது. எப்படிப்பட்ட பவுன்சராக இருந்தாலும் அசால்டாக தன்னுடைய என்.எஸ்.கே. பாணி பாடி லேங்குவேஜ் மற்றும் நகைச்சுவைப் பேச்சு மூலமாக நாகூர்ரூமி சிக்ஸர் சிக்ஸராக அடித்துக் கொண்டிருந்தார்.
மாலனின் 'நயா பைசா' விமர்சனத்தை இரா.முருகன் மறுத்தார். டிரான்ஸ்லேஷனாக இல்லாமல் டிரான்ஸ் கிரியேஷனாக பத்ரி உருவாக்கி இருப்பாரேயானால் அதை பாராட்டுகிறேன் என்றார். 'இல்லை. இந்நாவல் டிரான்ஸ்லேஷனாக தான் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்று மாலன் மறுமொழி சொல்ல, பத்ரி அதை ஆமோதித்தார்.
பேமானி தோற்றத்தில் இருந்த ஒருவர் 'சமீபத்தில் 1750களில் உருவாக்கப்பட்ட வால்டேரின் கேண்டீட்டுக்கு யாரிடம் காப்புரிமை இருக்கிறது?' என்று கேள்விகேட்டு அரங்கை திகிலுக்குள்ளாக்கினார். இப்புத்தகம் முதன்முறையாக கட்டன்பர்க் நிறுவனத்தால் அச்சிடப்படும்போதே யார் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஓபன்சோர்ஸாக அச்சிட்டார்கள் என்று மாலன் விளக்கினார். ஒருவர் மறைந்து அறுபது ஆண்டுகளாகிவிட்டால் அவரது எழுத்துக்கள் ஆட்டோமேட்டிக்காக உலகமயமாகிவிடும் என்றார் பத்ரி. கடுங்குளிரோடு நிறைவடைந்தது மொட்டைமாடியில் முதல்நாள்.
இரண்டாம் நாளான இன்று 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் (யுவகிருஷ்ணா)' சோம.வள்ளியப்பன் அவர்களாலும், 'மால்கம் எக்ஸ் (மருதன்)' பா.ராமச்சந்திரன் அவர்களாலும் மதிப்பிடப்படுகிறது.


10 பின்னூட்டங்கள்:
12:06 PM, December 23, 2008
வாழ்த்துக்கள் லக்கி.
அப்புறம் முக்கியம்மன விசயாம்
சன் டைரக்டில் இன்று கலைஞர் செய்திகள், இசையருவி சேனல்கள் கொடுத்துவிட்டார்கள்
12:40 PM, December 23, 2008
இன்னும் பல வெற்றிகள் உங்கள் வசம் வர வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா.
2:59 PM, December 23, 2008
வாழ்த்துக்கள் யுவா...
3:15 PM, December 23, 2008
vazthukkal !!!!!!!!!
3:56 PM, December 23, 2008
வாழ்த்துக்கள் லக்கி..
4:13 PM, December 23, 2008
காப்பி ரைட் பற்றிக் கேள்வி கேட்டவர், வலைப் பதிவரா ? சமீபத்தில் வார்த்தையாடல் கண்டதால் கேட்கிறேன். வாழ்த்துக்கள் லக்கி லக்
சமயந்த ராஜீவன்
4:50 PM, December 23, 2008
Looking forward for your book, Yuva!!!
1:19 AM, December 24, 2008
வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா (எ)லக்கிலுக்!!!
11:16 PM, December 24, 2008
"ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேலாக அவர் போட்டுக் கொண்டிருந்த பிளேடின் ஒருவரி சாரம் என்னவென்றால் "வாழ்க்கையை எளிமையாக, சுலபமாக வாழும் ஒரு வழி சூஃபி வழி"."
"எப்படிப்பட்ட பவுன்சராக இருந்தாலும் அசால்டாக தன்னுடைய என்.எஸ்.கே. பாணி பாடி லேங்குவேஜ் மற்றும் நகைச்சுவைப் பேச்சு மூலமாக நாகூர்ரூமி சிக்ஸர் சிக்ஸராக அடித்துக் கொண்டிருந்தார்"
- Very nice
7:25 PM, December 31, 2008
எங்கே லக்கி ரொம்ப நாளாக் காணவில்லையே, விடுமுறையில் சென்றுவிட்டீர்களா?
சிலம்பாட்டம் பார்க்கவேண்டும், விமர்சனத்திற்க்காக காத்திருக்கின்றேன்.
-குண்டு
Post a Comment