
ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை பார்த்தவர்கள் மின்னலை கண்டதாக சொல்கிறார்கள். சபாஷ் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை. ஷூமேக்கர் வேகத்தில் ஒரு போலிஸ்காரர் காரை ஓட்டிச்செல்ல காரணம் என்னவாக இருக்கும்?
ஒரு உயிரைக் காக்க...
ஹிதேந்திரன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன். அப்பா அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலியும் மருத்துவர்கள். மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அப்பாவின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை சந்தித்து திரும்பியவனுக்கு எமன் ஒரு மீன்பாடி வண்டி ரூபத்தில் வந்தது. எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டவன் நினைவிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.
பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்தார்கள். ஹிதேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டது (பிரைன் டெத்). கிட்டத்தட்ட மரணம். இதயம் மட்டுமே துடிக்கும். பெற்றோரும் மருத்துவர்கள் ஆயிற்றே? பிரச்சினையை புரிந்துகொண்டார்கள். தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்பினார்கள். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன. புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா நகரில் இருக்கும் செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு இதயம் அவசரமாக தேவைப்பட்டது. ஹிதேந்திரனின் இதயம் அகற்றப்பட்டு 20 நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 20 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் அடைவது சாத்தியமா?
மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை அணுகினார்கள். பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்ட கூடுதல் ஆணையாளர் சுனில் உடனடியாக ஒரு உதவி ஆணையாளரை அனுப்பி வைத்து உதவுமாறு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் இந்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டார். தன் சக அதிகாரிகளோடு தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாதவாறு திட்டம் தீட்டினார். சிக்னல்கள் முழுக்க போலிசாரின் கட்டுப்பாட்டுக்கு சில நிமிடங்களில் வந்தது. ஒரு ஆம்புலன்ஸில் இதயத்தை எடுத்துச் செல்லவும், அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட ஆக்சண்ட் காரில் ஏ.சி. மனோகரனே முன்செல்லவும் திட்டம் தீட்டப்பட்டது.
ஹிதேந்திரனின் இதயத்தை ஒரு பெட்டியில் வைத்து படபடப்போடு மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். படபடப்பில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு பதிலாக ஏ.சி.யின் காரில் ஏறிவிட்டார்கள். ஒரு நொடியை கூட வீணடிக்க விரும்பாத ஏ.சி. தனது டிரைவரான கான்ஸ்டபிள் மோகனை புயல்வேகத்தில் ஓட்ட சொன்னார். ஏ.சி.யின் கார் இலகுவாக செல்ல வழியெங்கும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டிருந்தது. போனில் போலிஸ்காரர்களிடம் பேசியபடியே வழியில் இருந்த தடங்கல்களையெல்லாம் அகற்றினார் ஏ.சி.
மேட்லி ரோடு, தி.நகர் புதிய மேம்பாலம், லயோலா, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா வளைவு வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மோகன் காரை விரட்டினார். திருப்பங்களில் கூட பிரேக்கில் மோகன் காலை வைக்கவில்லை. ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்கவேயில்லை. பொதுவாக போக்குவரத்தில் இந்த தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை பிடிக்கும். மருத்துவர்கள் கொடுத்திருந்த டார்கெட் 20 நிமிடம். பத்தே நிமிடங்களில் செரியன் மருத்துவமனையை ஏ.சி.யின் கார் அடைந்திருந்தது. ஆறு மணி நேரம் நடந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்!
இனி ஹிதேந்திரனின் இதயம் வாழும்!!
மருத்துவத்துறை காவல்துறையோடு இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறது. சென்னையில் மருத்துவத்துறை சாதனைகள் புரிவது ஒன்றும் அதிசயமல்ல என்றாலும், காவல்துறையின் இந்த அதிரடி சாதனை சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.


69 பின்னூட்டங்கள்:
11:16 AM, September 24, 2008
Wow!!! Great News. உடனே இதை திட்டமிட்டவர்களுக்கும், செயல்படுத்தியவருக்கும் ஏதாவது பரிசு/பட்டம் கொடுத்து ஊக்குவிக்கவேண்டும்..
11:25 AM, September 24, 2008
தன் மகன் உடல் உறுப்பை தானம் செய்யவந்த பெற்றோருக்கும், வாகனத்தை ஓட்டியவர்களுக்கு ஒரு சல்யூட்.
11:26 AM, September 24, 2008
wow... Salute to the great effort of Mr.Mohan and Mr. Manoharan...
11:26 AM, September 24, 2008
11:29 AM, September 24, 2008
அதிஷா!
Be serious.
இது சென்னையில் நேற்று நடந்த பரபரப்பான சம்பவம்.
கேகே நகரை கலைஞர் கருணாநிதி நகர் என்று சொல்வதும் ஜெஜெ நகரை பு.தலைவி ஜெஜெ நகர் என்று சொல்லுவதும் என் வழக்கம்.
11:29 AM, September 24, 2008
ites really a great one...
enathu valtthukkal kavalthuraikku..
11:36 AM, September 24, 2008
சொன்னா நம்ப மாட்டீங்க, இதை பரபரப்போடு படித்து என்னுடைய இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது...சத்தியம்...!!
ஐ யாம் கோயிங் பார் தம் நவ்..!!
11:44 AM, September 24, 2008
KUdos to Chennai Police.They should be given some reward.
But a clarification
Was it Apolo Hospital Teynampet or Greams Road ?If Apolo Greams Road , why to go to Madly Road and T.Nagar Flyover?Even from Teynampet Apolo Hospital why to Madly Road for going to Thirumangalam.
Just curiosity!
K.G.Subbramanian
11:45 AM, September 24, 2008
No words to commend Dr. Ashokan and Dr. Pushpanjali, parents of Hithendran. I salute you for the most noble deed. Read http://www.thehindu.com/2008/09/24/stories/2008092452320100.htm
11:48 AM, September 24, 2008
//KUdos to Chennai Police.They should be given some reward.
But a clarification
Was it Apolo Hospital Teynampet or Greams Road ?If Apolo Greams Road , why to go to Madly Road and T.Nagar Flyover?Even from Teynampet Apolo Hospital why to Madly Road for going to Thirumangalam.
//
பல சாலைகள் ஒருவழிப்பாதையாகவும், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாலும் இந்த பாதையை தேர்ந்தெடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
எப்படியிருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் பத்து நிமிடங்களிலேயே செல்ல முடிந்தது என்பதால் அவர்களது பாதை தான் சரி என்றாகிறது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயன்படுத்தியிருந்தால் 30 நிமிடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.
11:48 AM, September 24, 2008
நான் செய்தித்தாளில் படித்ததைவிட நீங்கள் எழுதியுள்ளது, சம்பவத்தை நேரில் இருந்து பார்த்ததுபோல இருந்தது.
ஒரு விசயம் கவனித்தீர்களா..காவல்த்துறையினர் செயல்பட்டவிதம்..20 கிமீ தூரம் செல்ல அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி..அதை சாதித்துக்காட்டிய விதம்..அபாரத் திறமையினாலேயே இது சாத்தியம்..
உண்மை: அரசியல் தொந்தரவுகள் இல்லையென்றால் எல்லா வழக்குகளிலும் இவர்களால் (காவல்த்துறையினரால்) இதே வேகத்தில் செயல்பட முடியும்னு நினைக்கிறேன்
11:53 AM, September 24, 2008
Super! Hats off to Chennai Police!
12:03 PM, September 24, 2008
ஹிதேந்திரனின் பெற்றோர்,சம்பந்தப் பட்ட மருத்துவர்கள்,அனைத்துக்கும் மேலாக,அந்தத் தியாகமும் உழைப்பும் பயனின்றிப் போகாமல்,சிறந்த முறையில் பணியாற்றிய காவல் துறை-அனைவரையும் மனித குலம் சிரம் தாழ்த்தி வணங்குகிறது.ஹிதேந்திரன் வாழ்கிறான் -இதயமாக,கண்களாக,சிறுநீரகங்களாக, கல்லீரலாக.
12:08 PM, September 24, 2008
great
12:12 PM, September 24, 2008
ஹிதேந்திரனின் பெற்றோர்,காவல்துறை,மருத்துவர்களுக்கு என் சல்யூட்.
12:14 PM, September 24, 2008
மீன்பாடி வண்டியை அம்மா தடை செய்ததாக நியாபகம்?அந்த தடை இன்னும் அமலில் இருக்கா?!
முந்தைய பின்னுட்டத்தில் ப்ரியன் என்பதற்கு பதிலாக ப என தட்டி அனுப்பிவிட்டேன்.
12:17 PM, September 24, 2008
வாழ்க வாழ்க.
இந்த உதவியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி பல. மனிதநேயமிக்க காரியம் செய்திருக்கின்றீர்கள்.
செய்தியை அறியத்தந்தைமைக்கு நன்றி ல.லு. லக்கிலுக்கை ல.லுன்னும் சொல்லறது என்னோட வழக்கம். :) பின்னூட்டங்களையும் படிச்சதாலா வந்த குசும்பு இது! :D
12:20 PM, September 24, 2008
No Tamil font at present - Sorry
I wd come again and reply
12:21 PM, September 24, 2008
அப்படியே புல்லரித்துப்போனது.. சென்னையின் பிரதான சாலைகளில் தன் உயிரை துச்சமென மதித்து, ஒரு சிறுவன் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு ஒரு ராயல் சல்யூட்..
12:36 PM, September 24, 2008
தமிழ் வலை பதிவுகளில் சமீபத்திய சிறந்த பதிவு இது. செய்தி தாள்களில் படித்ததை விட உயிர்ப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பதிவுப்பணி.
பி. கு: அதிஷாவின் பின்னூட்டம் மிக்க அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
12:38 PM, September 24, 2008
தமிழ் வலை பதிவுகளில் சமீபத்திய சிறந்த பதிவு இது. செய்தி தாள்களில் படித்ததை விட உயிர்ப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பதிவுப்பணி.
பி. கு: அதிஷாவின் பின்னூட்டம் மிக்க அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
1:22 PM, September 24, 2008
excellent
1:28 PM, September 24, 2008
புல்லரிக்குது...
இதயம் தந்த பெற்றோருக்கும், போலிசாருக்கும் சல்யூட்...
1:29 PM, September 24, 2008
காவல்துறைக்கும், சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கும், ஹிதேந்திரனின் பெற்றோர்க்கும் சல்யூட்!
ஏ.சி. மனோகரனுக்கும் ஸ்பெஷல் சல்யூட்!
ஒரு பதிவைப் படித்துவிட்டு புல்லரித்துப் போனது இதுவே முதல்தடவை லக்கி!
காட்சியை விவரித்த விதம் அருமை!
1:55 PM, September 24, 2008
இதயம் தானம் செய்த ஹிதேந்திரன் மற்றும் ஏ.சி. மனோகரன் இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். தனது உயிர் போனபிறகும் நல்லது செய்பவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.
'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' - எனத் தமிழில் ஒரு பேச்சுவழக்கு உள்ளது.
இவர் இதயம் அடுத்தவருக்குத் தானமாகப் போகப்போவதைத் தெரிந்துதானோ அவரது பெற்றோர்கள் - ஹிதேந்திரன் (இதயேந்திரன்) எனப் பெயர் வைத்தார்கள்.
இதேந்திரனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
2:20 PM, September 24, 2008
Great. Kudos to everyone who were part of the team. The goodwill of Hitendera's parents is beyond appreciation.
2:33 PM, September 24, 2008
படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. காவல்துறைக்கு பாராட்டுக்கள் மற்றும் ஒரு ராயல் சல்யூட்...
மகனின் உறுப்புகளை தானம் செய்த பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நன்றிகள்.
3:18 PM, September 24, 2008
இதற்கு பெயர் கடாவர் டிரான்சுபிளாண்டு (cadaver transplant). ஆதாவது மூளை முற்றிலும் செயலிழந்து (மீண்டு வரமுடியாத நிலைக்கு சென்றால்) அந்த நோயாளியின் உடல் உறுப்புகளை தானம் செய்வது
இது குறித்த அரசு ஆணைகள் தற்பொழுது வெளி வந்துள்ளது.
இது போன்ற சேவைகள் குறித்து அவசர காலங்களில் முடிவெடுக்க தமிழக அரசு சார்பில் ஒரு அதிகாரிகள் குழு அமைக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் இது குறித்த விபரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட திட்டம் உள்ளது.
இத்திட்டம் முழுமை பெற்ற பின் சிறுநீரகங்கள் பணத்திற்காக விற்கப்படுவது குறையும் என்று நம்புகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக மருத்துவத்துறையில் நடந்து வரும் பல சாதனைகளில் இதுவும் ஒன்று.
தனி இடுகை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். நேரம் கிடைத்தால் எழுதுகிறேன் :)
-
இச்சம்பவத்தை எழுதியதற்கு நன்றி
விறுவிறுப்பாக எழுதியதற்கு பாராட்டுக்கள்
-
இது குறித்த ஆணைகளை இங்கு காணலாம்
http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_296_2008.pdf
http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_289_2008.pdf
http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_288_2008.pdf
http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_287_2008.pdf
http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_175_2008.pdf
http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_75_2008.pdf
http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_6_2008.pdf
3:49 PM, September 24, 2008
//எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது//
தயவு செய்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியுங்கள். :(
3:52 PM, September 24, 2008
டாக்டர் புருனோ, லக்கிலுக்,
தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி குறித்து ஏதேனும் திட்டம் இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் இது இன்னும் சுலபமாக ஆகியிருக்கும் இல்லையா?
3:55 PM, September 24, 2008
தன் மகன் உடல் உறுப்பை தானம் செய்யவந்த பெற்றோருக்கும், வாகனத்தை ஓட்டியவர்களுக்கு ஒரு சல்யூட்.
4:27 PM, September 24, 2008
கண்கள் பனிக்கச் செய்த செய்தி! இந்த மனித நேய பணியில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்!
பத்து நிமிட பரபரப்பை வாசிக்கும் போதே உணரச் செய்த லக்கி லுக்கிற்Kஉம் வாழ்த்துகள்
4:31 PM, September 24, 2008
//தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி குறித்து ஏதேனும் திட்டம் இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் இது இன்னும் சுலபமாக ஆகியிருக்கும் இல்லையா?//
இன்னும் சில காலம் ஆகும். எம்ரி திட்டம் முழுவதும் செயல் படுத்தப்பட்ட பின்னர் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்
5:13 PM, September 24, 2008
thats a great news... people responsible for this should be appreciated, only then they'd get motivated to do such acts... Lucky, please convey all these wishes from bloggers to the concerned people who made this possible..
5:19 PM, September 24, 2008
புல்லரிச்சுடுச்சு சார்..நடந்த நிகழ்ச்சியும் அதை நீங்கள் தந்த விதமும்..
5:46 PM, September 24, 2008
http://www.hindu.com/2008/09/17/stories/2008091760731000.htm
இது குறித்த உங்களின் கருத்துக்களை cadavertransplant@gmail.com மற்றும் organstransplant@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
5:56 PM, September 24, 2008
அதிரவைத்த விபத்து!!!
இதயம் தந்த ஹிதேந்திரன் பெயரின் அர்த்தம் -
‘இதயங்களை கொள்ளை கொள்பவன்'
6:47 PM, September 24, 2008
பனித்த கண்களுடன், ஈடுபட்ட அனைவருக்கும் ஒரு சல்யூட்.
அன்புடன்
ஸ்ரீராம்
Boston
7:27 PM, September 24, 2008
It's amazing. Hats Off to the parents , doctors, and police department who gave rebirth to that boy.
7:31 PM, September 24, 2008
//குசும்பன் said...
தன் மகன் உடல் உறுப்பை தானம் செய்யவந்த பெற்றோருக்கும், வாகனத்தை ஓட்டியவர்களுக்கு ஒரு சல்யூட்.
//
ரிப்பீட்...
இதை பரபரப்பாக எழுதிய உங்களுக்கும் எங்கள் நன்றி :)
7:45 PM, September 24, 2008
அதிரடி வேகம் லக்கி......10 செகண்ட்லே படித்து முடித்து மூச்சு விட்டேன்......இது நடக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் இதை அறியத் தந்த உங்களுக்கும் நன்றி...இப்பிடி உருப்படியா பதிவு போட்டுட்டு
சும்மா டைம்பாஸ் மச்சி!ன்னு பேர் வைத்திருக்கீங்களே.!!!???
7:54 PM, September 24, 2008
சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.
தக்க சமயத்தில் முடிவெடுத்த பெற்றோர்கள்
வாழும் தெய்வங்களாய் மருத்துவர்கள்
அனைத்தும் நலமாய் நடந்தேறிட பொறுமையுடன் சிக்னல்களில் காத்திருந்த நம் மக்கள்
என அனைவருக்குமே
ஒரு ராயல் சல்யூட்!!!
(லக்கி அண்ணே தகவலுக்கு நன்றி!)
7:54 PM, September 24, 2008
மனோகரன் - கடவுள்....
ஹிதேந்திரன் - கடவுள்....
ஹிதேந்திரன் அப்பா, அம்மா - கடவுள்கள்
8:24 PM, September 24, 2008
நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம். பரபரப்பான நடையில் எழுதி, அந்த பரபரப்பை நமக்கும் தொற்றச்செய்துள்ளீர்கள். இதைப்போன்ற நல்ல விஷயங்கள் பரவலாக பேசப்படவேண்டும். உங்கள் வேகமான பதிவுக்கு நன்றி லக்கி.!
8:49 PM, September 24, 2008
இது போன்ற சமயத்திலும் மனம் தளராது தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய முன் வர ஒரு பெரிய மனது வேண்டும்.Great, Well Done,... என்ன வாழ்த்தினாலும் வார்த்தைகளால் அடக்கி விடக் கூடிய அளவிலான சிறு விஷயமே அல்ல. அந்த நல்ல உள்ளங்கள் வாழ்க.
சொல்லத் தேவையில்லை. ஏதோ துப்புறியும் நாவலை படித்தது மாதிரியான ஓர் பத பதப்பு. :)
10:51 PM, September 24, 2008
a great salute to Tamil Nadu Police
But
Its really unsafe to drive in that high speed on our city road. Should some children or elderly people have come across on the path of the AC's car which is crossing at 120kmph, another accident should have happened which should have striken off more than four lives (the road user + Assistant Commissioner + paramedical staff + constable mohan the driver) from this world.
Will it not be possible to shift the whole body of the brain dead person to the heart hospital?
But its great to hear that this astonishing feat has happened in Namma Chennai !!
Kudos to everyone
especially the writer of this blog
srini
10:54 PM, September 24, 2008
தங்கள் மகனின் இதயத்தை தானமாகக் கொடுத்த பெற்குறோருக்கு உண்மையிலேயே பெரிய மனசு தான்
http://sivasinnapodi1955.blogspot.com
12:58 AM, September 25, 2008
Great salute Ac Manoharan, Constable Mohan and Doctors and ofcourse the parent of hithendran. hats off to all. we must give royal salute to them.
1:46 AM, September 25, 2008
இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும்
ஒரு ராயல் சல்யூட்!
இவ்வளவு பரபரப்பாக எழுதிய
லக்கியாருக்கு 'ஹேட்ஸ் ஆப்'
10:39 AM, September 25, 2008
கணத்த இதயத்தோடு...வாழ்த்துகிறேன்
அந்த பெற்றோரை..
மருத்துவர்களை..
சென்னை போக்குவரத்து துறையை...
ஈன்றெடுத்த பிள்ளையின் பிரிவிலும், சமூக அக்கறையோடு செயல்பட்ட அந்த தாயையும், தந்தையையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை...
-மயில்வண்ணன்..
5:10 PM, September 25, 2008
I appriceate AC Mokaran and Jeep driver for their timely activities.
6:11 PM, September 25, 2008
Super!
9:54 PM, September 25, 2008
மனிதங்கள் வாழட்டும்.
அனைவருக்கும் என் மரியாதை - உங்களுக்கும்தான் லக்கி ல்யூக்
9:50 AM, September 26, 2008
hats of to the peoples involved in this.
11:04 AM, September 26, 2008
ஃஃசென்னை பித்தன்
12:03 PM, September 24, 2008
ஹிதேந்திரனின் பெற்றோர்,சம்பந்தப் பட்ட மருத்துவர்கள்,அனைத்துக்கும் மேலாக,அந்தத் தியாகமும் உழைப்பும் பயனின்றிப் போகாமல்,சிறந்த முறையில் பணியாற்றிய காவல் துறை-அனைவரையும் மனித குலம் சிரம் தாழ்த்தி வணங்குகிறது.ஹிதேந்திரன் வாழ்கிறான் ஃஃ
வழிமொழிகிறேன்
8:43 PM, September 26, 2008
நல்இதயம் கொண்டோரே!
ஹிதேந்திரனின் இதயம், அபிராமியின் வடிவில் நீடு வாழ உலக இதய நாளில் [செப்டம்பர் 28] அனைவரும் வாழ்த்துவோம்.
குறிப்பு: ஹிதேந்திரனின் படத்திறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 28 அன்று, அவனுடைய சொந்த ஊரான திருக்கழுகுன்றத்தில் உள்ள ஆர்.கே. திருமண மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு நடக்க இருக்கிறது. முடிந்தால் நேரில் அஞ்சலி செலுத்துவோம்.
நன்றி
உமா அறிவு
[ஹிதேந்திரனின் குடும்ப நண்பர்]
9:32 PM, September 26, 2008
luckylook, you could have extended the basic courtesy of acknowledgement to the reporters who wrote the original story in dinakaran. because you lifted it clean!
11:05 PM, September 26, 2008
நல் இதயம் கொண்டோரே!
ஹிதேந்திரனின் ஹிருதயம் அபிராமியின் வடிவில் நீடு வாழ உலக இருதய நாளில் [செப்டம்பர் 28] அனைவரும் வாழ்த்துவோம்.
குறிப்பு: ஹிதேந்திரனின் சொந்த ஊரான திருக்கழுகுன்றத்தில் செப்டம்பர் 28 அன்று பட திறப்பு நிகழ்ச்சிக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். முடிந்தால் நேரில் அஞ்சலி செலுத்துவோம்.
நன்றி!
உமா அறிவு
[ஹிதேந்திரனின் குடும்ப நண்பர்]
7:25 AM, September 27, 2008
Good deeds like this bring hope . Even at the height of their grief, the doctor parents were professional and compassioante to help others. Hats off to the couple.
And the Chennai police.. Hats off to you! This is an extra-ordinary happening. What took place was a co-ordianted human effort with 'helping hand' at work. God bless all who took part.
And to you for reaching us with the news of this noble deed.
Special prayers to all .
May their tribe increase.
12:31 PM, September 27, 2008
இது போன்ற நிகழ்வுகள் சம்பவிக்கும் போது....
சூழலின் வீரியம் புரிந்து செயல்பட்ட தமிழக காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.
A.C. Manoharan
Driver Mohan
பாராட்டுக்கள்.....
Hedhendar's Parent
Ashokan
Pushpangjali
தியாகமும் போற்றுதற்கும், பின்பற்றுதலுக்கும் உரியது.
Dr.-BGL
10:07 PM, September 27, 2008
பெருமைப்பட வேண்டிய விசயம் அண்ணன்...
காவல் துறைக்கும் பெற்றோருக்கும் மருத்துவத்துறைக்கும் மரியாதை வணக்கங்கள்...
4:32 PM, September 28, 2008
I CRIED, BY SEEING THE NEWS...
WOW! WHAT A GREAT DOCTERS....
PLEASE WHOEVER DRIVING TWO WHEELER WEAR HELMET!!
ITS A GREAT INSPIRATION FOR EVERY HUMAN BEING FOR GIVING THEIR BODY PARTS TO SOME AFFECTED PATIENTS...EVEN ME..
4:42 PM, September 28, 2008
i too 11th std.i am feeling so sad by hearing this news.i am proud of hidhendiran's parents and also of mr.mohan..what a great job they they have done on that day!
so please all come forward to transplant their body parts..
ok.
5:02 PM, September 28, 2008
அருமையான செய்தியை அழகாக ஆழமாக உணர்வு பூர்வமாக அறியத் தந்த உங்களுக்கு முதல் நன்றி. சம்பந்தப்பட்ட அனைவரும் எல்லோர் மனங்களிலும் என்றும் நிறைந்திருப்பார்கள்.
12:21 PM, September 29, 2008
Kaaval thurai ku enadhu mariyaathaigal... Thiru.Mohan avaragalukku enadhu manam kanintha vaazhthukkal.. avar ella valamum pera iravanai vazhi padugiraen... avarudaya thiramai yai paditha podhu enakku namm kaaval thurai meedhu erundha mariyaathai, pan madangaaaga uyanrthathu.. thinamum t nagar vazhiyaaga thirumangalam varai sendru varubvan naan, avvazhiyil evalavu siramam enabdhu enakku nandraaaga theriyum... avaruku meendum en nandrigal...
2:02 PM, September 29, 2008
Ramesh(PAAVI):-
Really mind blowing
credit should be given to his parents
bcoz nobody in this world can donate all the organs of their beloved son...........
he is no more eventhough his organs will live in this world thats the spirit each & every citizen of this world should have...
My royal salute to his parents & that boy.........
4:05 PM, September 30, 2008
Great one.... Great Salute to that parents and AC Mohan.
6:16 AM, October 03, 2008
செய்தி தாள்களில் படித்ததை விட உயிர்ப்பாக இருந்தது.
வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் பதிவுப்பணி.
10:56 AM, October 03, 2008
கடைசீயாக ஒரு கேள்வி...
16 வயசு பையன், லைசென்ஸ் இல்லாமல் பைக்கை எதுக்கு எடுத்து ஓட்டினான் ?
Post a Comment