நேற்று மாலை திடீரென்று நண்பர் ஒருவர் தொலைபேசி 'சாரு நிவேதிதா தற்கொலைக்கு முயன்றாரா?' என்று கேட்டார். குட்டிக்கதைகள் நூற்றியெட்டின் 86வது பாகத்தில் 'கண்ணாயிரம் பெருமாளின் தற்கொலை முயற்சி' என்றொரு கதை எழுதப்பட்டிருந்தது. பெருமாள் யாரென்று சாருவின் வாசகர்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தபோதிலும் சாருவின் கதைகளில் எது உண்மை, எது புனைவென்று பிரித்தறிந்து வாசிக்கும் அறிவு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. இது சமீபத்தில் நடந்ததா? அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததா? என்றொரு குழப்பமும் சிலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.
ஆயினும் குட்டிக்கதைகளை இனி விஷால் தொடருவார் என்ற அறிவிப்பு சாரு வாசகர்களிடையே பெரியளவிலான அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பதிவு 17.11.2008 அன்று மாலை 5.30 மணியளவில் எழுதப்பட்டிருக்கிறது. 'சாருவாவது, தற்கொலையாவது' என்றுதான் எல்லோரையும் போல நினைத்தேன். அதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக சாரு என்னோடு தொலைபேசியிருந்தார். வழக்கமான தெளிவான, தீர்க்கமான குரலோடு அவர் பேசியிருந்ததால் 'தற்கொலை முயற்சி' என்பதை என்னால் சுத்தமாக நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் பேசியதிலிருந்து அவரது மனைவிக்கு அனானிமஸாக எவனோ தொலைபேசி மனரீதியாக டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ஏதோ பிரச்சினை என்றளவில் புரிதல் இருந்தது. இந்த அளவுக்கு போயிருக்கும் என்பதை இப்போது கூட நம்பமுடியவில்லை.
சாருவின் தோழரான ஆர்.பி.ராஜநாயகம் அவர்களின் Something is rotten in the State of Denmark பதிவினை வாசித்தபோது தற்கொலை முயற்சி உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னொரு புறம் சாரு கூடவா தற்கொலைக்கு முயற்சிப்பார் என நொந்துப் போயிருக்கிறேன். அவருக்கு தொலைபேசியோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ விசாரிக்க அச்சமாக இருக்கிறது. ஒருவேளை செய்தி உண்மையென்றால் என் மனதுக்குள் ஏற்படுத்தி உருவகப்படுத்தி வைத்திருக்கும் சாரு பற்றிய பிம்பத்தின் பெரும்பகுதி உடைந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
நிலவரம் என்னவென்று தெரிந்தவர்கள் யாராவது தெளிவாக சொன்னால் தேவலை. சாரு.ஆன்லைனில் வழக்கம்போல தலையை சுற்றி மூக்கை தொட்டு தான் சொல்லப்படும், யாருக்கும் புரியாது.
பிற்சேர்க்கை (இப்பதிவு எழுதி ஒரு மணி நேரத்துக்கு பிறகு சேர்க்கப்பட்டது) : அதிசயங்களில் எனக்கு நம்பிக்கையில்லை, ஆனாலும் அவ்வப்போது நான் காணும், கேட்கும் அதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தப் பதிவை வருத்தத்தோடு எழுதி பப்ளிஷ் பட்டன் அழுத்திய நொடியிலேயே எனது கைப்பேசி கிணுகிணுத்தது. 'CHARU CALLING' - இன்னும் கூட இப்பதிவை சாரு பார்த்திருக்க வாய்ப்பில்லை.
”வணக்கம்பா. சாரு பேசுறேன்”
“சார். ஒரு வதந்தி..”
“என்ன?”
“இனிமேல் குட்டிக்கதைகளை விஷால் தொடரப்போறாருன்னு சாரு.ஆன்லைனில் வந்திருக்கே?”
“ஆமா. நாம எழுதறதெல்லாம் நடப்பும், புனைவும் இணைந்தது தான். கவலைப்படறதுக்கெல்லாம் ஒண்ணுமில்லை. பெரிய பிரச்சினையெல்லாம் எதுவுமில்லை”
- இப்படியாக தொடர்ந்தது. எனவே சாரு வாசகர்களே, நலம் விரும்பிகளே! வழக்கம்போல நாம் குட்டிக்கதை ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம்.
November 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)


26 பின்னூட்டங்கள்:
1:01 PM, November 20, 2008
இதப்போய் இப்டியா பதிவு போட்டு கேப்பீங்க?:(:(:(
1:10 PM, November 20, 2008
if at all charu attempted for the (if at all true) marital discord, is it any of lyour business to talk about it here?
1:11 PM, November 20, 2008
:(
வருத்தமாக இருக்கிறது!
என்ன பிரச்சினையோ!
அவருக்கு மன உறுதியைக் கொடுத்து பிரச்சினைகளைத் தீர்க்கும் வன்மையைக் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்!
1:41 PM, November 20, 2008
:-(
2:14 PM, November 20, 2008
டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும், ராப் அவர்களுக்கும்...
நான் புதியதாக எதையும் பொதுவுக்கு கொண்டுவந்துவிடவில்லை. சாரு ஆன்லைனில் பதியப்பட்ட விஷயம் குறித்தே இங்கு சக வலைப்பதிவர்களிடமும், வாசகர்களிடமும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
2:25 PM, November 20, 2008
:((
2:27 PM, November 20, 2008
பிற்சேர்க்கை இணைக்கப்பட்டிருக்கிறது!
2:31 PM, November 20, 2008
அவர் அப்படியெல்லாம் எழுதறது ஒரு பப்ளிசிடி ஸ்டண்ட் போல் இருக்கிறது.
ஜயமோகன்,சாரு இருவரும்
சுயமோகமும்,பிறர் தங்களை
கவனிக்கவேண்டும் என்ற வெறியும்
கொண்டவர்கள்.
2:53 PM, November 20, 2008
லக்கிலுக்
"கண்ணாயிரம் பெருமாளின் தற்கொலை முயற்சி " படித்தவுடன் இதே போல் சந்தேகம் வந்தது. ஆனால் இந்த சம்பவம் எந்த காலத்தில் நடந்ததோ என்று இருந்தேன். ஆனால் நீங்கள் அவரிடம் போனில் பேசிய விவரத்திற்கும் கதைக்கும் சம்பந்தமிருப்பதால் இடைவேளை என்று அவர் இருந்த ஒரு வாரத்தில் இது நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.இது உண்மை என்றால் நிச்சயம் சாருவின் பிம்பம் உடைப்பட்டு போகும்
3:34 PM, November 20, 2008
it is happy to hear that Charu is now good through your blog, thanks very much
long live charu
3:54 PM, November 20, 2008
ஏம்பா உண்மையிலேயே ஒன்னும் இல்லையா?
8:56 PM, November 20, 2008
Those who are feeling for Charu (Dont kno his real name as his story).. can contribute some money.. As he always say he may not need symapathy..
5:48 AM, November 21, 2008
கொஞ்ச நேரம் பயமுறுத்திட்டீங்க... எல்லாம் வதந்தி தான?
சாருவோட எழுத்து (குறிப்பா அவரோட வலை பத்தி) எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் தற்கொலை அப்பிடி இப்பிடி கேட்டா கஷ்டமா இருக்கு..
அது எந்த அயோக்கியன் அவரது மனைவிக்கு டார்ச்சர் தருவது? ஏன் தான் இப்படி அநாகரீகமாக இருக்கிறார்களோ!
11:12 AM, November 21, 2008
'ஆமா. நாம எழுதறதெல்லாம் நடப்பும், புனைவும் இணைந்தது தான். கவலைப்படறதுக்கெல்லாம் ஒண்ணுமில்லை. பெரிய பிரச்சினையெல்லாம் எதுவுமில்லை'
எழுதியது உண்மை என்று நினைத்து ஏமாந்தவர்களுக்கு அனுதாபங்கள்
என்று அடுத்து எழுதுவார்.
11:18 AM, November 21, 2008
இப்படியும் ஒரு சுய விளம்பரம் லக்கிலுக் அவர்களுக்கு தேவையா?
இதுவரை நான் தங்கள் மேல் வைத்திருந்த மதிப்பே பொசுக் கென போய்விட்டது.
12:13 PM, November 21, 2008
//நான் புதியதாக எதையும் பொதுவுக்கு கொண்டுவந்துவிடவில்லை. சாரு ஆன்லைனில் பதியப்பட்ட விஷயம் குறித்தே இங்கு சக வலைப்பதிவர்களிடமும், வாசகர்களிடமும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
////
ரொம்பவேவேவே
நண்ணா இருக்கு
அடிக்கடி இப்படி எழுதுங்க
சினிமா கிசு கிசு மாதிரி சாரு கிசு கிசுவையும் எழுதுங்க.
கண்ணாடியா இருக்கணும்
சரியா
12:14 PM, November 21, 2008
//ஆனால் நீங்கள் அவரிடம் போனில் பேசிய விவரத்திற்கும் கதைக்கும் சம்பந்தமிருப்பதால் ////
அடங்கொக்கமக்க
லக்கி கனவுல சாருகூட பேசிட்டு இப்படி ஒரு பதிவு போட்டிருக்காரு
நீங்களும் நிசம்னு நம்பிட்டிங்களா
சாருகூட பேசினது புனைவு
10:11 PM, November 22, 2008
விளக்கத்திற்கு நன்றி லக்கி..
6:18 PM, November 25, 2008
ippadi oru padhivu podarudhukku
peysaama poi
nee thongalaambaa!
8:05 PM, November 25, 2008
இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவில் நான் இட்ட கமெண்ட் : (இப்படி எல்லாம் உடனே நடக்கும் என்று அப்போது தோன்றவில்லை. மிக வருத்தமாகத்தான் இருக்கிறது..)
http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_07.html
ஆங்கில இலக்கியத்தை (ஷேக்பியர் தவிர) முற்றாக நிரகரிக்கிறேன் என்றார் சாரு. ஏனென்றால் என்று 140ஆண்டுகளுக்கு முன் free sex பற்றி ஆங்கில கோணம் (mid victorain pruidentarty) அப்ப்டி இருந்தாதம். அதாவது free sex அய் எதிர்த்தார்கலாம். French இலக்கியத்தில் தன் வாசிப்பனுபவத்தை துவக்கிய சாரு, அதனால் ஸாமர்சட் மாம் (Somerset Maughaum)போன்ற ஆங்கில ஜாம்பவானகளை இன்னும் வாசிக்கவில்லை. ஆங்கிலேயர்களின் இலக்கிய மரபு சுத்த வேஸ்டாம். )
நாட்டில் இன்றைய தலையாய பிரச்சனை : Free sexக்கு அங்கீகாரம் இல்லாத கட்டுபொட்டித்தனம் என்பதே சாருவின் நிலை மற்றும் கவலை. சமூக பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் இந்த கட்டுப்பொட்டித்தனம் தான் காரணமாம். !!
Free Sex சரி அல்லது தவறு என்று வாதட வரவில்லை. நேர்மை பற்றி தான் நான் சொல்ல விழைகிறேன். Free Sex தவறு அல்ல. ஆனால் பொய் சொல்லி ஏமாற்றுதல் தான் தவறு. பல ஆண்கள் பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டும் பார்த்து, thru false promise ஏமாற்றுவது இங்கு அதிகம். பெண்களும் தான். திருமணத்திற்க்கு முன்பே கணவன் அல்லது மனைவியடம் தம்மை பற்றிய முழு உண்மைகளையும் சொல்லி, பிறகு திருமணத்திற்க்கு பின் தான் எப்படி இருப்பேன் என்பதையும் தெளிவு படுத்துவதே அடிப்படை நேர்மை. அந்த வெளிப்படையான தன்மை இல்லாததால் தான் ஆண் / பெண் உறவுகளில் கடும் சிக்கல்கள், ஏமாற்றங்கள், மனமுறிவுகள், காயங்கள் மற்றும் சிதைவுகள். இது உலகெங்கும்தான். சாருவின் சொந்த வாழ்க்கையில் தான் எத்தனை முறிவுகள் மற்றும் வலிகள் மற்றும் காயங்கள்...
In the West, the definition for கற்பு is not 'ஒருவனுக்கு ஒருத்தி' ; 'One at a time' என்பதே அவர்களின் definiton for கற்பு .
அமைதியான, அன்பான, நிறைவான வாழ்க்கை, உறவுகளில் உண்மை மற்றும் ஆழாமான ஈர்ப்புகள், இவை தான் முக்கியம். காமம் வாழ்க்கையில் ஒரு பகுதிதான்.
ஆண் / பெண் உறவுகளை ஆழப்படுத்தி, அன்பை அதிகரிக்க செய்ய அது ஒரு கருவி. that is all.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்' என்பது சாதாரணமான பழமொழியல்ல. There is a optimum level for all things in life, including sex.
8:30 PM, November 25, 2008
Good to hear that he's alive and kicking!
8:33 PM, November 25, 2008
அவர் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருப்பினும் அதை சந்திக்கு கொண்டு வருவது சரியல்ல. இது அத்துமீறல்! அனைவரும் அறிந்த பதிவராகிய உங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
8:36 PM, November 25, 2008
தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் கவனத்தை தன் பக்கம் இழுக்கவே அவ்வாறு செய்பவர்கள் என்பது என் கருத்து.
உண்மையாகவே வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்புகிறவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள், முயற்சி செய்வதில்லை!
தற்கொலை வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல. அதை ஆதரிக்கும், அல்லது அழகான ஒரு விஷயம் என்று தோற்றத்தை உருவாக்க முயலும் எழுத்தாளர்கள் ஒழிக!
8:58 PM, November 25, 2008
சாரு அந்த மாத்ரி முடிவை எல்லாம் எடுக்க மாட்டாரே. முதலில் மனைவியின் தொலை பேசி நம்பரை மாதி வைங்க சாரு.
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தற கதை.
எந்த கோழை அப்படி போனில் தொந்தரவு கொடுப்பது
குப்பன்_யாஹூ
4:55 PM, November 30, 2008
தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் ஜெயமோகன் தான் என்று சாரு அடுத்து சொல்லப் போகிறார். பார்த்துக் கொண்டே இருங்கள்.
6:24 AM, December 03, 2008
லக்கி;
சாருநிவேதிதா பற்றி படிக்க முடிபுசெய்து ஸீரோ டிகிரி மற்றும் ராசலீலா தருவித்தேன். இதில் ஏதோ ஒன்று மிகவும் ஆழமானது எனவே மற்றதை முதலில் படியுங்கள் என்று நீங்கள் எங்கேயோ எழுதியதை படித்த ஞாபகம். இதில் எதை முதலில் படிக்கசொன்னீர்கள்? ஸீரோ டிகிரியா அல்லது ராசலீலாவா?
-குண்டு
Post a Comment