
அது 1996. பாராளுமன்றத் தேர்தலுக்கான நேரம்.
மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் ஐந்து ஆண்டுகளை பல தடைகளை மீறி பூர்த்தி செய்கிறார் நரசிம்மராவ். பாஜகவும் விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறது. 91லேயே பலமிழந்து விட்டாலும் மூன்றாவது அணி கனவிலும் அவரை அச்சுறுத்திக் கொண்டிருந்த நேரம். அந்த தேர்தல் வெற்றி ஒன்றே அவரது பல்லாண்டு அரசியல் உழைப்புக்கு கிரீடமாக அமையும்.
தமிழக அரசியலும் சூடுபிடித்த நேரமது. 91ல் காங்கிரஸ் கூட்டணியால் ஜெயித்த ஜெயலலிதா கறுவேப்பிலையாக காங்கிரசை பயன்படுத்திக் கொண்டார். ஆட்சிக்கு வந்ததுமே காங்கிரஸை அவமதிக்கும் போக்கினை கைக்கொண்டார். உச்சமாக 1992 மதுரை வெற்றிவிழா மாநாட்டில் 'தலையில்லாத முண்டத்தால் நான் ஆட்சிக்கு வரவில்லை' என்று கொக்கரித்தார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு தலைவர் வெளிப்படையாக இறுமாப்பாக நடந்துகொண்டதின் உச்சம் அது.
தமிழக காங்கிரஸ் தலைவராக காகாதேகா புகழ் குமரிஆனந்தன் இருந்தார். குறிஞ்சிப்பூ மாதிரி காங்கிரஸிலும் சுயமரியாதை கொண்ட தலைவர்கள் எப்போதாவது பூப்பதுண்டு. உதாரணம் : வாழப்பாடி இராமமூர்த்தி. ஓவர் சுயமரியாதை காங்கிரஸுக்கு ஆகாது. எனவே ஓரம் கட்டப்பட்டிருந்தார். மூப்பனார் கமிட்டித் தலைவராக இல்லாதிருந்தாலும் தமிழக காங்கிரஸை பொறுத்தவரை இருந்த ஒரே செல்வாக்கான தலைவர்.
நரசிம்மராவுக்கு மீண்டும் அதிமுகவோடு கூட்டுசேர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. வடக்கில் மாயாவதிக்கு அப்போது பெருகிக்கொண்டிருந்த செல்வாக்கு மாதிரி ஜெ.வுக்கும் தமிழ்நாட்டில் செல்வாக்குண்டு என்று அவர் நினைத்திருக்கலாம். அதற்கு வாகாகவே தங்கபாலு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆக்கப்பட்டிருந்தார். மூப்பனார் போன்ற தலைவர்களுக்கு அதிமுகவோடு கூட்டணி வைப்பதில் இஷ்டமில்லை. ராஜீவை அவமானப்படுத்திய ஜெ.வோடு கூட்டணியா?
இங்குதான் ரஜினிகாந்த் சீனுக்கு வருகிறார். 92ஆம் ஆண்டு அண்ணாமலை படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம். ஜெ. வசிக்கும் போயஸ் கார்டனில் தான் ரஜினிகாந்தின் வீடும் இருந்தது. ஜெ. வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரமே அவரது வீடு இருக்கும். கேம்பாகோலா வளாகத்தில் இரவுபகலாக படப்பிடிப்பு நடந்து வந்தது. தனது குருநாதர் பாலச்சந்தரின் சினிமா எதிர்காலத்தையொட்டி மிகுந்த ஈடுபாட்டோடு நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி.
காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவது ரஜினியின் வழக்கம். அண்ணாசாலையிலிருந்து கதிட்ரல் சாலைவழியாக வருபவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு அருகில் திரும்பி போயஸ் கார்டனில் நுழைவார். ஒருநாள் மறிக்கப்பட்டார். சி.எம்.வீடு இருக்கிற பகுதியில் யாரும் காரை ஓட்டிக் கொண்டு செல்லக்கூடாது.
"என் பெயர் ரஜினி, என்னை தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் சொல்வார்கள்!"
"பிரச்சினையில்லை. உங்கள் பெயர் நரசிம்மராவாக இருந்தாலும் இங்கே கார் ஓட்டிச் செல்லக்கூடாது!"
"என் வீட்டுக்கு நான் எப்படி போவது?"
"நடந்து செல்லுங்கள்!"
மனதுக்குள் எரிமலை வெடித்தது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தப்பிறகு வெளிப்படையாக தமிழ்நாட்டில் அவருக்கு நடந்த பெரிய அவமானம்.
1995.
ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா தமிழ் திரையுலகின் வசூல் சாதனைகளை முறியடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஜெ.வின் அமைச்சரவையில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் அந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
எல்லோரும் வழக்கமாக படத்தை வாழ்த்திப் பேசிச்செல்ல ரஜினிகாந்த் குமுறிவிட்டார்.
"தமிழ்நாட்டில் ஒரு பிரபல இயக்குனரின் வீட்டிலேயே குண்டுவெடிக்கிறது. தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறது?"
கூட்டம் கைத்தட்டியது. கூட்டத்துக்கு வந்த எல்லோருமே அப்பேச்சை ரசித்தார்கள். ரஜினியின் பேச்சை மறுத்துப் பேசவில்லை என்று காரணம் காட்டி ஆர்.எம்.வீ அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார்.
அடுத்து ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த முத்து படத்துக்கு ஏகப்பட்ட சிக்கல் ஆளும் தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்டது.
"நான் பாட்டுக்கு என் வழியிலே போய்க்கிட்டிருக்கேன். என்னை ஏன் தேவையில்லாம சீண்டறீங்க?" என்று படத்தில் வசனம் பேசினார் ரஜினி. இதுமட்டுமா? "நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துலே கட்டாயம் வருவேன்!" என்று ரசிகர்களை உசுப்பேத்தினார்.
செவாலியே சிவாஜிகணேசனுக்கு பாராட்டுவிழா. சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவுக்கு ரஜினியும் அழைக்கப்பட்டிருந்தார். பேசியவர்கள் ’இந்தியாவின் மார்லண் பிராண்டோ’ என்ற ரேஞ்சுக்கு சிவாஜியை வாழ்த்திச் செல்ல, அதிரடியாக மைக் பிடித்தார் ரஜினிகாந்த்.
”சென்னையில் அமைக்கப்பட்ட சினிமா நகரத்துக்கு தமிழ் சினிமாவின் முகவரியான சிவாஜி பெயர் ஏன் வைக்கப்படவில்லை?”
ஜெ.வின் முகம் கோவைப்பழமாய் சிவந்தது. ஜெ - ரஜினி மோதல் வெளிப்படையாக வெடித்ததாக பத்திரிகைகள் எழுதின.
மீண்டும் 1996. பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் தமிழகத்தில் நடக்கப்போகிற நேரம்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். 'தலைவா வா. தமிழனுக்கு தலைமையேற்க வா' போஸ்டர் ஒட்டினார்கள். கலைஞர், மூப்பனார் இரு தலைவர்களுமே ரஜினிக்கு மிக நெருங்கியவர்கள். இவர்கள் வாழும் காலத்தில் இவர்களை எதிர்த்து ரஜினி அரசியல்கட்சி தொடங்கமாட்டார் என்றும் சிலர் சொன்னார்கள். ரஜினியை காங்கிரஸில் வளைத்துப் போட்டு ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் மூப்பனாருக்கு இருந்தது. முதல்வர்? வேறு யார்? ரஜினிகாந்த் தான்.
ரஜினியிடம் தன் எண்ணங்களை மூப்பனார் ரகசியச் சந்திப்புகளில் வெளிப்படுத்தினார். ரஜினி பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்துப் பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தந்தார். அந்த நாளும் வந்தது. பிரதமர் அலுவலகத்துக்கு வெள்ளை குர்தாவில் ரஜினி ஆஜரானார். பிரதமரின் அறைக்குச் சென்றவர் ஸ்டைலாக வணக்கம் தெரிவித்தார்.
(தொடரும்)


28 பின்னூட்டங்கள்:
1:35 PM, December 19, 2008
Me the first
Friend from Bangalore
1:38 PM, December 19, 2008
Adhu Sari
Rajini varuvara - illaya
Sariya sollungappa
1:50 PM, December 19, 2008
கிழக்கு வாடை அடிக்குது லக்கி... :-)
2:07 PM, December 19, 2008
Hello Time Pass,
You have good sence of writing stories. Try in cinema industry you will be come popular.
"என் பெயர் ரஜினி, என்னை தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் சொல்வார்கள்!" "பிரச்சினையில்லை. உங்கள் பெயர் நரசிம்மராவாக இருந்தாலும் இங்கே கார் ஓட்டிச் செல்லக்கூடாது!" "என் வீட்டுக்கு நான் எப்படி போவது?" "நடந்து செல்லுங்கள்!" காரை தெருமுனையில் விட்டுவிட்டு அமைதியாக நடந்துச் செல்ல ஆரம்பித்தார். மனதுக்குள் எரிமலை வெடித்தது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தப்பிறகு வெளிப்படையாக தமிழ்நாட்டில் அவருக்கு நடந்த பெரிய அவமானம்.
2:11 PM, December 19, 2008
so many factual errors!
- Ramki
2:13 PM, December 19, 2008
:-))))
2:32 PM, December 19, 2008
//காரை தெருமுனையில் விட்டுவிட்டு அமைதியாக நடந்துச் செல்ல ஆரம்பித்தார்.//
மிகப் பெரிய கூட்டம் சேர்ந்தது. ரஜினியை கெஞ்சி கூத்தாடி அவர் காரிலேயே போகும்படிக்கு செய்தார்கள். இந்த உண்மையையும் நீங்கள் எழுதியிருக்கலாம்.
2:38 PM, December 19, 2008
//ஆர். முத்துக்குமார் said...
கிழக்கு வாடை அடிக்குது லக்கி... :-)
//
Absolutely right. I got the same feeling when I read.
-Anand
2:54 PM, December 19, 2008
நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ரஜினி ரசிகர்களை தாஜா பண்ண ஒரு உண்மை தி.மு.க.தொண்டனின் அணில் முயற்சி.
லக்கி, நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையில் முழு நேர பிரச்சார பீரங்கியாக மாறி விடுவீர்கள் போலிருக்கிறது.
`கடமையை செய் பலனை எதிர்பாராதே' இது தான் ஞாபகத்தில் வருகிறது.
3:03 PM, December 19, 2008
Factual errors:
- In 1996, TNCC President was Kumari Ananthan.
- Jayalalithaa did not participate in the 175th day celebration of 'Baadsha'. Only RMV was there. Detractors of RMV used that opportunity to say that he didn't retaliate Rajnikanth's speech then and there. Moreover, Rajnikanth spoke only about 'vedikundu kalaacharam' in that function. He didn't talk abt naming the film city.
- The occasion where Rajinikanth talked abt the film city was the felicitation function for Sivaji Ganesan (felicitated for 'Chevalier' title). That was in MAC stadium in the presence of Jayalalithaa.
3:37 PM, December 19, 2008
"கூட்டம் கைத்தட்டியது. கூட்டத்துக்கு வந்த எல்லோருமே அப்பேச்சை ரசித்தார்கள். ஜெ.வைத் தவிர. கோபத்தில் அவரது முகம் கோவைப்பழமாய் சிவந்தது."
-பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தீர்களோ...
"என் பெயர் ரஜினி, என்னை தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் சொல்வார்கள்!" "பிரச்சினையில்லை. உங்கள் பெயர் நரசிம்மராவாக இருந்தாலும் இங்கே கார் ஓட்டிச் செல்லக்கூடாது!" "என் வீட்டுக்கு நான் எப்படி போவது?" "நடந்து செல்லுங்கள்!" காரை தெருமுனையில் விட்டுவிட்டு அமைதியாக நடந்துச் செல்ல ஆரம்பித்தார்.'
- இது நடந்தது பட்டப் பகலில். செய்தி வெளியானதெல்லாம் நினைவில்லையோ...
ரஜினிகாந்த்தானே... யாரும் எழுதலாம்... என்ன வேண்டுமானாலும். ரஜினி வந்தா கேட்கப் போகிறார் என்ற தைரியம் உங்களைப் போன்றவர்களுக்கும், அவருக்கு ஆதரித்து onlyrajini போன்ற கேவலமான தளங்களை நடத்தும் சிலருக்கும்.
அது சரி... காயத்ரி போன்ற அரைவேக்காடுகள் வாழ்க்கை வரலாறு என்று எதையோ கிறுக்கும்போது (ரஜினி இதையெல்லாம் படிப்பதில்லை என்பதற்கு அந்த வாழ்க்கை வரலாறே பெரிய சாட்சி!) நீங்கள் எழுதுவதில் தப்பில்லை...
இங்கே ஒரு நண்பர் கூறியது போல சினிமாவுக்கு முயற்சியுங்கள்...
கடவுளே... கடவுளே!
-படிக்காதவன்
4:31 PM, December 19, 2008
ஒன்னுமே செய்யமுடியாதுன்னு எப்படி சொல்லமுடியும்...
காமெடி, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த நல்ல ஜனரஞ்சக படங்களை (மட்டுமே) தரமுடியும்
4:53 PM, December 19, 2008
:)))
6:19 PM, December 19, 2008
appuram ennaachu...
7:11 PM, December 19, 2008
Indian Voter, Ramki
நீங்கள் சுட்டிக்காட்டிருக்கும் சில Factual errorsஐ திருத்தியிருக்கிறேன்.
ஏதோ பார்த்து போட்டு கொடுங்க பாஸூ :-)
7:14 PM, December 19, 2008
நீங்க வலையுலகில் ஏற்கனவே பிரபலமாகத்தானே இருக்கீங்க..அப்புறம் எதற்கு ரஜினியைப்பற்றி....???
மேலே நண்பர்கள் சொல்லியிருப்பதைப் போல தேர்தலுக்காகவா?..
”கடமையைச் செய் பலனை எதிர்பார்”
7:19 PM, December 19, 2008
இன்னொரு விசியம்...
முதலில் தமிழனால் தமிழனுக்கு (இனிமேலாவது) என்ன செய்யமுடியும்னு எழுதிட்டு (அதுதான் தொடரும் போடறீங்களே)..ரஜினிக்கு வரலாமே!!!
7:22 PM, December 19, 2008
ரஜினியோட நிலையைப் பார்த்தீங்களா....
7:31 PM, December 19, 2008
நல்ல தொடக்கம் லக்கி. ஆ.வி சுவடுகள் படிக்கிறாப்ல இருக்கு
7:36 PM, December 19, 2008
///முதலில் தமிழனால் தமிழனுக்கு (இனிமேலாவது) என்ன செய்யமுடியும்னு எழுதிட்டு (அதுதான் தொடரும் போடறீங்களே)..ரஜினிக்கு வரலாமே!!!////
கிருஷ்னகிரியில் பிறந்த ரஜினி தமிழந்தான்...
ரஜினிமேல் உள்ள துவேஷத்தை வேற எங்கயாவது போய் வாந்தி எடுக்கவும்...
7:37 PM, December 19, 2008
துக்ளக் சோ தமிழர் என்று ஒத்துக்கொள்ளும் தமிழன் ரஜினியை ஒத்துக்கொள்ளமாட்டானா என்ன?
7:38 PM, December 19, 2008
தோழர், சென்ற கொமெண்டு அனானியாக விழுந்துவிட்டது, அதனை அதர் ஆப்ஷனில் போட்டுவிடவும் :))))
9:12 PM, December 19, 2008
//கிருஷ்னகிரியில் பிறந்த ரஜினி தமிழந்தான்...
ரஜினிமேல் உள்ள துவேஷத்தை வேற எங்கயாவது போய் வாந்தி எடுக்கவும்...//
செந்தழல் வாழ்க!.வளர்க!.....
1:58 AM, December 20, 2008
//ஜெ.வின் முகம் கோவைப்பழமாய் சிவந்தது//
அவ்ளோ சிவப்பா...!!!!
கோவைப்-பழம் :)
12:27 PM, December 20, 2008
என்ன, ரஜினியால் தமிழனுக்கு என்ன செய்ய முடியும் என்ற தலைப்பா..?
உடனே தலைப்பை மாற்று.. ஏன் செய்ய முடியாது.. பட்டியில் இடுகிறேன்
1) முதலில் அவர் ரசிகர்களுக்கு லோக்கல் வாரியத் தலைமை முதல், மந்திரி என்று
எத்தனை பதவிகள் வாங்கித் தரமுடியும்.. (ஸ்ஸ் ஆ ஆ. )
2) கடவுள் இல்லை என்று முற்போக்கு பேசும் வாய்களை மூட முடியும்..
3) இமயம் முதல் குமரி வரை உள்ள சாமியார்களை அழைத்து நாட்டில் சாமி
ஆட வைத்து நாட்டில் அமைதி தவழச் செய்ய முடியும்..
4) BJP-யை வளர்த்து விட முடியும்..
5) சோ வை அரசாங்க ஆலோசகராக்க முடியும்
6) தமிழக இளைஞர்களை ஆன்மிக வழியில் அழைத்துச் சென்று முடிந்தால்
சனாதனத்தையும் புகட்ட முடியும்..
இன்னும் எத்தனை முடியுமோ...
12:53 PM, December 22, 2008
சீக்கிரம் தொடருங்க லக்கி
12:57 PM, December 22, 2008
/*- இது நடந்தது பட்டப் பகலில். செய்தி வெளியானதெல்லாம் நினைவில்லையோ... */
படிக்காதவன் அய்யா , லக்கி இரவில் நடந்ததாக எழுதலியே...
1:06 PM, December 28, 2008
Good. There are alot of ways to describe a story. But, inorder to capture the reader's attention, Writer uses unwanted descriptions tell a factual incidents. It will lead to Factual Error.
Post a Comment