
இயக்கம் - கேமிரா - நடிப்பு - இசை மற்ற தொழில்நுட்ப இத்யாதிகள் என்று ஒரு திரைப்படத்துக்கு சிறப்பு சேர்க்கும் எல்லா காரணிகளுமே மிக சிறப்பாக அமைந்திருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சிறப்பு. ஆனால் இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.
அப்பாவின் கல்லூரி காதலில் ஆரம்பித்து அவரது இறுதி மூச்சு வரைக்கான கதை என்று எடுத்துக் கொண்டாலும் இதில் மகன் வளர்வது, காதலிப்பது, மேட்டர் முடிப்பது, தண்ணியடிப்பது, டோபு அடிப்பது மாதிரியான கருமங்கள் எதற்காக? மகனின் பார்வையில் அப்பா என்ற கான்செப்டை எடுத்துக் கொண்டாலும் அப்பாவுக்கு நேரடி தொடர்பில்லாத மகனின் அந்தரங்கம் காட்சியாக்கப்பட்டிருப்பது எல்லாம் அனாவசியம்.
சுவாரஸ்யம் குறைவான ஒருவரின் வாழ்க்கை வரைபடம் இத்திரைப்படம். அனேகமாக இயக்குனர் கவுதமின் சொந்தக்கதையாக இருக்கலாம். மகன் சூர்யாவின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் அனைத்திலும் அச்சு அசலாக கவுதம் வாசுதேவ் மேனன். இயக்குனருக்கு சினிமா சென்ஸ் ரொம்பவும் அதிகம். தனித்தனி காட்சிகளாக பார்த்தால் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது புலப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்றுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்கும்போது கொட்டாவிதான் வருகிறது. சாரி கவுதம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல்கல். இப்படத்துக்கு அவர் செலவழித்திருக்கும் உழைப்பையும், சிரத்தையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பா கேரக்டருக்கு ரகுவரன்; மகன் கேரக்டருக்கு கமல்ஹாசன் ஆகியோரின் உடல்மொழியை அப்பட்டமாக பின்பற்றுகிறார். இயக்குனர் கமல்ரசிகர் என்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. டீனேஜ் சூர்யா பைலட்டில் பார்க்கும் படம் ‘சத்யா'. அப்பா, மகன் இரண்டு கேரக்டரையும் சூர்யாவே எடுத்து நடித்தது ஏன் என்பதை அவராலும், இயக்குனராலும் ஜஸ்டிஃபை செய்யவே முடியாது. வேறொரு நடிகரை அப்பாவாக நடிக்க வைத்திருந்தால் தயாரிப்புச் செலவாவது குறைந்திருக்கும். ஆயினும் தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை.
வானில் ஹெலிகாப்டரில் மேஜர் சூர்யா பறக்கிறார் என்றால் அதை வானிலேயே சென்று படமாக்கும் மிஸ்டர் பர்ஃபெக்ட் இயக்குனர். அந்த ராணுவகாட்சிகளுக்கான டோன் அபாரம். திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டே பார்ப்பார்கள். அமெரிக்க காட்சிகளும், பாடல்களும் வாவ். படத்தைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆமையை விட மெதுவாக நகரும் காட்சிகள் ஏற்படுத்தும் கடுப்பின் எல்லைக்கு அளவேயில்லை. இயக்குனருக்கு படத்தை முடிக்க மனமேயில்லாமல் முடித்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் பத்துமணி நேரத்துக்கு படமெடுத்திருப்பார் போலிருக்கிறது. இறுதிக்காட்சிக்கு இடையே தேவையில்லாமல் நுழைக்கப்பட்ட இராணுவமீட்பு சண்டை சூப்பர் என்றாலும் தேவையே இல்லை.
சமீரா ரெட்டி என்ற சப்பை ஃபிகரை எப்படித்தான் சூர்யாவுக்கு ஜோடியாக சேர்த்தார்களோ? காதலை சொல்லும் கட்டத்தில் பூ மாதிரி முகத்தை மலரவைக்க வேண்டாமா? ரியாக்ஷன் காட்டுவதில் கஞ்சத்தனம். நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு குத்து ரம்யா (எ) திவ்யாவின் எண்ட்ரி வருவதால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும் பார்ப்பது தமிழ்படமா? ஆங்கிலப் படமா என்ற சந்தேகத்தை தருகிறது. ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம்.
சிம்ரன் இளமையாக தோன்றும் காட்சிகள் நிறைவு. வயதான கெட்டப் மோசமென்றாலும், நடிப்பில் சோடைபோகவில்லை. கிராபிக்ஸில் பழைய சென்ட்ரல், அந்நாளைய ஸ்பென்ஸர் பிளாஸா ஆகியவற்றை பாடலில் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் 60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் அவை. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது, மேஜிக்கும் இருக்கிறது. சராசரி தமிழ் சினிமா ரசிகனால் பார்க்கவே முடியாத படமிது. தெலுங்கிலும் டப் செய்திருக்கிறார்களாம், அங்கே திரையை ரசிகர்கள் கிழிக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம்.
வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!


29 பின்னூட்டங்கள்:
1:52 PM, November 15, 2008
நமக்குள்ள ஓரே அலைவரிசை போலருக்கு லக்கி.. நல்ல விமர்சனம்
1:57 PM, November 15, 2008
படத்தில் இருப்பது அக்கா நயன்தாரா... அருமையான கோ.....ணம்....
2:02 PM, November 15, 2008
பாடகி சின்மயி , சமிரா ரெட்டிக்கு டப்பிங் கொடுத்து உள்ளார்களாம், (உபயம்-சின்மயி வலை பதிவு),
எவ்வாறு உள்ளது குரல்.
குப்பன்_யாஹூ
2:11 PM, November 15, 2008
//மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும்//
அக்மார்க் லக்கி வர்ணனை!!!!சூப்பர்..
//இயக்குனருக்கு படத்தை முடிக்க மனமேயில்லாமல் முடித்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் பத்துமணி நேரத்துக்கு படமெடுத்திருப்பார் போலிருக்கிறது//
exactly!!!!!!
2:12 PM, November 15, 2008
//ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம்.//
ஹி ஹிஹிஹிஹி
நீங்க, அதிஷா, கேபிள் சங்கர் ஒரே மாதிரியாக எழுதியுள்ளீர்கள்
பீச்சுக்கு வர ரெடியாயிட்டீங்களா?
2:31 PM, November 15, 2008
//மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும் பார்ப்பது தமிழ்படமா? ஆங்கிலப் படமா என்ற சந்தேகத்தை தருகிறது. ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம்.//
நான் கூட எழுதணும்னு நினைச்சேன். ஹூம் நல்லாத்தான் இருந்திருக்கும்..
2:37 PM, November 15, 2008
சங்கர் சாரே!
சில விமர்சனங்கள் படித்தேன். உலகப்படம் ரேஞ்சுக்கு இதை பேசுகிறார்களே?
ஒருவேளை நாமெல்லாம் நாட்டுப் புறத்தான்களோ? :-(
2:56 PM, November 15, 2008
சேம் பிளட்:((
3:16 PM, November 15, 2008
இந்தப் படம் பத்து பேர் ரூம் போட்டு தனியா பார்த்து சிலாகிச்சிக்க எடுத்த பாடம் போல...
முதலில் இது தமிழ்ப்படமே அல்ல.. ஆங்கிலப்படங்களையே முழுக்க முழுக்க தமிழ் டப்பிங்கில் வெளியிடும் காலம் இது.
உலகசினிமானு இத குருடன் கூட சொல்ல மாட்டான்...
3:35 PM, November 15, 2008
லக்கி அந்த போட்டோவில் இருப்பது ஜோதிகா, அல்லது ஜோதிகா தங்கை!
5:20 PM, November 15, 2008
இது ஒரு பு..... படம்.......
நாயகிகள் வாயில் விட்டது போல் தமிழ் பேசுவது......!உங்க டுமிழ் நாட்டில் வடு வர்க்கம் இப்படிதான் உள்ளத...? உலக தரம் படம் எடுக்கிறேன் x2 30% டமிழும் 60% ஆங்கிலமும் 10 % எதாவது எலவும் பேசி எங்க எலவை எடுக்கரான்கள்....
7:21 PM, November 15, 2008
வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!
அவ்லோ வலியா?
போச்சா 26 கோடி
ஓகெ நம்ம ப்ளாக் பாருங்க, nalla manithari patri poturuken.
kaveriganesh.blogspot.com
9:40 PM, November 15, 2008
டீனேஜ் சூர்யா பைலட்டில் பார்க்கும் படம் ‘சத்யா'/////////
நாங்க களத்தூர் கண்ணம்மா கூட பார்ப்போம்
9:42 PM, November 15, 2008
60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் //////////////
இது ஒரு சரித்திர படமுங்க
10:19 PM, November 15, 2008
அட, ஒரு நாள் முன்னாடி இந்த விமர்சனத்தை படித்திருந்தால் $40 லாபமாக இருந்திருக்கும். DVDயில் $2க்கு பாத்திருக்கலாம்.
ஓக்கலகோமா குண்டு வெடிப்பு, காதலி மரணம், மேஜர் சூர்யா தந்தையின் மரணதிற்க்கும் வராமல் சாப்பரில் பறந்தபடி மிஷனை தொடர்கின்றார். ஒரு கணம், காதலியின் மரணத்திற்க்கு பழிவாங்க தீவிரவாதிகளைத் தேடி ஆப்கானிஸ்தான் போகின்றாரோ என பயந்து விட்டேன். நல்லவேளை அப்படியேதும் நடக்கவில்லை. - ஒருவேளை அப்படி நடந்திருந்தால் படம் தப்பித்திருக்குமோ என்னமோ? :-)
கெளதம் மேனனுக்கு ஏன் இந்த தேவியில்லாத வேலை. அவருக்கு ஏற்றது அக்ஷ்ன் படங்களே, அதுவுடன் நின்றிருக்கலாம். இவரின் அடுத்த படம் அஜித்துடனுடன் சிவாஜி புரொடக்ஷனில் ஒரு காதல் படமாம். அஜித்திற்க்கு இப்போதே அனுதாபங்கள்
குண்டு -
1:33 AM, November 16, 2008
நல்ல வேலை நான் செலவு பண்ணினது $15 மட்டுமே. SFO,திருச்சி,சென்னை,டெல்லி,காஷ்மீர்,ஒக்லகாமா,army என எல்லா ஊரிலயும் சூட்டிங் எடுத்தாச்சு. பாவம் சூர்யா உழைப்பு. பாடல்கள் அருமை, ஆன அதை படமாகிய விதமும் மட்டம்.
4:39 AM, November 16, 2008
athu namba pattam nadigai(9thaara) thaney
http://www.flickr.com/photos/23876935@N05/
11:57 AM, November 16, 2008
ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம்.
See Thoondil but you may not be satified :).
3:16 PM, November 16, 2008
60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் //////////////
சுரேஷ் said..
இது ஒரு சரித்திர படமுங்க///
ROTFL.. ரசித்துச்சிரித்தேன்..
4:57 PM, November 16, 2008
நானும் உங்க பேரு மாதிரி,
சும்மா ஒரு டைம்பாஸ் மச்சி! நு
இந்த படத்துக்கு போனேன்,
உண்மையா - ரொம்ப நம்பி போய்டேன்...
மொத வசனதுலையே வலிச்சுது...
சரி - போக போக கதை வரும்னு ...
ரொம்ப நேரம் காத்திருந்தேன்...
இண்டெர்வல் கூட வரல (அட எனக்கு இல்லேங்க - படத்துல) .
.................
என்னாது புள்ளின்னு பாக்றீங்களா ,
இண்டெர்வல் அப்பறம் ரொம்ப கன்னகட்டிடுசி...
சூர்யா வோட பேஷன் ஷோ - மூனு மணி நேரம் காமிச்சா ...
என்னத்த சொல்ல...
6:14 PM, November 16, 2008
வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!
ஹி,ஹி,ஹி,ஹி,ஹி சூப்பரப்பு
9:13 PM, November 16, 2008
தல தப்பிச்சுட்டாரு...
கவுதம்-அஜித் படம் drop ஆயிடிச்சி....
///சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல்கல். இப்படத்துக்கு அவர் செலவழித்திருக்கும் உழைப்பையும், சிரத்தையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//
100% truth
10:42 AM, November 17, 2008
எனக்கு அவ்ளோ மோசமா தெரியல. இ...ழு...த்தாலும், போரடிக்காத இழுவை ;)
3:39 PM, November 17, 2008
வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்//
Ravee said...
நானும் உங்க பேரு மாதிரி,
சும்மா ஒரு டைம்பாஸ் மச்சி! நு
இந்த படத்துக்கு போனேன்,
உண்மையா - ரொம்ப நம்பி போய்டேன்...
மொத வசனதுலையே வலிச்சுது...
சரி - போக போக கதை வரும்னு ...
ரொம்ப நேரம் காத்திருந்தேன்...
இண்டெர்வல் கூட வரல (அட எனக்கு இல்லேங்க - படத்துல) .
.................
என்னாது புள்ளின்னு பாக்றீங்களா ,
இண்டெர்வல் அப்பறம் ரொம்ப கன்னகட்டிடுசி...
சூர்யா வோட பேஷன் ஷோ - மூனு மணி நேரம் காமிச்சா ...
என்னத்த சொல்ல//
மேற்சொன்ன இரண்டையும் படித்துவிட்டு -ஹி - ஹி - ஹி
10:05 PM, November 17, 2008
yabba intha padaththai 120 rupai kututthu athuvum second show thookkatha jetuthukkununnu vera parthen. athuvum palani poittu vara vazhiyila trichila yesterday night than parthen. rombavum kustam mda saami. padam edukkiran entra perla, hero va vittu katha solla vaikkirathu. naama ivanga solra kathaya ketkirathukka porom. ulaga cinema ntra perla vara vara tamil cinema aatkal panra alumbu irukke. ivanuga ellam remake pantraththukkuthan layakku. paattu etho parava illa. sameera reddy structure nalla thane irukkuthu athu vena rasikkalam.
12:42 AM, November 18, 2008
//வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!//
நச்
2:06 PM, November 18, 2008
'வாரணம் ஆயிரம்' ஒரு தரமான தமிழ் படம். பெரிய விஷயங்களை அடக்கிய சிறிய படம். நல்ல நுணுக்கமான படைப்பு. ஏன் தமிழ் நாட்டு தமிழர்கள் இப்படிப்பட்ட தரமான தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை. இரசிகர்களாகிய நீங்கள் உங்கள் இரசிக்கும் தரங்களை மேம்படுத்த மாட்டீர்களா? காலபோக்கில் உங்களைப் போன்ற தரமில்லா இரசிகர்களால்தான் தமிழ் நாட்டிற்குப் பேரிழிவு! கவனம்!
2:20 PM, November 19, 2008
கெளதம், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ், என்று வெற்றி கூட்டணி கொண்ட படமாயிற்றே என்று எதிர்பார்ப்புடன் போயி சரியான தலை வலியுடன் திரும்பியது தான் மிச்சம். படத்தின் ஒரே சிறப்பு அம்சம், சூரியாவின் இள மற்றும் கிழ வேடங்கள் மட்டுமே.
இங்கும் அங்கும் அலை பாயும் மட்டமான திரைகதை அமைப்பில், கெளதம் என்ன சொல்ல முயன்றார் என்று ஒன்றும் புரிய வில்லை. சிம்ரனை அந்த கால கெட்டப்பில் பார்த்து ஒரு சுகம். சமீரா ரெட்டி போன்ற ஒரு இது போன பிகரை, பொய் சூர்யா இந்த அளவு நேசிக்க காரணம் என்ன என்று யோசித்து தலையை பிய்த்து கொள்ளாதது தான் மிச்சம். அவருக்கு குத்து ரம்யா எவ்ளவோ தேவலம்.
மொத்தத்தில், ஒரு இன்ஸ்டன்ட் தலை வலி க்கு நான் உத்தரவாதம்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"
1:20 PM, November 20, 2008
dai pasagala ethu tamil padamay elliyada.bez every one spoke english english. i think now we want to call english nadu not tamil nadu. haeeehaeee how is my commend
Post a Comment