September 20, 2008

பந்தயம் - திரைவிமர்சனம்!

9/20/2008 10:58:00 AM by லக்கிலுக் ·
Labels: , ,

'நன்றி : இயக்குனர் பேரரசு' என்ற டைட்டிலை பார்த்ததுமே தெரித்து ஓடியிருக்க வேண்டும். தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோம். பந்தயம் என்றதுமே நமக்கு ஆமைக்கும், முயலுக்குமான பந்தயம் தான் நினைவுக்கு வரும். இங்கேயோ எறும்புக்கும், அமீபாவுக்கும் பந்தயம் விட்டிருக்கிறார்கள். என்னத்தை சொல்வது? இன்னமும் நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் ரேஞ்சிலேயே இருக்கிறார் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த லட்சணத்தில் தியேட்டருக்கு முன்னால் இவருக்கு கட்டவுட், பேனர் என்று அமர்க்களப்படுகிறது (நாளைய தமிழகமாம்).

உசிலம்பட்டியில் இருக்கும் சிறுவன் விஜய் ரசிகனாக யாருக்கும் அடங்காமல் அடங்காப்பிடாரியாக வளர்கிறான். இதே நேரத்தில் திருச்சியில் ரவுடி மாசாணம் அரசியலில் சேர்ந்து வளர்ந்து வருகிறான். பத்து ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் சென்னையில் சந்திக்கிறார்கள். சிறுவன் கல்லூரி மாணவன். மாசாணம் மாண்புமிகு அமைச்சர். அமைச்சரின் தங்கையை கல்லூரி மாணவன் சவால் விட்டு காதலிக்கிறான். அமைச்சருக்கு அல்லக்கையாக இருந்துகொண்டே அவரது தங்கையை ரகசியமாக காதலிக்கிறான். ஆனால் காதலிப்பது இவன் தான் என்று அமைச்சருக்கு தெரியாது.

போனில் சவால் விடுகிறான். பதிலுக்கு உன்னை கொன்னுடுவேன், புதைச்சுடுவேன் என்று அமைச்சர் சவடால் விடுகிறார். அவன் மறுபடியும் சவால் விட, இவர் மறுபடியும் சவடால் விட, இரண்டரை மணி நேரப்படமும் இதுதான். இருவருக்குமான பந்தயத்தில் ஜெயித்தது யார் என்று நான் சொல்லிதான் தெரியவேண்டுமா என்ன? அமைச்சர் மகளை மாணவன் ஏன் தேர்ந்தெடுத்து காதலிக்கிறான் என்பதற்கு ஒரு மொக்கை பிளாஷ்பேக் வேறு. போதும்டா சாமி.

கடியான இந்தப் படத்தில் இரண்டு காட்சிகளில் இளையதளபதியும் வருகிறார். விஜய்யை காண ஊரைவிட்டு ஓடிவரும் குட்டி ரசிகர்களுக்கு 'நல்லா படிங்க' என்று அட்வைஸ் செய்கிறார். இன்னொரு ஷூட்டிங் காட்சியில் அரசியல்வாதிகளையும், கெட்ட போலிஸையும் கேள்வி கேட்கிறார். மக்களுக்கு தான் செய்துவரும் நல்லதுகளை பட்டியல் போடுகிறார். படம் முழுக்க விஜய் வராத காட்சிகளிலும் கூட விஜயபரணி தாராளமாக பாடப்படுகிறது, இதற்காகவே ஹீரோ விஜய் ரசிகர் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆறரை கோடி மக்களின் இதயங்களில் வாழுகிறாராம். 2016ல் ஆட்சி அமைப்பேன் என்று இன்னும் இரண்டு வருடங்களில் விஜய் கலைஞருக்கு சவால் விடலாம்.

ஹீரோ நிதின் சத்யா. வளர்ந்துவரும் நேரத்தில் எஸ்.ஏ.எஸ். படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளலாமா? சூர்யாவையே ‘பெரியண்ணா' மூலமாக புதைகுழிக்குள் தள்ளியிருப்பார். நல்லவேளையாக மவுனம் பேசியதே வந்து அவரை காப்பாற்றியது. நிதின் சத்யா குள்ளமாக இருக்கிறார், கலர் கொஞ்சம் கம்மி, முண்டைக்கண். ஆண்பாவம் பாண்டியராஜனை பார்ப்பது போலிருக்கிறது. சென்னை-28, சத்தம் போடாதே படங்களில் அட்டகாசமாக நடித்த இவர் பந்தயத்தில் ஓவராக திணறியிருக்கிறார். ஹீரோவுக்கு துணையாக அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் ரஜினி, வடிவேலு வேடத்தில் வருபவர்களும், டாப் 10 கணேசும். இந்தப் படத்தை பார்ப்பதற்கு பதில் நிம்மதியாக அசத்தப் போவது யாருவையே பார்க்கலாம்.

மட்டமான கதை, திரைக்கதை இருந்தால் இனிமேல் பிரகாஷ்ராஜ் ஒத்துக்கொள்ளக் கூடாது. ஒன்மேன் ஆர்மி மாதிரி இந்த மொக்கைப்படத்தை தனது சகலகலா திறமைகளால் நிமிர்த்திவிட பார்க்கிறார். ம்ஹூம்.. விழலுக்கு இறைத்த நீர். தேவையே இல்லாமல் ராதிகாவும் வீணடிக்கப்பட்டிருக்கிறார். ஒரு துணை நடிகை நடிக்க வேண்டிய கேரக்டர் இது. படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே க்ளைமேக்ஸில் ராதிகா என்ன செய்யப்போகிறார் என்று சுலபமாக யூகிக்க முடிகிறது.

கோடையில் கிடைத்த குளிர்தருவைப் போல படத்தில் கவரும் அம்சம் சிந்து துலானி. நேருக்கு நேர் சிம்ரனைப் போலவே நெற்றி, கூர்மையான மூக்கு, பலாச்சுளைப்போல உதடு, கவர்ச்சியான முகவாய், சங்குபோன்ற கழுத்து, அப்புறம்... ஜப்பான் பொம்மை போல பளிங்கு இடுப்பு என்று ஜல்சாவாக இருக்கிறார். இன்னும் ஒரு காட்டு காட்டியிருக்கலாம்.

விஜய் ஆண்டனியின் இசையா இது என்று தெரியவில்லை. கொடுமை. நல்லவேளையாக சிலோன் மனோகரின் ரெண்டு பாட்டினை ரீமிக்ஸ் செய்து ஓரளவுக்கு காப்பாற்றுகிறார். சின்ன மாமியே, சுறாங்கனி ரெண்டு பாட்டுக்கும் தியேட்டரே எழுந்து ஆடுகிறது. ஒளிப்பதிவு உள்ளிட்ட ஏனைய அம்சங்கள் மெகாசீரியல் ரேஞ்சுக்கும் கீழே.

பந்தயம் - படுமோசம்!


Tamilish - தமிழ்

31 பின்னூட்டங்கள்:

முருகானந்தம் said...
11:57 AM, September 20, 2008

நான் தான் பர்ஸ்ட்....

முருகானந்தம் said...
11:59 AM, September 20, 2008

அப்போ படத்தை பாக்க வேணான்னு சொல்றீங்க ??

முரளிகண்ணன் said...
12:07 PM, September 20, 2008

எஸ் ஏ சி வளருபவர்களை அழிப்பதை தொழிலாகவே வைத்திருக்கிரார்.

சூர்யா,நரேன்,நிதின் அடுத்து யாரோ?

நான் ஆதவன் said...
12:24 PM, September 20, 2008

//எஸ் ஏ சி வளருபவர்களை அழிப்பதை தொழிலாகவே வைத்திருக்கிரார்.

சூர்யா,நரேன்,நிதின் அடுத்து யாரோ?//

சுக்ரன் படத்தில "ரவி கிருஷ்ணா"வை விட்டுடீங்க....

நான் ஆதவன் said...
12:29 PM, September 20, 2008

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மத்தவங்க வாழ்கையில விளையாடறதே வேளையாப் போச்சு. தைரியமிருந்தால் இப்ப விஜய்யை வச்சு ஒரு படம் பண்ணட்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
12:37 PM, September 20, 2008

லக்கி, சின்ன மாமியே பாட்டு எழுதியது நம்ம ஆடுமாடு (அதாவது வவ்வால்!).

Anonymous said...
12:38 PM, September 20, 2008

//தைரியமிருந்தால் இப்ப விஜய்யை வச்சு ஒரு படம் பண்ணட்டும்.//

இந்த சவால்ல விஜய் தோத்துடுவாரு ஏன்னா S.A.C
முன்ன மாதிரி நேரடியா விஜய விழவிட மாட்டாரு, அதுக்குப் பதிலா இன்னொரு மொக்கை டைரக்டரை வெச்சு வெடிக்க வெப்பாரு. இதுக்கு உதாரணம் 'ஆதி' ரமணாவேட கிரேட் ப்ளாப். சேதி தெரியுமோ விஜய்யோட அடுத்த மிகப் பெரிய ப்ளாப்ல நிச்சயம் SAC பங்குண்டு. அவரோட 50வது பட தயாரிப்பாளர். இவர் தான் இயக்குநன் வெட்டி போரரசு.

ஆக காத்திருக்கலாம் 2010 ல இந்த காட்சிய காண.

raja - bgl

SP.VR. SUBBIAH said...
12:55 PM, September 20, 2008

////கோடையில் கிடைத்த குளிர்தருவைப் போல படத்தில் கவரும் அம்சம் சிந்து துலானி. நேருக்கு நேர் சிம்ரனைப் போலவே நெற்றி, கூர்மையான மூக்கு, பலாச்சுளைப்போல உதடு, கவர்ச்சியான முகவாய், சங்குபோன்ற கழுத்து, அப்புறம்... ஜப்பான் பொம்மை போல பளிங்கு இடுப்பு என்று ஜல்சாவாக இருக்கிறார். இன்னும் ஒரு காட்டு காட்டியிருக்கலாம். /////

அதெல்லாம் எஸ்.ஏ.சி காட்டாமல் இருந்திருப்பாரா? தணிக்கையில் கத்திரி போட்டிருப்பார்கள்:-))))

அதிஷா said...
1:54 PM, September 20, 2008

பின்னூட்ட வாட் ஏ கோயிடண்ஸ்த்தனம்

தோழர் நேற்று நான் கிருஸ்னவேனி தியேட்டரில் வெறிபிடித்த ரசிகர்கள் மத்தியல் 20 ரூபாய் டிக்கெட்டில் மூன்றாவது ரோவின் இரண்டாம் சீட்டில் பார்த்தேன்

நீங்கள் எப்போது பார்த்தீர்கள் சொல்லேயில்லை

அதிஷா said...
1:56 PM, September 20, 2008

இன்றைய கவர்ச்சி படத்தில் யாரந்த அம்மையார் இழுத்து போர்த்திக்கொண்டு அந்த பகுதியையே அசிங்கப்படுத்துவது போல

பாலச்சந்தர் said...
2:00 PM, September 20, 2008

யப்பா தப்பிசெண்ட சாமி....

எங்க மேல எவ்ளாதன் அடி விழுந்தாலும் உங்க முதுக குடுத்து காப்பதுரிகளே உங்க பெரிய மனசு யாருக்கு வரும் . லக்கி வாழ்க அவர் சேவை வாழ்க..
உங்கள் சேவை எங்களுக்கு தேவை , தொடர்ந்து நடக்கடும் உங்கள் வாங்கும் பணி.....
:-))))
(எதுக்கும் ஸ்மைலி போட்ருவோம்)


பாலச்சந்தர்

முரளிகண்ணன் said...
2:07 PM, September 20, 2008

\\மட்டமான கதை, திரைக்கதை இருந்தால் இனிமேல் பிரகாஷ்ராஜ் ஒத்துக்கொள்ளக் கூடாது. ஒன்மேன் ஆர்மி மாதிரி இந்த மொக்கைப்படத்தை தனது சகலகலா திறமைகளால் நிமிர்த்திவிட பார்க்கிறார். ம்ஹூம்.. விழலுக்கு இறைத்த நீர். \\


பிரகாஷ் ராஜின் டூயட் முவீஸின் அடுத்த் படத்தில் விஜய் நடிக்க இதுவும் ஒரு காரணம்

லக்கிலுக் said...
2:09 PM, September 20, 2008

//அதிஷா said...
பின்னூட்ட வாட் ஏ கோயிடண்ஸ்த்தனம்

தோழர் நேற்று நான் கிருஸ்னவேனி தியேட்டரில் வெறிபிடித்த ரசிகர்கள் மத்தியல் 20 ரூபாய் டிக்கெட்டில் மூன்றாவது ரோவின் இரண்டாம் சீட்டில் பார்த்தேன்

நீங்கள் எப்போது பார்த்தீர்கள் சொல்லேயில்லை
//

தோழர்!

நாமும் அதே கிருஷ்ணவேணியில் அதே இருபது ரூபாய் டிக்கெட்டில் தானிருந்தோம் :-)

விஜய் வரும்போதெல்லாம் விசிலடித்து ஆர்ப்பாட்டம் செய்தது தாங்கள் தானோ?

cable sankar said...
3:05 PM, September 20, 2008

பந்தயம் படத்தின் கதை எனக்கு முன்பே தெரியுமாதலால்.நான் ப்ரிவூயுவுக்கே எஸ்கேப்.. ஓரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல///

Ram said...
3:32 PM, September 20, 2008

panthayakkuthirai tholviya? bengalooril indru mathiyam oru theatre houseful! pakkathu theatrele saroja pattaye kilaputhu, athu thaan?

ஜுர்கேன் க்ருகேர் said...
4:20 PM, September 20, 2008

தியேட்டர்-ஐ விட்டு ஓடற "பந்தயத்துல" பஸ்ட் இடம்.

செந்தழல் ரவி said...
6:48 PM, September 20, 2008

///சுக்ரன் படத்தில "ரவி கிருஷ்ணா"வை விட்டுடீங்க....///

ரவி கிருஷ்னாவை ஒரு டைரக்டர் தான் ஒழிக்கனும் என்றில்லை...

:))))

ஆர்.கே.சதீஷ்குமார் said...
7:24 PM, September 20, 2008

.ஆரம்பத்திலிருந்தே ரஜினி ரசிகர் தான் விஜய்.இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.ஆனா இப்போ எம்.ஜி ஆர் ஆகனும்னு நினைக்கிறார் போல ..இவங்களுக்கு ரெண்டு படம் ஊத்திகிட்ட போதும் //..எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மத்தவங்க வாழ்கையில விளையாடறதே வேளையாப் போச்சு. தைரியமிருந்தால் இப்ப விஜய்யை வச்சு ஒரு படம் பண்ணட்டும்.//

சரவணா ஸ்டோர் அண்ணாசிகள் said...
7:35 PM, September 20, 2008

Jail ல நாங்க நால்லா இருக்கோம்.....

மங்களூர் சிவா said...
7:40 PM, September 20, 2008

/
பந்தயம் - படுமோசம்!
/

சரோஜா படம் பார்க்கலாம்னு நானும் மனைவியும் தியேட்டருக்கு நேற்று போனபோது அந்த படத்தை எடுத்துட்டு இந்த படம் பந்தயம் போட்டிருந்தான் 'பந்தயம் பேரை பாத்ததுமே சும்மா அதிருடிச்சில்ல' வாசலோட திரும்பீட்டோம் அது எவ்ளோ சரியான செயல்னு பதிவை படிச்சதும் தெரிஞ்சது.

:))))

மங்களூர் சிவா said...
7:42 PM, September 20, 2008

/
அதிஷா said...

இன்றைய கவர்ச்சி படத்தில் யாரந்த அம்மையார் இழுத்து போர்த்திக்கொண்டு அந்த பகுதியையே அசிங்கப்படுத்துவது போல
/

ஹா ஹா ஹா
:)))))))))))))))))))

ப்ரியன் said...
10:15 PM, September 20, 2008

எஸ் ஏ சி படத்துக்கு எல்லாம் போலாமா லக்கி?!அதுக்கு ஏதாவது ராம நாராயணன் படத்தை டிவிடி பார்த்துருந்தாலாவது டிஸ்கவரி எபொக்ட் கிடைச்சிருக்கும்..

அப்புறம் , 'வெட்கப்படாதீங்க சார்'ஐ தொகுத்து இணைய ஆல்பம் போடும் ஐடியா எதும் இருக்கா?

பரிசல்காரன் said...
12:36 AM, September 21, 2008

//Blogger ஜுர்கேன் க்ருகேர் said...

தியேட்டர்-ஐ விட்டு ஓடற "பந்தயத்துல" பஸ்ட் இடம்.//

:-)

பரிசல்காரன் said...
12:39 AM, September 21, 2008

இந்தப் படத்தைப் பார்க்க வெள்லியன்று இரு ஊழியர்கள் பர்மிஷன் கேட்டார்கள் (சார், விஜய் நடிச்சிருகார் சார்..) முடியாது என்று விட்டேன்.

இபோது அவர்கள் என்னை நோக்கிக் கும்பிடுகிறாகள்1

sri said...
5:53 AM, September 21, 2008

he's right folks.the film is toooooo boring.please don't go to that film unless you're on the verge of everything.......

மருதநாயகம் said...
7:51 AM, September 21, 2008

இந்த படம் எஸ்.ஏ.சந்திரசேகரன் படம் என்பதை நம்ப முடியவில்லை, ஒரு ரேப் சீன் கூட இல்லாத கதையை அவர் எப்படி எடுத்திருப்பார்

ஈர வெங்காயம் said...
11:29 AM, September 21, 2008

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்...!!

யெஸ், நேற்றிரவு தியேட்டர் வாசல் வரைக்கும் போய்விட்டு ஏதோ ஒன்று உறுத்த, திரும்பி வந்துவிட்டேன்...( அதெப்படி லக்கிலூக் விமர்சனம் படிக்காமல் படம் பார்ப்பது என்ற உறுத்தல் தான்...:) )

ஈர வெங்காயம் said...
11:30 AM, September 21, 2008

// அதிஷா said...
பின்னூட்ட வாட் ஏ கோயிடண்ஸ்த்தனம் //

இந்த வார்த்தைக்கு என்னங்க அர்த்தம்..?

செல்வ கருப்பையா said...
4:13 PM, September 21, 2008

Lucky Look-ஆ அல்லது Lucky Luke-ஆ? நான் ரொம்ப நாட்களாக பின்னதுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

செம்புலம் said...
8:32 AM, September 22, 2008

பந்தயம் படுமோசமா இருந்தாலும் ஸ்டில்லு சூப்பரா இருக்கு மாமோய்ய்ய்.,,,,,

சென்னைத்தமிழன்

pj ismail said...
7:02 PM, September 30, 2008

ivan padam edukkalainu yaru allutha

லைவ்!

லைவ்!

தொடர்புக்கு!

மின்னஞ்சல் :
luckylook32@gmail.com

கைப்பேசி :
+919841354308

மின் சந்தா

Your email address:


Powered by FeedBlitz

இடுகைகள்

Followers