November 1, 2008

ஈழத்துயரம் - தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்கள்!

11/01/2008 12:49:00 PM by லக்கிலுக் ·
கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேரணி, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் என்று ஃபிலிம் காட்டுவது தமிழ் சினிமாக்காரர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. பேரணியிலோ, பொதுக்கூட்டத்திலோ ஃபுல் மேக்கப்போடு கூலிங்கிளாஸ் அணிந்து சினிமா நட்சத்திரங்கள் கையாட்ட ரசிகர்கள் விசிலடிக்கிறார்கள். டிவிக்காரர்களின் மைக்கில் 'தமில் தமிலன்' என்று முழங்குகிறார்கள். இப்போது ஈழத்தில் இனப்படுக்கொலை மும்முரமடைந்திருக்கும் நேரத்திலும் இந்த கருமாந்திரங்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல வருந்தத்தக்கதும் கூட.
 
நடிகர் சங்கம் பக்கம் இன்று காலை போயிருந்தேன். ஒரு நடிகை சன் நியூஸ் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். "கொழும்பில் அடிக்கடி குண்டு வெடிக்கிறது. அங்கு அமைதி வரவேண்டும். அதற்குதான் இந்த உண்ணாவிரதம்". இன்னொரு நடிகர் பேசினார். "இந்த உண்ணாவிரதத்தால் இலங்கையில் அமைதி கட்டாயம் திரும்பும்". அடப்பாவிகளா. அங்கு என்ன நடக்கிறது. அது அரசியல் பிரச்சினையா? சமூகப்பிரச்சினையா? இனப்பிரச்சினையா? எதுவாவது உங்களுக்கு தெரியுமா? இன்னொருவர் மைக்கில் முழங்கிக் கொண்டிருந்தார். "நாம் எடுக்கும் தமிழ் திரைப்படங்களை மட்டக்களப்பிலும், கொழும்பிலும் விரும்பிப் பார்க்கிறார்கள். நாம் அவர்களுக்கு உதவவேண்டும்". ம்ம்.. ஈழத்தமிழர்களுக்கு உதவ, உண்ணாவிரதம் இருக்க சரியான காரணத்தை தான் கண்டுபிடித்திருக்கிறார்.
 
இப்படிப்பட்ட ஜென்மங்கள் உணர்வில்லாமல் உண்ணாவிரதம் இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?. பிரச்சினையையோ, போராட்டத்தையோ கிஞ்சித்தும் புரிந்துகொள்ளாதவர்கள் அணிதிரண்டு ஈழத்தமிழர்களுக்கு என்ன பிரயோஜனம்? அஜித்தும், அர்ஜூனும் ஏதோ பேட்டியில் சொன்னார்களாம். "ஈழத்தில் நடக்கும் பிரச்சினைக்கு இங்கு எதுக்கு போராட்டம்?". அவர்கள் இருவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். பிரச்சினை பற்றிய புரிதல் தங்களுக்கு இல்லையென்று வெளிப்படையாக நாடகமாடாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். புரிதல் இல்லாதவர்களை வற்புறுத்தி நடத்தினால் அதற்கு பெயர் போராட்டமும் இல்லை. உண்மையில் இன உணர்வு கொண்டவர்கள் சிறிய அளவிலாக இருந்தாலும், அவர்கள் கூடி போராடினால் அதுதான் போராட்டம்.
 
அஜித்தின் பேட்டியை வாசித்து உடனே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள். இவர்களுக்கும் தமிழ்நாட்டு விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமில்லை. அஜித்தின் படத்தை இந்த ஸ்டேட்மெண்டால் புறக்கணிக்கிறார்களாம். அஜித்தின் படங்கள் தொடர்ந்து த்ராபையாக வருகிறது, புறக்கணிக்கிறோம் என்று சொன்னாலாவது நியாயம். போராட்டம் பற்றிய அறிவில்லை என்று ஒத்துக்கொண்டவரின் நேர்மையை பாராட்டுவதை விட்டு விட்டு அவர் படத்தை புறக்கணிப்பது அநியாயம் அல்லவா? தேவையில்லாமல் மட்டமான படமான ஏகனுக்கு சென்சேஷனல் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். இதனால் இன்று நடக்கும் உண்ணாவிரதத்துக்கு கறுப்பு சட்டையோடு வந்து 'நானும் தமிழன் தான்' என்று பறைசாற்றியிருக்கிறார் அஜித்குமார். என்ன கொடுமை?
 
தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த போராட்டத்தையும், உணர்வையும் கொச்சைப்படுத்துவதல்ல நமது நோக்கம். வீரன் வேலுத்தம்பி, கேப்டன் பிரபாகரன் என்றெல்லாம் படத்துக்கு பெயர் வைத்து தங்கள் உணர்வை இதே திரையுலகம் வெளிப்படுத்திய காலமும் உண்டு. பாரதிராஜா, சீமான், அமீர், மகேந்திரன், ராம.நாராயணன், பாலுமகேந்திரா போன்ற ஏராளமான திரையுலகினரின் உணர்வுகளை சந்தேகம் கொண்டால் நம் நாக்கும் அழுகிவிடும்.
 
தமிழ் மொழிக்கான, தமிழ் இனத்துக்கான 1970களுக்கு முந்தையப் போராட்டங்களையும், அதில் தமிழர்களின் பங்கேற்பையும் இப்போது ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்காலத்தை நினைத்து அருவருப்பாக இருக்கிறது. 80களின் தொடக்கத்தில் ஈழத்தமிழருக்காக ஒவ்வொரு தமிழகத் தமிழனும் கண்ணீர் சிந்தி, போராட்டங்கள் நடத்தி தன் உணர்வை வெளிப்படுத்தினான். மக்கள் பங்கேற்போடு போராட்டங்கள் நடத்தி அரசியல் தலைவர்கள் இந்திய அரசுக்கு நெருக்குதல் தந்தார்கள். இருபத்தைந்து கால இடைவெளிக்குப் பிறகு இன்று நடக்கும் போராட்டங்களுக்கு அந்த வீரியம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தால் கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா என்றிருக்கிறது. சினிமாக்காரர்களை விடுங்கள். தமிழ் அரசியல், சமூகத்தளங்களில் இயங்குபவர்களும் கோமாளித்தனமாகவே நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் வயிற்றெரிச்சல்.
 
அரசியல் பல்டிகளால் ஆதரவிழந்துப் போனவர் வைகோ. ஆயினும் அவரது ஈழத்தமிழருக்கான நேசம் தான் இன்னமும் அவரை எங்களைப் போன்ற ஒருசிலரையாவது நேசிக்க செய்துக் கொண்டிருக்கிறது. ஆயுதம் ஏந்தி தமிழர்களை திரட்டுவேன் என்று பேசியதற்காக அவர் கலைஞர் அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்த நேரத்தில் எதை பேசுவது என்று அவருக்கும் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் கலைஞரும் செய்திருக்கிறார். ஜெயலலிதாவையும், சுப்பிரமணியசாமியையும், சோ ராமசாமியையும், இந்துராமையும் திருப்திபடுத்த இலவச இணைப்பாக அமீர், சீமான் கைது வேறு. இதற்கு ஜெ.வே ஆட்சியில் இருந்து தொலைத்திருக்கலாம். தமிழ்செல்வன் போல யாராவது ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் பேடித்தனமாக கொல்லப்பட்டால் அதற்கு அஞ்சலிக்கவிதை எழுதுவதோடு கலைஞரும் தன் தமிழின உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கலாம். எங்களைப் போன்றவர்கள் 'தமிழினத் தலைவர் கலைஞர் வாழ்க, ஈழத்தமிழன் வெல்க' என்று கூடி கோஷம் போட்டுவிட்டாவது கலைந்திருப்போம். கருத்துரிமைக்காக காலமெல்லாம் குரல் கொடுத்த தலைவனே இன்று கருத்து சொன்னவர்களை கைது செய்த அவலத்தை எங்குபோய் சொல்லுவது?
 
போர்நிலவரம் கடுமையான சூழலில் கலைஞரும் அனைத்துக்கட்சிக் கூட்டம், அதைத்தொடர்ந்து மனிதச்சங்கிலிப் போராட்டம் என்று சுறுசுறுப்பானபோது மீண்டும் 80கள் திரும்புகிறதோ என்று மனதோரம் மகிழ்ச்சி பூத்தது. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா என்றதுமே பழைய கலைஞர் கிடைத்துவிட்டார் எண்ணி எண்ணி மகிழ்ந்தோம். மழையின் காரணமாக மனிதச்சங்கிலிப் போராட்டம் ஒத்திவைப்பு என்ற செய்தி வந்ததுமே அந்த மகிழ்ச்சி அற்றுப்போனது. தலைவா கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் நீ போராட்டம் நடத்தியதில்லையா? வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்சம் லட்சமாக உரிமையெடுத்துக் கொண்டு பங்கேற்றதில்லையா? மழையும், வெயிலும் எந்த காலத்தில் எங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்கிறது. நீ கட்டி வா என்றால் நாங்கள் வெட்டி வந்ததில்லையா? ஒத்திவைக்கப்பட்ட மனிதச்சங்கிலியிலும் மழை பெய்தது. பெய்தது மழையல்ல. உணர்வற்றுப்போன தம் மக்களை கண்ட தமிழன்னையின் கண்ணீர். கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் கட்டாயமாக அழைத்துவரப்பட்டு மனிதச்சங்கிலியில் இணைந்தார்கள் என்று பத்திரிகைகள் ஆதாரத்தோடு எழுதுகிறது. 60 கி.மீ நீளத்துக்கு பிரம்மாண்டமான மனிதச்சங்கிலி தான். தலைவரே இந்தி எதிர்ப்புப் போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறீர்கள். அப்போது பங்கேற்றவர்கள் இப்போது போன்று ஜடமாக, உணர்வற்று, போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுண்டா?
 
இதையெல்லாம் விடுங்கள். இந்தப் போராட்டங்களுக்கு பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா தொலைபேசியில் பேசினாராம். முன்னதாக ராஜபக்‌ஷேவின் தம்பி டெல்லிக்கு வந்தார். முகர்ஜியோடு பேசினார். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேரில் வந்து கலைஞரை சந்தித்துப் பேசினார். இதெல்லாம் கலைஞருக்கு டெல்லியில் இருக்கும் செல்வாக்கையும், மரியாதையையும் காட்டுகிறது. இத்தகைய மரியாதைக்கு தகுதியானவர் தான் கலைஞர் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் கலைஞருடைய கோரிக்கையின் அடிநாதமே 'இலங்கையில் போர்நிறுத்தம், இந்திய ராணுவ உதவிகளை திரும்பப் பெறுவது' என்பதுதானே? அதுபற்றி டெல்லி பாதுஷாக்கள் எந்த உறுதியும் தரவில்லையே? 'அரசியல் ரீதியான தீர்வுக்கு இலங்கை அரசுக்கு ஆலோசனை, 80 டன் உணவு' தருகிறார்களாம். நாமென்ன பிச்சையா கேட்டோம்? உன் இராணுவ உதவிகளை வைத்து தமிழர்களை கொல்லுகிறார்கள். அதை தடுத்து நிறுத்து என்றுதானே கேட்டோம். அதற்கு ஏதாவது திருப்தியான பதிலை டெல்லியில் இருந்து பெற முடிந்ததா?
 
இப்போது அடுத்தக்கட்ட ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. ஈழத்தமிழருக்கு உதவி என்ற பெயரில் அவரவர் ஆயிரமும், லட்சங்களும் முதல்வரிடம் காசோலையாக தருகிறார்கள். ஒருநாளைக்கு பத்து வண்ணப்படங்களுக்கு மேல் தினத்தந்தியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழினத்தின் ஆணிவேரை அமிலம் ஊற்றி சிங்களவெறியர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ உடைந்து கீழே விழுந்த கிளைகளை ஃபெவிகால் கொண்டு ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழனின் கையறுநிலையை நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுதான் தோன்றுகிறது.


Tamilish - தமிழ்

84 பின்னூட்டங்கள்:

raman- Pages said...
12:53 PM, November 01, 2008

மிக நேர்மையான நடுநிலையான பதிவு, மிகச்சரியான கருத்துக்கள்..

raman- Pages said...
12:59 PM, November 01, 2008

மன்னிக்கவும், தங்களுக்கு ஓட்டுப்போடும் முயற்சியின் போது ஏதோ தவறு நடந்துவிட்டதால், தங்கள் பதிவு என் பெயரில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. எப்படி சரிசெய்வது எனத் தெரிவித்தால்.. செய்து விடுகிறேன்.

அத்திரி said...
1:02 PM, November 01, 2008

லக்கி லுக் உங்கள் பதிவுகளிலே இதுதான் சிறந்த பதிவு. பல உண்மைகளை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள். சந்தேகமா இருக்கு????? பதிவு எழுதியது நீங்கதானே!!!!!!!!!!!!!!!!!!!!!

லக்கிலுக் said...
1:03 PM, November 01, 2008

//மன்னிக்கவும், தங்களுக்கு ஓட்டுப்போடும் முயற்சியின் போது ஏதோ தவறு நடந்துவிட்டதால், தங்கள் பதிவு என் பெயரில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. எப்படி சரிசெய்வது எனத் தெரிவித்தால்.. செய்து விடுகிறேன்.//

பரவாயில்லை ராமன். என் கருத்துக்களோடு ஒத்துப் போகிறீர்கள் என்றபோது உங்கள் பெயரில் இருந்தாலென்ன? என் பெயரில் இருந்தாலென்ன?

சந்தோஷ் = Santhosh said...
1:06 PM, November 01, 2008

லக்கி ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.. நேர்மையான ஒரு பதிவு...

raman- Pages said...
1:10 PM, November 01, 2008

மிகவும் நன்றி..

Anonymous said...
1:13 PM, November 01, 2008

நியாயமான உணர்வுகள், நேர்மையான கருத்துக்கள். கட்சிப் பாசத்திற்கு உங்கள் பகுத்தறிவை அடகு வைக்கவில்லை என்பதை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...
1:13 PM, November 01, 2008

. தமிழினத்தின் ஆணிவேரை அமிலம் ஊற்றி சிங்களவெறியர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ உடைந்து கீழே விழுந்த கிளைகளை ஃபெவிகால் கொண்டு ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறோம்// sariyaa sonnirkal

கென்., said...
1:24 PM, November 01, 2008

இப்போது அடுத்தக்கட்ட ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. ஈழத்தமிழருக்கு உதவி என்ற பெயரில் அவரவர் ஆயிரமும், லட்சங்களும் முதல்வரிடம் காசோலையாக தருகிறார்கள். ஒருநாளைக்கு பத்து வண்ணப்படங்களுக்கு மேல் தினத்தந்தியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழினத்தின் ஆணிவேரை அமிலம் ஊற்றி சிங்களவெறியர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ உடைந்து கீழே விழுந்த கிளைகளை ஃபெவிகால் கொண்டு ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழனின் கையறுநிலையை நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுதான் தோன்றுகிறது.

:(

நாமக்கல் சிபி said...
1:33 PM, November 01, 2008

லக்கி,

அருமையான பதிவு! பாராட்டுக்கள்!

பாபு said...
1:33 PM, November 01, 2008

நடிகர்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை,அவர்களும் வேறு வழியில்லாமல்தான் வருகிறார்கள்,தங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்க பட கூடாது என்பதனால் ,மேலும் அவர்கள் வரவில்லை என்றாலும், இந்த பத்திரிக்கைகள் அதனால்தான் தமிழகமே பாதிக்கப்பட்டது போல் எழுதி அவர்களை இன துரோகி போல் காட்டுகிறார்கள்

vaandu said...
1:39 PM, November 01, 2008

A good summary of dramas executed in TN. The fasting is a stage for them to come to limelight and not for Srilankan Tamils. Medias should have responsiblity in not publishing such dramas.

Anonymous said...
1:41 PM, November 01, 2008

மிக நேர்மையான நடுநிலையான பதிவு, மிகச்சரியான கருத்துக்கள்.. nanri laki
Pavan

Anonymous said...
1:47 PM, November 01, 2008

அய்யோ லக்கி.. யாரோ உங்கள் பதிவை ஹேக் செய்து பதிவு போட்டுவிட்டார்கள்

Anonymous said...
1:50 PM, November 01, 2008

//இதனால் இன்று நடக்கும் உண்ணாவிரதத்துக்கு கறுப்பு சட்டையோடு வந்து 'நானும் தமிழன் தான்' என்று பறைசாற்றியிருக்கிறார் அஜித்குமார். என்ன கொடுமை?//

என்ன கொடுமை லக்கி இது ? அஜீத் அவ்வாறு கேட்டதாக கூறுவதே ஒரு வதந்தி. அதற்கு நீங்கள் பொட்டு வைத்து பூ வைக்கிறீர்கள்.
அஜீத் ஆனந்த விகடனில் அளித்த பேட்டி இதோ :

//"நம்ம பக்கத்திலே தொட்டுவிடும் தூரத்தில் நடக்கிற ஈழத் தமிழர் படுகொலைகளைப் பற்றி என்ன நினைக்-கிறீங்க? தமிழனா, தமிழ் நடிகனா, உங்க உணர்வு என்ன?"

"நிச்சயம் சொல்லியாகணும். அங்குள்ள தமிழ் மக்களின் துயரத்தை உணர்ந்திருக்கிறேன். 'ஏகன்' தயாரிப்பாளர்கூட இலங்கையைச் சேர்ந்த--வர்தான். அவரோட சோகங்கள், அடி-பட்டு மேலே வந்த விதம் பற்றியெல்லாம் அவர் சொன்ன விஷயங்கள் என்னை உலுக்-கிப்-போட்-ருச்சு. மத்த விஷயங்களை விடுங்க... குழந்தைகள், முதியவர்கள், பெண்கள்னு அப்பாவிகளோட உயிர்கள் போறதை நினைச்சா தூக்கம் வர மாட்டேங்குது. ஈழத் தமிழ் மக்க-ளோடு துயரங்-களைப் பகிர்ந்துகொள்-கிறேன். இந்த பிரச்னை-களைக் கையாள்வதற்கு நம்மை-விட கைதேர்ந்த, அனுபவமுள்ள தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை நல்லபடியாகப் பார்த்துக்-கொள்வார்கள் என்கிற நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்!"

- அஜீத் (விகடனில்.) //

பிரச்சனை பற்றி புரிதல் இல்லாதவர் இவ்வாறு பேச முடியுமா ? அவரும் கொலம்புவில் பாதிக்கப்படும் தமிழர்கள் என்று உளறும் ஜாதி என்று நினைக்கிறீர்களா ? அஜீத்தின் பிரச்சனை அவரின் புரிதலும், அதை தொடர்ந்து அவர் கேட்கும் நியாயமான கேள்விகளுமே !

அஜீத் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டு, காசுக்காகவோ, தனது நலத்திற்காகவோ வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டது போல எழுதியுள்ளீர்கள்.நடிகர் சங்கம் நடத்தும் பல விழாக்களில் மிகவும் தைரியமாக வர மாட்டேன் என்று கூறியவர் அஜீத் மட்டுமே. அவருக்கு மனிதத்தன்மை உள்ளது. எனவே தான் சுனாமி இரங்கல் கூட்டம், காவேரி பிரச்சனை போன்ற போராட்டங்களில் பங்கேற்றார்.

அதே நேரம் பல சம்பிரதாய விழாக்களில் அஜித் எவ்வளவு வற்புருத்தினாலும் கலந்து கொண்டதில்லை. இதனால், கேப்டனிடம் கூட அவர் முறைத்துக்கொண்டது நமக்கு தெரியும். அப்படி இருக்க எவ்வாறு இப்படி பொத்தாம் பொதுவாக எழுதியுள்ளீர்கள் !

Anonymous said...
1:51 PM, November 01, 2008

Well said Mr.Lucky.

- Darvin.

Pondy-Barani said...
1:57 PM, November 01, 2008

மிக காட்டமான பதிவு பல உண்மைகள் உணர்த்திய நியாமான பதிவு...

லக்கிலுக் said...
2:03 PM, November 01, 2008

//என்ன கொடுமை லக்கி இது ? அஜீத் அவ்வாறு கேட்டதாக கூறுவதே ஒரு வதந்தி. அதற்கு நீங்கள் பொட்டு வைத்து பூ வைக்கிறீர்கள். //

அனானி தோழர்!

நக்கீரனில் அஜித் சொன்னதாக வந்த செய்தியின் அடிப்படையில் சில ஈழத்தமிழர்கள் வைத்த எதிர்வினைக்கானது அந்த பத்தி!

Anonymous said...
2:25 PM, November 01, 2008

கலைஞர் அடித்த பல்டியில் விவாதக்களம் பக்கம் சென்று பேசக்கூடமுடியாமல் ஓடி ஒளிய வேண்டியுள்ளது என்னைப்போன்ற உடன்பிறப்புகளால். இதற்கு பேசமலேயே பழையபடி இருந்திருக்கலாம். ஈழத்தமிழர்கள் பிச்சைக் கேட்கவில்லை. கொடுக்கும் உதவியை வாங்கிக்கொள்ள உயிருடன் இருக்கவேண்டுமல்லவா? ஆட்சி தோளில் கிடக்கும் துண்டு போன்றது எனபேசியவர் இன்றைக்கு இப்படியா? கலைஞரா? நம்பமுடியவில்லை. தலைவா இப்படி செஞ்சிட்டிங்களே? ஆதரவு ஆதரவு எனக்கூறி கடைசியில் அப்படியே ஆதரவுகுரல்கள் அனைத்தையும் இரண்டு கைதில் அமுக்கப்பட்டுவிட்டதே. என்னைப்போன்ற ஈழத்தமிழர்களின் மீது மாறாப் பற்றும் அன்பும் அவர்க்ளின் வலியை சுமக்கும் எத்தனையோ உடன்பிறப்புகள் வெளியே சென்று பேசமுடியாமல் ஆகிவிட்டதே.

தமிழன் என்று பேசலாம் ஆனால் ஈழத்தமிழன் என 3 எழுத்துக்களை முன்னே போட்டு பேசமுடியாத அளவிற்கு தமிழன் நிலை. நீங்கள் இருக்கிறீர்கள் பேசமுடிகிறது என நினைத்தவர்கள் அனைவருக்கும் அந்த கைதில் நான் இல்லை என்னை நம்பாதே எனக்கூறாமல் கூறிவிட்டீர்களே.

இனி நாங்கள் ஈழத்தமிழனுக்காக கண்ணீர்விட்டாலும் அதை தூற்றும் காங்கிரஸ் மற்றும் பார்ப்பன கைக்கூலிகள் குறைகூறினால் அதற்கும் நடவடிக்கை இருக்குமா தலைவா?

அற்புதன் said...
2:30 PM, November 01, 2008

லகி லுக்,

போராட்டங்கள் எதுவுமே நடைபெறாமால் மவுனமாக இருப்பதை விட இப்படியான போராட்டங்கள் நடைபெறுவது அவசியம்.இதன் மூலம் ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாதாவர்களும் தெரிந்து கொள்ள முற்படுவார்கள்.மக்களுக்கு அதனைத் தெரியப்படுத்த வேண்டியது உங்களைப் போன்ற எழுதாளர்கள் பதிரிகையாளர்களின் கடமை.
புலத் தமிழர்களைப் பொறுத்தவரை நாங்கள் எல்லோருமே அவர்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.தமிழ்ச் சினிமா என்பது மிக ஆளமாக வேருன்றிய ஒரு விடயம்.எவ்வாறு திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை தனது அரசியல் மயமாக்கலுக்கு பயன் படுத்தியதோ நாமும் அவ்வாறே தமிழ்ச் சினிமா உலகத்தைப் பயன் படுத்த வேண்டும்.அதற்கு கலைஞர் தன்னால் ஆனா எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்.சபேசன் எழுதியதிப் போல புலத் தமிழர்கள் கலைஞரே தமிழத்தில் ஆட்சி செலுத்த வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.அவருக்கு இருக்கும் நெருக்கடிகளையும் அறிவோம்.ஆனால் அவரைப் போராட்டப் பாதையின் பால் வைத்திருக்க வேண்டியது உங்களைப் போன்றவர்களின் பொறுப்பு.இவை பற்றி தொடர்ந்து எழுதுங்கள்,தொடர் அழுத்தமே எமது போராட்டதுக்கான வெற்றியை உறுதி செய்யும்.உங்கள் பதிவுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

-அற்புதன்

Anonymous said...
2:35 PM, November 01, 2008

//நாமோ உடைந்து கீழே விழுந்த கிளைகளை ஃபெவிகால் கொண்டு ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழனின் கையறுநிலையை நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுதான் தோன்றுகிறது.//

தப்புகண்ணா தப்பு

We The People said...
2:38 PM, November 01, 2008

சரியான சிந்தனையில் வந்த பதிவு :) வாழ்த்துக்கள்! இப்பவாவது அரசியல் நாடங்களை ஒப்புகொள்ள முயற்சி செய்ய துவங்கிவிட்டீர்களே :)

* நிஜமாவே இது நீங்க எழுதிய பதிவு தானா என்ற சந்தேகம் எனக்கு வருது லக்கி!

லக்கிலுக் said...
2:43 PM, November 01, 2008

//இப்பவாவது அரசியல் நாடங்களை ஒப்புகொள்ள முயற்சி செய்ய துவங்கிவிட்டீர்களே :)//

வீ த பீப்புள்!

உங்களுக்கு ஏதாவது பதில் சொன்னால் என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தூக்கிப் போட்டுவிடுவார்கள். என்னை ஜாமினில் எடுக்க பாரதிராஜாவெல்லாம் வரமாட்டார் என்பதால் இப்போதைக்கு "பாரத் மாதா கீ ஜே" போட்டுக்கறேன்!

லக்கிலுக் said...
2:45 PM, November 01, 2008

//போராட்டங்கள் எதுவுமே நடைபெறாமால் மவுனமாக இருப்பதை விட இப்படியான போராட்டங்கள் நடைபெறுவது அவசியம்.//

அற்புதன்!

போராட்டமென்பது இந்திஎதிர்ப்பு போர் போன்றதாக இருக்க வேண்டும். இல்லையேல் ஒகேனக்கல், நெய்வேலி போராட்டங்கள் மாதிரி டம்மியாகிவிடும். ஈழமக்களுக்கான தமிழர்களின் உணர்வு உரிமைபூர்வமானதாகவும், உண்மைபூர்வமானதாகவும் இருந்தாலொழிய எந்த பயனும் இல்லை.

சயந்தன் said...
2:47 PM, November 01, 2008

என்ன கொடுமை சார்? ராதாரவி இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்தியர்கள் அதனால் இந்தியா உதவணுமாம்..

முத்துகுமரன் said...
2:58 PM, November 01, 2008

லக்கி!

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு பதிவு உங்களிடமிருந்து. கலைஞரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்றாலும் இன்றைக்கு நமக்கி மிச்சப்பட்டிருக்கும் ஒரே நம்பிக்கையும் அவரே என்பதுதான் வரலாற்று சோகம். நிவாரண பொருட்கள் சேர்ப்பது என்பது ஒரு சடங்கே! ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் ஒரு தலைப் பங்களிப்பை நிறுத்தச் செய்வதுதான் மிகப்பெரிய உதவியாக இருக்கும். ராணுவ ரீதியான உதவிகளை வெளியுறவு கொள்கை என்று கேள்வி கேட்டு விடாமல் இருந்திடக்கூடாது. நெடுமாறன் உதவி பொருட்கள் சேகரித்த பொழுது அதை சேர்க்க விடாமல் மெளனம் காத்ததும் கலைஞர் தான். காங்கிரஸ் உடனான கூட்டணி பாரளுமன்ற தேர்தலில் கரை சேர்த்து விடும் என்று கருதுவாரேயானால் அது மிகப்பெரிய சறுக்கலாகவே அமையும். இந்திய தேசிய கட்டமைப்பில் கலைஞரால் இதை விட வேறெதுவும் செய்துவிட முடியாது என்பது எதார்த்தம். ஆனால் உணர்வு ரீதியாகவேனும் தெளிவான முடிவுகளை எடுக்கத் தயங்குவதுதான் வருத்தமாக இருக்கிறது.

ஈழ விசயத்தில் ஒரு குறிப்பிட்ட சாராரைத் தவிர மற்றவர்களிடையே நிலவி வந்த மயான அமைதியை இப்போதைய எழுச்சி கொஞ்சம் அசைத்திருக்கிறது. இதை வளர்த்தெடுக்க வேண்டியதுதான் நம்முன் இருக்கும் முக்கிய பணி

சயந்தன் said...
3:00 PM, November 01, 2008

மகிந்த இருக்கும் போதே இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என மனோரமா சொன்னது உள்குத்து :)

சிவஞானம் ஜி said...
3:03 PM, November 01, 2008

நாற்பது ஆண்டுகளாக நடக்கும் போரை நாலே நாட்களில் நிறுத்திவிட முடியுமா லக்கி?

ஒரு போரைத் துவங்குவதைவிட, அதை நிறுத்துவதற்கு (retreat)ஏகப்பட்ட முஸ்தீபுகள் செய்யப்பட வேண்டுமல்லவா?

ராஜீய உறவுகளில் எல்லாவற்றையும் வெளிப்ப்டையாக அறிவிக்கமுடியுமா?

நல்லதே நடக்குமென்று நம்புவோம்........

Anonymous said...
3:13 PM, November 01, 2008

தம்பி விசய் பிரதமருக்கு ஒரு கோடி தந்தி அனுப்ப சொல்லி சொல்லியிருக்கிறார். நல்ல அரசியல் எதிர்காலம் உண்டு :)

Anonymous said...
3:33 PM, November 01, 2008

உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிர வாதம் பிறந்தே தீரும் - கமல்

Anonymous said...
3:39 PM, November 01, 2008

இலங்கைத் தமிழர்கள் திட்டினாலும் நாதமாகத் தான் ஒலிக்கிறது - ரசினி -

நல்ல அனுபவம் போல ... :

ஆயில்யன் said...
3:53 PM, November 01, 2008

//தமிழினத்தின் ஆணிவேரை அமிலம் ஊற்றி சிங்களவெறியர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ உடைந்து கீழே விழுந்த கிளைகளை ஃபெவிகால் கொண்டு ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறோம்//

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்!

பெரும்பாலானோரின் மனங்களில் வீற்றிருக்கும் கருத்து!

தெனாவெட்டு said...
4:03 PM, November 01, 2008

உங்களிடமிருந்து வந்த உருப்படியான பதிவு. ஆமோதிக்கிறேன்.

சிங். செயகுமார். said...
4:14 PM, November 01, 2008

//தமிழினத்தின் ஆணிவேரை அமிலம் ஊற்றி சிங்களவெறியர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ உடைந்து கீழே விழுந்த கிளைகளை ஃபெவிகால் கொண்டு ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறோம்//

நடு நிலையான பதிவு
உங்களுக்கு ஒரு சல்யூட் லக்கி!

வெண்பூ said...
4:15 PM, November 01, 2008

//
பெய்தது மழையல்ல. உணர்வற்றுப்போன தம் மக்களை கண்ட தமிழன்னையின் கண்ணீர்.
//

உங்கள் மன வேதனையை இந்த வரிகள் அழகாக வெளிப்படுத்துகிறது லக்கி. அதேபோல் முதல்முறையாக கலைஞரின் செயல்களை விமர்சித்து உங்களிடமிருந்து ஒரு பதிவு..

இப்படிக்கு,
ஒன்றும் செய்ய இயலாத கையாலாகத வேதனையில் ஒருவன்.. :(

மாயா said...
4:46 PM, November 01, 2008

வணக்கம் அண்ணா !
உங்கள் பதிவு அருமை . . .
நடிகர்கள்,நடிகைகள் இப்படி உண்ணாவிரதக்கண்காட்சி நடாத்தி ஏதாவது பிரியோசனம் கிடைக்குமா ? இல்லவே இல்லை

ஆனால் நடிகர்கள் நடிகைகள் உண்மையாகவே வெளிநாடுகளுக்குச்சென்று ஈழத்துமக்களுக்கு நிதி சேகரிக்க கலைநிகழ்ச்சிகள் ஏதாவது நடத்தி அதில் வரும் நிதியை அனுப்பலாம் தானே ?

கண்காட்சிக்கு கண்காட்சியாகவும் இருக்கும் நிதியும் கிடைக்கும் . .

அதைவிட்டுட்டு வெய்யில்ல நிண்டு கத்துறதால என்ன கிடைக்கப்போதொ தெரியல்ல ? ? ?
கலை நிகழ்ச்சிகள்

அன்புடன்
மாயா

ஜிரா (எ) கோ.இராகவன் said...
5:11 PM, November 01, 2008

லக்கி, உண்மையிலேயே நீங்கள்தான் இந்தப் பதிவினை எழுதினீர்களா?

ஆம் எனில். நீங்கள் எழுதி நான் படித்ததிலேயே மிகச்சிறந்த பதிவு இதுதான். இது என்னுடைய கருத்து.

உண்மை நிலையை அப்பட்டமாக வேதனை காட்டி எழுதியிருக்கின்றீர்கள். ஒங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

சயந்தன் said...
5:15 PM, November 01, 2008

ஆனால் நடிகர்கள் நடிகைகள் உண்மையாகவே வெளிநாடுகளுக்குச்சென்று ஈழத்துமக்களுக்கு நிதி சேகரிக்க கலைநிகழ்ச்சிகள் ஏதாவது நடத்தி அதில் வரும் நிதியை அனுப்பலாம் தானே ?//

ஐயா மாயா..
என்னய்யா நீங்க.. வெளிநாடுகளுக்கு வந்து அவர்கள் ஆடி பாடி பிறகும் உங்களிடம் இருந்துதானே காசு வாங்கிகொண்டு போக போகிறார்கள்.

அப்படியென்றால் - இடையில் அவர்கள் எதற்கு - நீங்களே கொடுத்திடலாமே... :)- அல்லது அவர்கள் ஆடுறதை பார்த்தாதான் காசு கொடுத்த திருப்தி இருக்குமோ உங்களுக்கு..

அடுத்த வாரமும் ஞானியிட்ட வாங்கி கட்ட போறியள். :) :)

-/சுடலை மாடன்/- said...
5:39 PM, November 01, 2008

லக்கிலுக், பதிவு அருமை.

திமுகவின் பல்வேறு நிலைகளில் இருக்கும் கட்சிக்காரர்கள் கலைஞருக்கு இப்படியொரு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஈழத்தமிழருக்கும், விடுதலைப் புலிகளுக்குமுள்ள ஆதரவைப் பத்திரிகைக் கணிப்புகளிஞ் மூலம் புரிந்து கொண்ட ஜெயலலிதா, தம்மையும் கரிசனமுள்ளவராகக் காட்டிக்கொள்ள வேண்டும் (எல்லாம் வோட்டுதான்!) என்றெண்ணி தடாலடியாக இந்தியாவைத் தாக்கி ஒரு அறிக்கை விடுத்தார். அதைப் படிக்கும் போதே நினைத்தேன், சோ ராமசாமி உடனே போய் ஜெயாவைப் பார்த்துவிடுமென்று. அதுபோலவே நடந்தது. என்ன சொல்லியிருக்குமென்று எளிதில் ஊகிக்கலாமா? ”நீங்கள் என்னசொன்னாலும், உங்களை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாளராக யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் அறிக்கை விட்டால் உங்களது வழக்கமான இந்தியதேசிய ஓட்டு வங்கியையும் இழந்துவிடுவீர்கள்” என்று சொல்லியிருக்கும். உடனே ஜெயலலிதா பல்லவியை மாற்றி விட்டார்.

இதைத் திருப்பிப் போட்டுக் கலைஞருக்குக் கட்சிக் காரர்கள் எச்சரிக்க வேண்டும். ”நீங்கள் அடிக்கும் பல்டிகளால் இந்தியதேசிய ஓட்டு வங்கியின் ஆதரவைப் பெற முடியாது. இருக்கும் தமிழர் ஆதரவு வங்கியையும் இழந்து விடாதீர்கள்” என்று.

நன்றி - சொ.சங்கரபாண்டி

சிம்பா said...
6:02 PM, November 01, 2008

லக்கி மிகவும் அருமையான பதிவு.. திராவிட கொள்கைகளில் மட்டும் அல்ல மொத்த அரசியலும் கேலிக்கூத்தாகி விட்டது... உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தினால் சிறை வாசம். இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.

வடநாட்டவர்களை மராட்டிய மாநிலத்தில் இருந்து வெளியேறு என்று அங்கே ஒரு சிலர் செய்த காரியங்கள் இன்னும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.. ஆனால் உயிரை காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்தால் இங்கு சிறை வாசம்..

இந்த நிலை என்று மாறுமோ...

குட்டிபிசாசு said...
6:22 PM, November 01, 2008

லக்கியண்ணே,

// கருத்துரிமைக்காக காலமெல்லாம் குரல் கொடுத்த தலைவனே இன்று கருத்து சொன்னவர்களை கைது செய்த அவலத்தை எங்குபோய் சொல்லுவது?//

சரியா சொன்னீர்கள்! கலைஞர் குரல் மௌனமாகி விட்டதால் இப்போது மற்றவர் குரல் வலுத்துக் கேட்கிறது.

King... said...
6:36 PM, November 01, 2008

இது பற்றி இதுவரையும் ஒரு பதிவும் போடவில்லையே என்று பார்த்தேன்...

King... said...
6:36 PM, November 01, 2008

இதைத்தான் அண்ணன் நான் உங்களிடம் எதிர்பாத்தது...

Anonymous said...
6:41 PM, November 01, 2008

அருமையான பதிவு. விவாதக் களங்களில் அஜித்திஉம் அர்ஜுனும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பட்ட பாட்டைக் கண்டதும் கடுப்பாய் இருந்தது. அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்கமாட்டேன் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டதற்கே அவர் படத்தை வெளியிட வெளிநாடுகளில் தடை.. அதைப் புறக்கணிப்போம் .. என்று எல்லாம் குதிக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு கேள்வி . இவர்கள் அனவரும் அவரவர்கள் இப்போது குடியிருக்கும் நாடுகளில் ஒருங்கிணந்து, ஒர் நாள் அடையாள உண்ணாவிரதமோ, அல்லது கறுப்பு badge அணிந்து வேலைககு, கல்லூரிக்குச் செல்வது போன்ற அமைதியான முறைகளிலோ உலக நாடுகளின் கவனத்தை இப்பிரச்சினையில் ஈர்க்க முயற்சிக்கலாமே.

'டொன்' லீ said...
7:14 PM, November 01, 2008

நன்றி லக்கிலுக். நேர்மையாக உங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள்..

நல்ல பதிவு. நன்றி said...
7:23 PM, November 01, 2008

நல்ல பதிவு. நன்றி

விலெகா said...
7:33 PM, November 01, 2008

ரொம்ப நல்ல பதிவு, எந்த ஒரு தமிழனுக்கும் வரக்கூடிய உணர்வு இது தான்.
ஈழ தமிழர்களுக்காக ஒரு தமிழனாக குரல் கொடுக்காவிடினும், மனிதாபிமான முறையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதை இது போன்ற கட்டுரைகள் நமக்கு உணர்த்துகிறது. டமாரு கொமாருவின் அருமையான பதிவு,
வாழ்த்துக்கள்.

விலெகா said...
7:35 PM, November 01, 2008

ரொம்ப நல்ல பதிவு, எந்த ஒரு தமிழனுக்கும் வரக்கூடிய உணர்வு இது தான்.
ஈழ தமிழர்களுக்காக ஒரு தமிழனாக குரல் கொடுக்காவிடினும், மனிதாபிமான முறையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதை இது போன்ற கட்டுரைகள் நமக்கு உணர்த்துகிறது. டமாரு கொமாருவின் அருமையான பதிவு,
வாழ்த்துக்கள்.

இரா.பிரபுசங்கர் said...
7:43 PM, November 01, 2008

உண்மையான திமுககாரனின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். சிங்கிள் டீக்கு வேலை செய்பவர்கள் திமுக காரர்கள் என்ற நிலையே மாறிவிட்டது.அண்ணாவை அதிமுகவை சேர்ந்தவர் என்று நினைக்கும் இளவட்டங்கள் தான் இன்று உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள தூக்கு தண்டனை கைதிக்காக இந்திய பாராளுமன்றமே குரல் கொடுக்கிறது.ஒரு இனமே அழிந்து கொண்டிருப்பதை கண்டிக்க தடுக்க முன்வர யாரும் இல்லை. ராம்விலாஸ் பாஸ்வானும் லல்லு பிரசாத் யாதவும் ஓரணியில் நின்று குரல் கொடுக்கின்றனர் . ஆனால் தமிழக அரசியல்வாதிகள் மிக கேவலமான அரசியல் நடத்துகின்றனர் . மிக பரபரப்பான இந்த சூழ்நிலையில் தளபதி வாயைகூட திறக்க மறுக்கின்றார்.ஒவ்வொரு பிரச்சினையிலும் தளபதியின் நிலை என்ன, அவருடைய எண்ணவோட்டம் எவ்வாறு உள்ளது என்பதை நாம் எப்போதுதான் அறிந்துகொள்வது.உலகமே திரும்பி பார்க்கும் வகையில் பல அடுக்ககனக்கான சாதனைகளை புரிந்துவரும் தளபதி உலக விவகாரங்களில் ஒரு வார்த்தை கூட சொல்ல மறுக்கிறார். மிக வேதனையை தரும் செயல்

ஜோதிபாரதி said...
8:02 PM, November 01, 2008

வெளிப்படையான பதிவு.
ஆதங்கங்களை அடைக்கிவைக்க முடியாது,
அடிப்படைக் கோரிக்கையே நிறைவேறாதபோது.

நேர்த்தியாக அமைந்து விட்டது.

மகேந்திரன் said...
10:35 PM, November 01, 2008

திரு லக்கி அவர்களுக்கு,
தங்களை கலைஞரின் தீவிர விசுவாசியாகவே கருதி வந்தேன்.தங்கள் இந்த பதிவு என் கணிப்பு தவறு எனக்காட்டியது.மன்னிக்கவும்.. தங்களை நிறையவே சோதிக்கும் விதமான பின்னூட்டங்களை இட்டு வந்தேன்,தாங்களும் அவற்றை நீக்கியே வந்தீர்கள்.தங்களைப்பற்றி தவறாக எண்ணியதற்கு வருந்துகிறேன்.

gopinath said...
10:48 PM, November 01, 2008

I think there are mistakes on both sides. To me I dont see anyone in TN asking for a seperation from India and the people in Sri Lanka doing the same from their government. I understand there are atrocities done by Govt on our brethern there, but at the same time, LTTE has done more of the same. In the world there are lots of differences in every section of the population. If everyone starts asking for seperation there wont be any peace. In the 21st century it is very important to stay together to become successful. I think its high time, that LTTE stops all of their actions, and sit across the table to discuss a solution on how to become another state in Sri Lankan union. I think thats what the Govt of India is doing, and our pols, as usual want to stoke people's emotions just for their votes. We should not fall for such emotions. History should teach us a lesson to do the right thing. Not use the past to keep doing the same mistake. We cannot change the past, its like water under the bridge. Keep the past in rear view mirror, use it to teach us the lesson for each and every action that we are going to take from now on.
I know this is against most of the readers here, but take a deep breadth and read my comments once again.

Surveysan said...
11:33 PM, November 01, 2008

Franceல் அரசாங்கம், பொதுமக்களுக்கு ரொம்ப பயப்படுவாங்களாம்.
ஒவ்வொரு தீர்மானங்களும் பாத்து பாத்து செய்வாங்களாம்.
ஏன்னா, அங்கா ஆவூன்னா மக்கள் திரண்டு வந்து போராடுவாங்களாம்.

நம்மூர்ல, நாமெல்லாம் சுகவாசிகளாயிட்டோம். நடிகர்கள் செய்வது சரின்னே தோணுது. எவனாவது குரல் கொடுக்கணும். ஈழப் பிரச்சனைக்கு மட்டுமில்ல, எல்லாத்துக்கும் குரல் கொடுக்கணும்.
நடிகர்கள் செய்தது போல், பள்ளிகளும்,கல்லூரிகளும், வங்கிகளும், தனியாரும், அரசு நிறுவனங்களும், டாக்டர்களும், குடும்பப் பெண்களும், என்னிக்கு எல்லாத்துக்கும், கோபம் கொண்டு, வீதீக்கு வந்து, குரல் எழுப்பறாங்களோ, அன்னிக்குதான் ஒளிமயமான தமிழ்நாடு உருவாகும்.

cable sankar said...
11:39 PM, November 01, 2008

மிக அருமையான பதிவு லக்கி.. உங்களிடமிருந்து இவ்வளவு காரசாரமான, கலைஞரை பற்றிய நடுநிலையான பதிவை எதிர்பார்க்கவில்லை.. மிக அருமை. உங்கள் ஆதங்கம் சரிதான் தலைவா.. அதை தலைவரும் புரிந்து கொண்டால் நன்றாகவே இருக்கும்..

Udhayakumar said...
11:59 PM, November 01, 2008

//நீங்கள் இருக்கிறீர்கள் பேசமுடிகிறது என நினைத்தவர்கள் அனைவருக்கும் அந்த கைதில் நான் இல்லை என்னை நம்பாதே எனக்கூறாமல் கூறிவிட்டீர்களே.//

லக்கி, முத்து தமிழினியின் பதிவில் இதே வேதனையை 2வரியில் சொல்லி இருந்தேன்.

ஜோசப் பால்ராஜ் said...
12:13 AM, November 02, 2008

அன்பு லக்கி,
எல்லோருக்கும் வந்ததைப் போல எனக்கும் நீங்கள் தான் இந்த பதிவை எழுதினீர்களா என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க இயலவில்லை. உங்கள் பதிவுகள் எல்லாம் எப்போதும் சூடாண இடுகையாய் இருந்த போதிலும், இந்தப் பதிவுதான் தலைச்சிறந்தப் பதிவு என்பேன். இந்த நடுநிலைதான் அய்யா வேண்டும். இன்று இருக்கும் அரசியல் தலைவர்களில் நல்லவர் கலைஞர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த நேரத்தில் தமிழகத்தில் வேறு யார் முதல்வராய் இருந்தாலும் இந்த அளவுக்கு எழுச்சியும், போராட்டங்களும் நிகழ அனுமதிக்கப்பட்டிருக்காது என்பது உண்மை. ஆனாலும் கலைஞரை நோக்கிக் குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றது என்றால் ஏன்? அவரிடம் நாம் எதிர்பார்பது இதுபோன்ற போராட்டங்களையல்ல. இன்னும் நிறைய எதிர்பார்கிறோம். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இந்தப் போராட்டங்களில் வீரியமில்லை. இவர் சொல்வதைக் கேட்டு எல்லாம் மத்திய அரசு செயல்பட முடியாது, நமக்கென ஒரு வெளியுறவுக் கொள்கை உண்டு என வாதிடுவோரும் இருக்கின்றார்கள். 1996 க்கு பிறகு எந்தக் கட்சியும் மத்தியில் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழல் தான் நிலவுகின்றது. மாநில கட்சிகள் மத்திய ஆட்சியில் தவிர்க இயலாத சக்திகளாகத்தான் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது சென்றத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 பெற்றுத் தந்த கலைஞருக்கு மத்திய அரசில் என்ன செல்வாக்கிருக்கும் என்பது சாதாரன மக்களுக்கு கூடத் தெரியும்.
இப்படி அப்பாவி மக்கள் அநியாயமாய் சாவதைக் கூட கண்டுகொள்ளாமல் கொல்பவர்களுக்கு உதவி செய்வதுதான் நமது வெளியுறவுக் கொள்கையென்றால் அப்படி ஒரு கொள்கை நமக்குத் தேவையா? கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்குவது ஆளுபவர்களா? அல்லது அதிகாரிகளா? ஆள்பவர்களையும் ஆளும் அளவுக்கு அதிகாரிகள் ஆதிக்கம் இருக்கின்றதென்றால் அது நல்லதா? விடை காண இயலாத பலக் கேள்விகள்.

கலைஞரின் செயல்பாடுகளை எதிர்து நான் பதிவிட்ட போது நீங்களும் நானும் சில கருத்து மோதல்களை செய்துள்ளோம். நீங்கள் இன்று எந்த மனநிலையில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளீர்களோ அது போலத்தான் நானும் பல பிரச்சனைகளில் கலைஞரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளேன் என்பதை இப்போதாவது உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

குடுகுடுப்பை said...
3:02 AM, November 02, 2008

ரொம்ப நல்ல பதிவு.

அற்புதன் said...
3:23 AM, November 02, 2008

//அற்புதன்!

போராட்டமென்பது இந்திஎதிர்ப்பு போர் போன்றதாக இருக்க வேண்டும். இல்லையேல் ஒகேனக்கல், நெய்வேலி போராட்டங்கள் மாதிரி டம்மியாகிவிடும். ஈழமக்களுக்கான தமிழர்களின் உணர்வு உரிமைபூர்வமானதாகவும், உண்மைபூர்வமானதாகவும் இருந்தாலொழிய எந்த பயனும் இல்லை//

உங்கள் ஆதங்கம் புரிகிறது தோழரே.
ஆகக் குறைந்தளவில் உங்கள் போராடங்களால் இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசுக்குச் செய்யும் ஆயுத , பொருளாதார உதவிகளைத் தடுக்க முடிந்தால் நலம்.அதற்கு
தமிழகத்தின் அரசியற் தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.தமது அரசியலுக்காக ஈழத் தமிழர் போராட்டத்தைப் பாவிக்காமால் இதனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக அணுக வேண்டும்.

Anonymous said...
6:23 AM, November 02, 2008

Very good Sayanthan. I agree with you.

Anonymous said...
6:28 AM, November 02, 2008

"சிங்களதேசியம் --> தமிழ் தேசியம் --> சிங்களத் தேசியம்" என்று பிரச்சினை மீளமுடியாத சுழற்சிக்குள் சிக்கிக் கொள்கின்றது. YA TV வழங்கும் தீபாவளி நிகழ்ச்சி. அனைத்து தரப்பு வாதங்களும் மக்கள் முன்வைக்கப்படும் போது தான், இலங்கை இனப்பிரச்சினை எவ்வளவு சிக்கலானது என்ற உண்மை உறைக்கின்றது.
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_02.html

Anonymous said...
7:06 AM, November 02, 2008

லக்கி...சிறந்த பதிவு.....

இன்றைய தீவிரவாதிகள்,நாளை சுதந்திரம் கிடைத்தவுடன் தியாகிகள் (உ-ம்)வாஞ்சினாதன்-கமல்

Anonymous said...
7:17 AM, November 02, 2008

nalla pathivu

ஜோ / Joe said...
7:43 AM, November 02, 2008

லக்கி,
இவை உங்களுடைய ஆதங்கம் மட்டுமல்ல .என்னைப் போன்ற கலைஞர் மேல் இன்னும் அபிமானம் வைத்துள்ள பலரின் குமுறலும் கூட .அருமையான பதிவு.

ஜோ / Joe said...
7:45 AM, November 02, 2008

லக்கி,
கலைஞர் மேல் இன்னும் அபிமானம் வைத்திருக்கும் என்போன்றவர்களின் குமுறலை பிரதிபலிக்கும் பதிவு. நன்றி!

jackiesekar said...
9:01 AM, November 02, 2008

முத்துகுமரனின் கருத்தை நான் வழி மொழிகிறேன்

Anonymous said...
9:48 AM, November 02, 2008

முடிந்தால் இந்த உணர்வுகளை உங்கள் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்துங்கள்..

கலைஞரின் இப்போhதைய ஒரே பிரச்சினை - பயம்! தெனாலி கமல் மாதிரி ஆகிவிட்டார். ஈழப் பிரச்சினையில் தமிழ் மக்கள் அனைவரின் உணர்வு ரீதியிலான ஆதரவு இருக்கையில் போயும் போயும் ஜெயா/சோ/ராம் வகையறாவுக்கெல்லாம் பயந்து கொண்டிருக்கிறார்..

குறைந்த பட்சம் தம் தொண்டர்களின் உணர்வுகள் கோருவது என்னவென்று அறிந்து கொண்டாலே அவர் மீண்டெழலாம்..

Anonymous said...
10:14 AM, November 02, 2008

அருமையான கட்டுரை ல்க்கி, நடுநிலை தவறாது, நேர்மையுடன் எழுதப்பட்ட கட்டுரை. கலைஞரை மதிக்கும், நீங்களே அவரை விமர்சித்திருப்பதிலிருந்து கட்டுரையின் நேர்மை புலனாகின்றது. அபாரம் தொடருங்கள்.
ஒரு தகவல்:
உங்கள் லிஸ்டில் வீரன் வேலுத்தம்பி, கப்டன் பிரபாகரனுடன் "தம்பி" படத்தையும் சேர்த்திருக்கலாம்
- மணிவண்ணன் aks குண்டு

யாழ்/Yazh said...
12:19 PM, November 02, 2008

தமிழ் ஈழத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
http://www.youtube.com/watch?v=Ow3TO0yjMsI
நடிகர் ரஜினிகாந்த்:-
சிங்கள ராணுவம் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவேண்டும்!
ஈழதமிழர்கள் சுதந்திரம் அடைந்தே ஆக வேண்டும். அதை சிங்கள அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நாடுகள் அதைப் புரிய வைக்க வேண்டும்

மதுரைக்காரன் said...
5:10 PM, November 02, 2008

யதார்த்த நிலமையை எடுத்துக் கூறியது உங்கள் பதிவு. தனி ஈழம் மலர்வதிலோ அல்லது அவர்களுக்கு சம உரிமை கிடைப்பதிலோ யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. திரைப்படத்துறையினர் நடத்திய போராட்டம் தன்னிச்சையாக இல்லாமல் கண்டிப்பாக அரசியல் நெருக்கடிகளுகுட்பட்டும், தங்களின் படங்கள் உலகளவில் எந்தப் ப்ரச்சனையும் இல்லாமல் ஒட வேண்டும் என்பதற்காகவுமே நடத்தப்பட்டிருக்கலாம். காரணம் வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்களை எடுத்து வெளியீடுவோர் பெரும்பாலும் ஈழத் தமிழர்களாய் இருப்பதினால். ஒரு சிலர் வேண்டுமானால் உண்மையான அக்கரையோடு இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான நடிகர்கள், குறிப்பாக நடிகைகளுக்கு எதற்க்காக இந்தப் போரட்டம் என்பதே தெரியாமல் கூட இருக்கலாம். 'ஏதோ வரச் சொன்னார்கள். வந்து உட்கார்ந்து செல்கிறோம். போகவில்லை என்றால் படங்கள் கிடைக்காது, கிடைக்கும் படங்களிலும் சரியாக ஒத்துழைக்க மாட்டர்கள்' என்பதற்காகவே இருக்கும்.

பிரேம்குமார் said...
5:16 PM, November 02, 2008

தல, சத்தியமா இத எழுதுனது நீங்க தானா? ;)
பலரும் நினைப்பதை அழகாக தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

'போரை நிறுத்தங்கள்' என்று சொல்ல அண்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் எவ்வளவு காலம் பிடிக்கும். அதை கூட இந்த அரசுகள் சொல்ல தயங்குவதேன் :(

Anonymous said...
6:48 PM, November 02, 2008

//அஜீத் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டு, காசுக்காகவோ, தனது நலத்திற்காகவோ வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டது போல எழுதியுள்ளீர்கள்.நடிகர் சங்கம் நடத்தும் பல விழாக்களில் மிகவும் தைரியமாக வர மாட்டேன் என்று கூறியவர் அஜீத் மட்டுமே. அவருக்கு மனிதத்தன்மை உள்ளது. எனவே தான் சுனாமி இரங்கல் கூட்டம், காவேரி பிரச்சனை போன்ற போராட்டங்களில் பங்கேற்றார்//


I AGREE WITH HIM.UNNAVIRATHAM IRUPPATHAI VIDA,SINGALAM SENDRU "VIZHIPUNARCHI NADAGAMO" ALLATHU NAMMUDAYA ETHIRPAI PATHIVU SEYYUM VITHATHIL ILLANGAI MUDALVARRUKU IVARKAL ANAVARUM THANGALATHU ETHIRPAI THERIVIKKLAM.NITHI THIRATA VELINADU POGUM IVARGAL MANITHABIMANA ADIPADDAIYIL PAKKATHIL IRUKKUM ILANGAIKKU SENDRU VANTHAL IVARKALAI PARATTALAM.ARASIYAL ATHATHIRKAGA MEDAI POTTU NADIKKUM IVARKALATHU IRATTAIVEDATHAI PURINTHU KOLLA VENDUM.IRATTAIVEDAM PODUM IVARKALAI PATRI MAKKAL PURINTHU KOLLA VENDUM.

Busy said...
6:51 PM, November 02, 2008

நியாயமான உணர்வுகள், நேர்மையான கருத்துக்கள்.

தமிழ்நதி said...
7:27 PM, November 02, 2008

அதிரடி அறிவிப்புகளையும் பிறகு அடிக்கும் பல்டிகளையும் பார்க்கும்போது சில அரசியல்வாதிகளை விட நடிகர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

Thamil said...
7:12 AM, November 03, 2008

கலைஞரை உங்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லையா? தமிழ் நாட்டு அரசியல் தலையை சுற்ற வைக்கிறது, யாரைத்தான் நம்புவது

Anonymous said...
12:59 PM, November 03, 2008

Excellent Lucky.
Nijama konjam kashtama thaan irunthathu namba..
ithu unga pathivu thaana endru..
eppavum irukkura kalaingar bias ithula illa.
really appreciate u.
ungala maathiri allunga kitta naangal ethir paakurathu ithu mathiri nadunilayana karthukkal thaan.
Thnx Once again
-
Raji

Tamil said...
2:24 PM, November 03, 2008

கொரில்லாத்தனமான காட்டுயுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இரக்கமற்ற இலங்கை அரசை பார்த்து, 30 வருடங்கள் சண்டைபோட்டும் ஜெயிக்காத நீ ஒரு ஆம்பளையா என்று கேட்பது அந்த காண்டாமிருகத்தை மேலும் உசுப்புவதுபோல் இல்லையா?? இதே தவற்றை செய்ததால்தானே சீமான் அமீர் உள்ளே போனார்கள்?? ரஜினியும் அப்படி பேசத்தான் வேண்டுமா??

போர் நிச்சயம் மாபெரும் தவறுதான். அதேசமயம் ஆம்பளைங்களா என்ற அடிமுட்டாள்தனமான காட்டுமிராண்டித்தனமான சொற்பிரவாகம் தேவைதானா ??

அதுவும் ஒரு அண்டைனாட்டின் அரசினை பார்த்து?

பலவருடங்களாக அமெரிக்க அரசு பின் லேடனை பிடிக்க முயன்று இன்னும் முடியவில்லை

நம் இந்திய அரசால் பாகிஸ்தான் மற்றும் இந்திய முகாஜைன்களால் வரும் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இந்தியா முழுவதும் குண்டுகள்
வெடித்தவண்ணம் உள்ளன‌

ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோதும் ஆட்சியில் இருந்த கலைஞரால் அவனை பிடிக்கமுடியவில்லை

அதே கலைஞர் ஆட்சியில்தான் கோவை குண்டுவெடிப்பு நடந்தது.

இவர்கள் எல்லாம் ஆம்பிளைகள் இல்லையா??

என்ன கொடுமை ரஜினி இது???

ஜோதிபாரதி said...
7:08 PM, November 03, 2008

உள்ள நடப்பை அப்பட்டமாக வெளிக்கொணரும் கட்டுரை.
எழுத்தாளனுக்கு எந்த சமரசமும் தேவை இல்லை என்பதை நன்றாக உணர்த்துகிறது.

லீனாரோய் said...
10:47 PM, November 03, 2008

லக்கி,
மிக மிக நடுநிலையில் நின்று, நேர்மையாக எழுதிய ஒரு பதிவு இது.
ஈழத்தமிழன் என்ற வகையில் எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
இதுவரை ஒரு திமுக அபிமானி என்ற தளத்தில் இயங்கி வந்த நீங்கள், கலைஞரைக் கூட இங்கு விமர்சித்திருப்பது, நிச்சயம் உங்களில் ஒரு மதிப்பையே ஏற்படுத்துகிறது.

நீங்கள் கூறிய எந்த விசயத்தையும் யாராலும் மறுக்க முடியாது.

ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன்.
அது தப்பான புரிதலாக இருந்துவிடக் கூடாது.
ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தில் நிவாரணம் சேர்ப்பது என்பது மிகுந்த மகிழ்ச்சியே.
ஆனால் எமக்கு அது தேவையே இல்லை.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் ஒரு சொல் தலைவரிடமிருந்து வருமானால், நிவாரணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள்.
எமக்குத் தேவையானதெல்லாம் தமிழகச் சகோதரர்களின் தார்மீக ஆதரவுதான்.
அந்த ஆதரவு மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லுவதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை இந்தியாவிடம் அழுத்தம் கொடுத்து நிறுத்தச் செய்வதுதான்.

நிச்சயமாக அங்கு மக்கள் உணவு இன்றியும் இருக்க இடமின்றியும் வாழ்கிறார்கள்தான்.
ஆனால் அவர்களுக்கு இப்போ உடனடித் தேவை உயிர்ப்பயமற்ற ஒரு நிலையான வாழ்வு.
இலங்கை அரசை யாரும் போராட வேண்டாம் என்று தடுக்கச் சொல்லவில்லை.
அவர்கள் தங்கள் போராட்டத்தை, போராளிகளுடன் மட்டும் வைத்துக் கொள்ள இந்தியாவை அறிவுறுத்தச் சொல்லுங்கள்.

புலிகள் கூட வான் தாக்குதல் செய்கிறார்கள்தான்.
ஆனால் எங்கே? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்.
அவர்கள் சிங்களப் பொதுமக்களின் மீது குண்டு போட எவ்வளவு நேரம் தேவை.
ஆனால் அவர்கள் அதைச் செய்யப் போவது இல்லை.

எனவே எமது அப்பாவி தமிழ் மக்கள் மட்டும் இப்போ காப்பாற்றப்பட வேண்டும்.
அதுதான் எமக்கு இப்போ வேண்டிய அத்தியாவசியமான உதவி. கலைஞரிடமும் நாம் எதிர்பார்ப்பது இதைத்தான்.

Madhusudhanan Ramanujam said...
1:08 AM, November 04, 2008

சபாஷ்! தலைவனை புகழ மட்டும் மாட்டேன், சாடவும் செய்வேன் என்ற உங்களை மனதாரா பாராட்டுகிறேன். நீங்க எழுதியிருக்கும் பதிவில் கூறிய அதே கருத்தைத் தான் நானும் என் பதிவில் எழுதியுள்ளேன். என்ன ஒன்று, நீங்கள் எப்போதும் போலவே அதற்கும் ஒரு நக்கல் பின்னூட்டத்தை போட்டுவிட்டீர்கள். இருந்தாலும் அதற்கும் நன்றி சொல்கிறேன்.

அருண்மொழி said...
7:15 AM, November 04, 2008

//தமிழினத்தின் ஆணிவேரை அமிலம் ஊற்றி சிங்களவெறியர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ உடைந்து கீழே விழுந்த கிளைகளை ஃபெவிகால் கொண்டு ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழனின் கையறுநிலையை நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுதான் தோன்றுகிறது.//

100% சரியான வார்த்தைகள் லக்கியாரே. அருமையான/தேவையான பதிவு.

Xavier said...
9:06 PM, November 07, 2008

இன்னைக்கு கலைஞர் பேட்டியப் பாத்தா காங்கிரஸ்காரங்கள மிஞ்ஜுற மாதிரி பேசியிருக்கார். கலைஞர் காங்கிரஸ்ல சேர்ந்தா நிச்சயமா ஒரு கோஷ்டிக்கு தலைவராயிரலாம்.

ச.இலங்கேஸ்வரன் said...
3:58 PM, November 10, 2008

நான் வவுனியாவில் இருந்து எழுதுகின்றேன் நண்பரே! உண்மையில் தங்களின் பதிவில் எங்கள் எண்ணக்கருக்களை தெளிவாக விளங்க வைத்து விட்டீர்கள்.

தமிழகத்தில் உள்ள சகேதார சகோதரிகளுக்கும்,
திரையுலகத்தினரின் ஆதரவுக்கும் நாங்கள் என்றும் நன்றிக் கடன் உள்ளவர்களாக உள்ளோம்.
ஆனால் அதே வேளையில் திரையுலகதத்தினர் பலர் ஈழப் பிரச்சினை தொடர்பாக பேசிதை நாம் சன் தொலைக்காட்சி வாயிலாக பார்க்கும் போது இங்கு நக்கலாக கதைத்தனர். மேடையில் கதைக்கும் போது அறிந்த விடயத்தையும் உண்மைகளையும் மட்டுமே கதைக்க வேண்டும். இல்லாவிடில் இப்படித்தான் கேலிக் கூத்தாகிவிடும்.
இது திரைப்படம் அல்ல. தமிழரின் துயரம்.

அஜித் அவர்கள் சொன்னது போல் சினிமாவை வாழவிடுங்கள் அதை எதனோடும் கலக்காதீர்கள் என்பது மிகச் சரியே. திரைப்படத்துறை என்பதும் ஓர் தொழிலே! எதற்கெடுத்தாலும் திரைப்படத்துரையினரை குறை சொல்வது சரியில்லையே?

சிலருக்கு கொழும்பு எங்கே உள்ளது. வவுனியா எங்குள்ளது என்றே தெரியவில்லை.
எனது தமிழ் தெரிந்த பல சிங்கள நண்பர்கள் கூட இதை . கிண்டலடித்தார்கள். அவர்களில் ஒருவர் கீழுள்ளவாறு கூறினார்

”ம் விட்டா இந்தியத் தமிழர்கள் மகிந்த ராஜ பக்சவை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் என்று சொன்னாலும் சொல்வார்கள் போல”.

Anonymous said...
12:20 PM, February 05, 2009

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

Anonymous said...
3:13 PM, February 22, 2009

அரசியல் பல்டிகளால் ஆதரவிழந்துப் போனவர் வைகோ.

Vaiko adithaal balti , karunanithi adithal Rajathanthiram , arasiyal sanakkiyan.

when you people will change?

லைவ்!

லைவ்!

தொடர்புக்கு!

மின்னஞ்சல் :
luckylook32@gmail.com

கைப்பேசி :
+919841354308

மின் சந்தா

Your email address:


Powered by FeedBlitz

இடுகைகள்

Followers