September 26, 2008

ராமன் தேடிய சீதை - விமர்சனம்!


சேரன் உதடு துடிக்க அழுகிறார். குலுங்கி குலுங்கி அழுகிறார். முதுகை காட்டி அழுகிறார். கண்கள் சிவக்க அழுகிறார். அழுகிறார். அழுகிறார். அழுதுக்கொண்டே இருக்கிறார். ஸ்ஸ்ஸ்.. ப்பா.. சேரன் மட்டுமே சோகம் ததும்ப பேசிக்கொண்டேயிருக்கும் மிகநீளமான பத்து நிமிட ஓபனிங் காட்சியிலேயே கண்ணை கட்டுகிறது. சோரம் போன மாதிரியே எந்த படத்திலும் நடிக்கும் சேரன் தன் பெயரை சோரன் என்று மாற்றிக் கொள்ளலாம். ஒரு த்ராபை மெகாசீரியலின் 400 எபிசோடுகளையும் தொடர்ச்சியாக பார்த்தது மாதிரி பயங்கர அலுப்பு.

சேரனுக்கு சின்ன வயதில் மனநோய் இருக்கிறது. அதெல்லாம் சரியாகி ஒரு வெட்டிங் இன்விடேஷன் விற்கும் நிறுவனம் ஆரம்பித்து நல்ல நிலைமையில் இருக்கிறார். பெண் பார்க்கும்போது சிறுவயதில் மனநோய்க்கு சிகிச்சை பெற்றதைப் பற்றி வெளிப்படையாக தனக்கு பார்க்கப்படும் பெண்களிடம் சொல்கிறார். பெண்கள் நிராகரிக்கிறார்கள். கடைசியாக எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்டு திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் பெண், திருமணத்துக்கு முதல்நாள் காதலனுடன் ஓடிவிடுகிறாள். மீண்டும் பெண் பார்க்கும் படலம். நகைச்சுவையாகவே இந்த கதையை சொல்லியிருக்க முடியும். ஏ.வெங்கடேஷ் மாதிரி இயக்குனர்களிடம் தந்திருந்தால் பின்னி பெடலெடுத்திருப்பார்கள்.

இயக்குனரிடம் யாரோ தப்பாக சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது. உலகத்தரத்துக்கு படமெடுக்க வேண்டுமானால் காட்சிகளை ஆமை வேகத்தில் நகர்த்த வேண்டுமென்று. அதிரடியாக நகர்த்த வேண்டிய காட்சிகளை கூட அசமஞ்சம் மாதிரி இயக்கியிருக்கிறார். இந்த கதைக்கு சம்பந்தமேயில்லாமல் பசுபதி, நிதின் டிராக்குகளை வணிக சாத்தியத்துக்காக இணைத்திருக்கிறார். ரெண்டு டிராக்குமே கதையின் வீரியத்தை அப்பட்டமாக குறைக்கிறது. திருமணம் நின்றுபோனதால் சோகத்தில் இருக்கிறார் ஹீரோ. அவருக்கு தன்னம்பிக்கை வந்து விட்டது என்று காட்டுவதற்காக அரைமணி நேர பசுபதியின் ப்ளாஷ்பேக் டிராக். மெகா சீரியலுக்கு தான் இந்த ட்ராக் மெத்தடெல்லாம் சரிபட்டு வரும். அப்படியும் ஒரு டிராக் வைக்கவேண்டுமென்று விரும்பும் இயக்குனர்கள் நான்கைந்து முறையாவது மவுனராகம் படத்தின் கார்த்திக் ட்ராக்கை திரும்ப திரும்ப போட்டுப் பார்க்க வேண்டும்.

பசுபதி பார்வையற்றவராக நடித்திருக்கிறார். கொஞ்சம் கூட இயல்பேயில்லை. தன்னோடு பேசுபவர்களின் முகம் பார்த்து (?) பேசுகிறார். ரஜினி மாதிரி சண்டை போடுகிறார். ஆறேழு பேரை ஸ்டிக் வைத்து அனாயசமாக பந்தாடுகிறார். இந்த கேரக்டருக்கு ஹீரோயிஸ குணாம்சங்களை தந்து கேரக்டரையே ஸ்பாயில் செய்திருக்கிறார்கள். பார்வையற்ற கேரக்டர் என்றதுமே ராஜபார்வையும், காசியும் இயல்பாகவே நினைவுக்கு வருகிறது. மின்சாரக் கனவு நாசரை மனதில் வைத்து பசுபதியை தேர்வு செய்திருப்பார் இயக்குனர். இந்த கேரக்டருக்கு பசுபதியை விட பார்த்திபன் பொருத்தமாக இருந்திருப்பார். வெய்யிலில் விஸ்வரூபம் எடுத்த பசுபதிக்கு அடுத்தடுத்து குசேலன், ராமன் தேடிய சீதை என்று மொக்கை கேரக்டர்களாகவே அமைகிறது. நிதின் சத்யாவின் டிராக்கில் இளமை ஊஞ்சலாடுகிறது என்றாலும் கதையை விட்டு விலகி மீண்டும் கதைக்குள் செட் ஆக தடையாக இருக்கிறது.

படத்தில் பளிச்சென்று ஈர்ப்பது மணிவண்ணன். கட்டம் போட்ட ப்ளூ லுங்கி கட்டி சாய்ந்து சாந்து நடந்து சென்று சேரனை அறையும் காட்சி அள்ளுகிறது. மனிதர் கொஞ்சம் முயற்சித்தால் தென்னிந்தியாவின் நஷ்ருதின் ஷா ஆகலாம். ‘இப்பவே இப்பவே' பாட்டு இதம். பாடல்களில் இனிமை காட்டிய வித்யாசாகர் பின்னணி இசையின் போது கைகட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார். உலகப்பட எஃபெக்டுக்காக பல காட்சிகளுக்கு இசையே வேண்டாமென்று இயக்குனர் கேட்டிருப்பார்.

பசுபதிக்கு ஜோடியாக வரும் கஜாலாவுக்கு வயசாகி விட்டது போலிருக்கிறது. ஏழுமலை, யுனிவர்சிட்டியில் எல்லாம் ப்ரெஷ்ஷாக இருந்தார். விமலாராமனும் கிழடு தட்டி போயிருக்கிறார். ரம்யா நம்பீசன் குட்டி நமிதா. மூக்கு, கண்ணு எல்லாம் அப்படியே நமீதா போலவே இருக்கிறது. இடுப்பு மட்டும் அடுப்பு. கார்த்திகா கற்சிலை போல கச்சிதம். அவருக்கு ஒரே ஒரு நடன அசைவு மட்டுமே தெரியும் என்று தோன்றுகிறது. கருவாப்பையாவிலிருந்து அதே அசைவு.

க்ளைமேக்ஸ் காட்சி எதற்கு அவ்வளவு நீளமாக ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகிறது என்று தெரியவில்லை. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் நக்சல்பாரி தோழர்களை காமெடியன்களாக சித்தரித்த இயக்குனருக்கு கண்டனம்.

ராமன் தேடிய சீதை - ராவாக இருக்கிறது.


Tamilish - தமிழ்

23 பின்னூட்டங்கள்:

rapp said...
12:28 PM, September 26, 2008

me the first?

லக்கிலுக் said...
12:30 PM, September 26, 2008

ராப் எனக்கொரு சந்தேகம். யார் பதிவு போட்டாலும் எப்படி உங்களால் மட்டும் முதல் பின்னூட்டம் போட முடிகிறது?

மண்டை காய்கிறது. விடை சொல்லுங்கள்.

செந்தழல் ரவி said...
12:37 PM, September 26, 2008

///மஞ்சள் மகிமை! ///

அடுத்து வைர நெஞ்சம் உண்டா ?

ராப் RSS ரீடர் ஏதோ வைத்துள்ளார் என்று நினைக்கிறேன்...பதிவு போட்டு அடுத்த செக்கண்டு அவருக்கு தெரிந்துவிடுகிறது...உடனே வந்து பதிவை படிக்கிறாங்களோ இல்லையோ, ஒரு மீ த ப்ர்ஸ்ட் போட்டுவிட்டு அப்பீட்ட்...அப்புறம் பொறுமையா நேரம் கிடைக்கும்போது ஒரு பின்னூட்டம் போடுவாங்க..

வகுப்புல முதல் மாணவி போல் இருக்கிறது...(முதல் பெஞ்சு மட்டும்)

rapp said...
12:46 PM, September 26, 2008

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........................நான் அத்தனை தடவையா மீ த பர்ஸ்டு போட்டுட்டேன். மீ த 50/100தான் வெண்பூ மாதிரி உடன்பிறவா பிரதர்ஸ் போட விட மாட்டேங்குறாங்க, அதான் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகி என்னால முடிஞ்சத செய்றேன்.

narsim said...
12:59 PM, September 26, 2008

//ராமன் தேடிய சீதை - ராவாக இருக்கிறது// கலக்கல் பன்ச் தல‌

நர்சிம்

ப்ரியன் said...
1:03 PM, September 26, 2008

/*
ராவாக இருக்கிறது.*/

பிராந்தியா , விஸ்கியா தலைவரே?!

வீக் எண்டுல படம் பார்க்கலாம்ன்னு நேத்துதான் டவுன்லேடு பண்ணி வெச்சேன்... :(

சரி சன் பிக்சர்சின் 'நாக்க முக்க' காதலில் விழுந்தேன் விமர்சனம் எப்போது?

இனியவள் புனிதா said...
1:08 PM, September 26, 2008

என்ன அண்ணா இது? நான் வேறு இராத்திரியெல்லாம் கண் விழிச்சு இந்த படத்துக்கு வீட்டுப் பாடமெல்லாம் செஞ்சு பதிவு போட்டா... இப்படி ஒரே வரியில் எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வச்சுபுட்டிகளே!!!!

தமிழன்... said...
1:37 PM, September 26, 2008

பாவம்யா சேரன்...

தமிழன்... said...
1:41 PM, September 26, 2008

\
ராமன் தேடிய சீதை - ராவாக இருக்கிறது.
\

அமா எத்தனை மணி காட்சி பாத்திங்க..;)

Anonymous said...
1:43 PM, September 26, 2008

மஞ்சள் மகிமைக்கு பதில்

http://image1.indiaglitz.com/tamil/gallery/Movies/kadarkarai/kadarkarai090908_18.jpg

இந்த படத்தை போட்டிருக்கலாம்.

முரளிகண்ணன் said...
1:52 PM, September 26, 2008

ஏனைய ஊடகங்களில் படம் நன்றாக இருப்பதாக சொல்லப்படுகிறதே?

30+ க்கு ஏற்ற படமோ?

Anonymous said...
3:53 PM, September 26, 2008

செய்தித் தாள் மற்றும் ஊடகங்களில் இன்னொரு ஆட்டோகிராப் என விமர்சிக்கப் படுகிறதே....!

என்ன இது...?
இளஞ்சேரனுக்கு வந்த சோதனை.
அவரின் நிஜப் பெயர் இது.

இராஜா-BGL

Anonymous said...
4:11 PM, September 26, 2008

waiting For your chakarakatti review

குப்பன்_யாஹூ said...
4:23 PM, September 26, 2008

சேரன் படம் எல்லாமே வேஸ்ட் , அத போய் பாத்து நீங்க வாழ்க்கையில் 3 மணி நேரம் இழஅந்துட்டு வந்து நிக்க்ரிங்க்லே.

இனி யாவது சேரன், SJ சூர்யா , பிரேம் போன்ற நடிகர்களின் படங்களை புறக்கணிப்போம்.

வாரத்திற்கு 8 படம் பார்க்கும் உங்களை என்ன என்று சொல்வது.

குடிமகன் said...
4:30 PM, September 26, 2008

//ராப் எனக்கொரு சந்தேகம். யார் பதிவு போட்டாலும் எப்படி உங்களால் மட்டும் முதல் பின்னூட்டம் போட முடிகிறது?

மண்டை காய்கிறது. விடை சொல்லுங்கள்.//

அவருக்கு தொழிலே இது தான் போல ...

priyatharshini said...
4:33 PM, September 26, 2008

விமர்சனத்தில் உங்கள் பார்வையில் எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

சேரன் நல்லாத்தான் நடித்துள்ளார். படம் ரொம்ப நல்லா இருக்கு.

அதிஷா said...
5:16 PM, September 26, 2008

வாட் ஏ கோ இன்சிடன்சு தோழர் நீங்களுமா இந்த கருமம் புடிச்ச படத்தை பார்த்தீர்கள்..

நேற்று நான் தேவி திரையரங்கில் ஒரு வலது பக்கம் உடைந்த நாற்காலியில் அமர்ந்திருந்தேன்

நீங்கள் எப்போது பார்த்தீர்கள் சொல்லவேயில்லை

Anonymous said...
6:41 PM, September 26, 2008

//பார்வையற்ற கேரக்டர் என்றதுமே ராஜபார்வையும், காசியும் இயல்பாகவே நினைவுக்கு வருகிறது.//


சான்ஸே இல்லீங்க! அழகே, அழகு (ராஜ பார்வை) பாட்டு இப்ப பார்த்தாலும் செம கிக். நம்ம தலைவர, அடிச்சிக்க முடியாது.

Anonymous said...
9:20 PM, September 26, 2008

Romba mosama vimarsanam panni irukkinga.

As if you are not at all happy with

Seran.

do not be biased.

povi said...
9:54 PM, September 26, 2008

movie ok

அது சரி said...
4:26 AM, September 27, 2008

//
சோரம் போன மாதிரியே எந்த படத்திலும் நடிக்கும் சேரன் தன் பெயரை சோரன் என்று மாற்றிக் கொள்ளலாம். ஒரு த்ராபை மெகாசீரியலின் 400 எபிசோடுகளையும் தொடர்ச்சியாக பார்த்தது மாதிரி பயங்கர அலுப்பு.
//

எல்லாரையும் சிரிக்க வச்சிட்டீங்க லக்கி :0)

//
விமலாராமனும் கிழடு தட்டி போயிருக்கிறார். ரம்யா நம்பீசன் குட்டி நமிதா. மூக்கு, கண்ணு எல்லாம் அப்படியே நமீதா போலவே இருக்கிறது. இடுப்பு மட்டும் அடுப்பு.
//

ச்சே! இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். விமலா ராமனுக்காக இ ந்த படத்தை பாக்கலாம்னு நெனச்சேன். அதுல கல்லு விட்டுட்டீங்களே!

சரி போவுது, ரம்யாவுக்காக ஒரு ஒல்டு மங்கு ரம்மு அடிச்சிட்டு பாக்க வேண்டியது தான். நானும் ரம்யாவை இன்னும் பாத்ததில்ல!

vinoth said...
1:12 PM, September 27, 2008

padam nalla irukunu kelvi paten.
Apadi ena cheran mel apadi oru kadupu unkalaku..

sriram said...
2:11 PM, September 29, 2008

raCorrect Boss.The day i watched Thavamai thavamirundhu, i decided i will never watch Cheran's movie again in my life.:-)
Boss, Comparing Naseer and Manivannan ellam romba Over.Did you watch "A Wednesday"? You will know why i say like that.

லைவ்!

லைவ்!

தொடர்புக்கு!

மின்னஞ்சல் :
luckylook32@gmail.com

கைப்பேசி :
+919841354308

மின் சந்தா

Your email address:


Powered by FeedBlitz

இடுகைகள்

Followers