May 12, 2008

பா.கே.ப - திண்டுக்கல் பயணம்!

5/12/2008 10:33:00 AM by லக்கிலுக் ·
Labels: , , , , , ,
* ஏற்கனவே திண்டுக்கல்லுக்கு சிலமுறை சென்றிருந்தாலும், அவை அலுவலகரீதியான பயணமாக நண்பர்களுடனான உல்லாசப் பயணமாக இருந்தது. இதுவரை அரசு பேருந்தில் தனியாக இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை. அருகில் அமர்ந்திருந்த பயணிகள் உம்மணாம்மூஞ்சிகளாக அமைந்துவிட்டதால் தனிமை கொன்றது. 'திண்டுக்கல் சர்தார்' அண்ணன் உண்மைத்தமிழன் பத்துமணி நேர பேருந்துப் பயணம் என்று சொல்லியிருந்தார். மாறாக அவரது பதிவுகளை போல மிக நீண்டு பண்ணிரண்டு மணிநேர அலுப்பூட்டும் பயணமாக அமைந்துவிட்டது. திண்டிவனம் தாண்டி சாலையில் நடந்த ஒரு விபத்தால் ஏற்பட்ட ஒருமணி நேர தாமதமும் அதற்கு ஒரு காரணம்.

* தாம்பரம் தாண்டினால் திமுகமயம் தான். விழுப்புரம் வரை ஓரளவுக்கு பாமக. சில இடங்களில் விஜயகாந்தும் ஃப்ளெக்ஸ் போர்டுகளில் தம்பதி சமேதரராய் பல்லிளிக்கிறார். அதிமுகவுக்கு என்ன ஆச்சி? சென்னையை தாண்டி கட்சி இருக்கிறதா இல்லையா?

* திருச்சி சுவர்களை ஜே.கே.ரித்தீஷ் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வருகிறதாம் 'நாயகன்'! திருச்சி திரையரங்குகள் பலவற்றிலும் பலான மேட்டர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

* “வண்டி ஓட்டும்போது கண்ணை வை ரோட்டில்.. உன் மனைவி காத்திருப்பாள் வீட்டில்!” மணப்பாறை அருகே ஒரு ஆட்டோவில் பொறிக்கப்பட்ட வாசகம்.

* திண்டுக்கல்லுக்கு பகல் பண்ணிரண்டரை மணிவாக்கில் தான் போய் சேரமுடிந்தது. காலை எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தால், வரவனையோடு, செந்தழல்ரவியோடும் கொடைக்கானல் சென்றிருக்கலாம். நான் தாமதமாகப் போய் சேர்ந்ததால் கொடைக்கானல் திட்டமே திவாலாகி விட்டது. வரவனையின் வீட்டுக்கு எனக்கு ஒருநாள் முன்பாகவே செந்தழல் ரவி குடும்பத்தோடு வந்திருந்தார்.

* ரவியின் பேச்சில் நகைச்சுவை குறைந்திருக்கிறது, தத்துவம் அதிகரித்திருக்கிறது. ம்... திருமணம் ஒரு போதிமரம்!

* அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் மகன் ராஜபிரபாகரன் என்று வரவனையின் குடும்பம் அளவான, அழகான குடும்பம். தமிழ்நாட்டின் எல்லா அம்மாக்களையும் போலவே வரவனையின் அம்மாவுக்கும் மூட்டுவலி பிரச்சினை. ஆணாதிக்க அப்பாக்களாலும், மகன்களாலும் தமிழ்ப்பெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை நின்றபடியே சமையல்கட்டில் கழிப்பதால் மூட்டு தேய்ந்து விடுகிறது என்று என் அம்மாவுக்கு இதே பிரச்சினை வந்தபோது சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் சொல்லியிருந்தார்.

* திண்டுக்கல்லில் யார் பார்த்தாலும் கருப்பு, சிவப்பு கரைவேட்டி கட்டியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், ஐ.பெரியசாமி. ”இங்கெல்லாம் இப்போ அதிமுகவையே காணலையே?” என்று ஆச்சரியத்தோடு வரவனையிடம் கேட்டதற்கு, “அந்த அளவுக்கு வேலை பார்த்திருக்கோம் லக்கி!” என்றார். சென்னை திமுகவினர் சொம்படித்துக் கொண்டு சேகர்பாபுவிடம், கலைராஜனிடமும் கோட்டை விட்டுக் கொண்டிருப்பது குறித்த ஏளனம் அந்த பதிலில் சூசகமாக இருந்ததாக எனக்குப் பட்டது.

* மாலை பழனி பயணம். சிறுவயதில் பழனி என்றாலே எனக்கு முதலில் 'துக்ளக் - சிட்டுக்குருவி புகழ்' டாக்டர் கா.காளிமுத்து தான் நினைவுக்கு வருவார். அவருக்கு அடுத்து சித்தன்னநாதன் விபூதியும், ஜெண்டில்மேன் திரைப்படமும் நினைவுக்கு வரும். தண்டாயுதபாணியை காண தமிழர்களை விட கேரளத்தவர்களுக்கு ஆர்வம் அதிகம் போலிருக்கிறது. பழனி முழுக்க சேச்சிகள். சேட்டன்களை அடையாளம் காணமுடியவில்லை. சேச்சிகளின் 'ட்ரேட்மார்க்கை' வைத்து அவர்களை சுலபமாக கண்டுகொள்ளமுடிகிறது.

* உண்மையான முருக பக்தர்கள் பலரும் பல மணிநேரமாக க்யூவில் நின்று தாவூ தீர்ந்துக் கொண்டிருக்க, போலி பக்தர்களான எங்களுக்கு ராஜ அலங்கார வி.ஐ.பி. தரிசனம் தந்தார் தண்டாயுதபாணி. கோயில் முழுக்க ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயை கூட விட்டு வைக்காமல் லஞ்சமாக வாங்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. கருவறைக்கு முன்பு வெளிப்படையாக ஒரு குடுமி செம வசூல் செய்துக் கொண்டிருந்தார். நந்தனம் சிக்னல் போலிஸ்காரருக்கு கூட இந்த அளவுக்கு வசூல் ஆகுமா என்பது சந்தேகமே!

* பழனியில் இருந்து இரவு திரும்பியதும் வரவனையின் நண்பரான ஒரு சினிமா இயக்குனரை சந்தித்தோம். தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி, ஆடு-கோழி போன்றவை கொண்டு உருவாக்கப்பட்ட உணவுவகைகள் சில, ஒரு பெரிய பாட்டில் பொவொண்டோ, என்னால் அடையாளம் காணமுடியாத ஒரு பச்சை பாட்டில் திரவம் ஆகியவை வரவனையின் கையில் அப்போதிருந்தது. எல்லோருக்கும் பொவொண்டோவோடு அந்த பொன்னிற திரவமும் கலந்து கொடுக்கப்பட்டது. நான் வழக்கம்போல பொவொண்டோ மட்டும் குடித்தேன்.

* சரக்கு கொடுத்த தெம்பில் சினிமாவுலகம் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். சாப்ட்வேர் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் Datamining உத்தியைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவுக்கான சக்சஸ்ஃபுல் ஃபார்முலாவை அடையாளம் காணவேண்டும் என்று செந்தழல் ரவி வற்புறுத்தினார். சினிமாவைப் பொறுத்தவரை வெற்றியோ, தோல்வியோ எந்த ஃபார்முலாவுக்குள்ளும் அடக்கமுடியாது என்று வாதிட்டேன். நமக்கு (ரசிகர்களுக்கு) எது பிடிக்கும், பிடிக்காது என்பது நமக்கே தெரியாதநிலையில் சினிமாக்காரர்களுக்கு எப்படி தெரியும்?

* இரவு வரவனை வீட்டு மொட்டை மாடியில் தூக்கம். நடுநிசியில் பம்ப்செட் மோட்டார் ஓடுவதைப் போல 'டுர்.. டுர்..' என்று ஹை-டெசிபலில் சத்தம் கேட்டது. எழுந்து சுற்றும், முற்றும் பார்த்தேன், ஆளரவமில்லை. அந்த சத்தம் வரவனையின் கொறட்டைச்சத்தம் என்பதை நீண்ட ஆராய்ச்சிக்கு பின்பே அறியமுடிந்தது. சட்டை காலரை இழுத்து காதை அழுந்த மூடிக்கொண்டு தூங்கினேன்.

* மறுநாள் காலை தோழர் சுகுணா திவாகருக்கு திருமணம் என்ற கிரிமினல் குற்றம் நடக்க இருந்த மண்டபத்துக்கு சென்றோம். நாங்கள் உள்ளே நுழையும்போது தான் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டார்கள். அ.மார்க்ஸ் தலைமையில் திருமணம் நடந்தது. பறையொலி முழங்க சுகுணா நாண் பூட்டினார். அதன் பின்னர் 'பார்ப்பனீயம், இந்துத்துவா, சாதி, சமயம் இவற்றை விலக்கி, அறசிந்தனைகளின் மதிப்பீட்டில் சமதர்ம வாழ்வினை பகிர்ந்துகொள்வதாக' மணமக்கள் உறுதிமொழி எடுத்தார்கள். கிறிஸ்தவத் திருமணங்களில் போது கூட மணப்பெண்கள் நாணியபடியே உறுதிமொழி எடுப்பதை கவனித்திருக்கிறேன். காட்டுமிராண்டி தமிழ்சமூகம் பெண்ணுக்கென விதித்து வைத்திருக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பருப்பு கருமங்களை விலக்கி மிகத்தைரியமாக மணமகள் உறுதியான குரலில், நாணிக்கோணாமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டது அந்த சூழலில் மிக முக்கியமானது.

* இரண்டு தெரு தள்ளி ஒரு திமுகபிரமுகரின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதுரையிலிருந்து அஞ்சாநெஞ்சன் வந்திருந்தார். தெருவெங்கும் பேனர்களில் அஞ்சாநெஞ்சன், அஞ்சாநெஞ்சனின் துணைவியார், அஞ்சாநெஞ்சனின் புதல்வர் மூவரும் சிரித்தப்படியே போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அஞ்சாநெஞ்சன் என்னவோ எளிமையாகத்தான் இருக்கிறார். உடனிருக்கும் 'அல்லக்கைஸ்' தான் அதிகமாக ஆடுகிறார்கள் என்று தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு வருவது போல பெரிய ‘கான்வாய்' வரிசையில் சுமோ காரில் அழகிரி வந்தார். வந்து ஓரிரு நிமிடங்களிலேயே திரும்பிவிட்டார். அந்த ஓரிரு நிமிடங்களுக்காக கல்யாணவீட்டுக்காரர் குறைந்தது பத்து லட்சம் ரூபாய் செலவழித்திருப்பார்.

* இப்போது திண்டுக்கல்லிலும் ஜிகர்தண்டா கிடைக்கிறது. வரவனை, நான், ரவி மூன்று பேரும் ஒரு பாய் கடையில் ஜிகர்தண்டா அடித்தோம். ஜிகர்தண்டா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, கடையில் ஜிகர்தண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த கரைவேட்டி பெருசு ஒருவர் “நீங்கள்லாம் கல்யாணம் ஆனவுங்களா? கல்யாணம் ஆனவுங்க ஜிகர்தண்டா சாப்பிட்டா.. சும்மா ஜிவ்வுன்னு ஏறும்...” என்றார். “நாங்க ரெண்டு பேரும் பேச்சுலர்ஸ், அவரு தான் பெருசு. அவருக்கு மட்டும் கல்யாணம் ஆயிடிச்சி” என்று ரவியைக் காட்டி சொன்னார் வரவனையான். ஜிகர்தண்டாவில் சேர்க்கப்படும் கடற்பாசிக்கு முருங்கை காய்க்கு இணையான குணம் கொண்டதாம்.


Tamilish - தமிழ்

65 பின்னூட்டங்கள்:

லக்கிலுக் said...
6:19 PM, May 12, 2008

எப்போதுமே பதிவு போட்டு முடித்ததும் செல்ஃப் எடிட்டிங் செய்வது வழக்கம். இன்று ஏனோ எடிட் செய்யாமலேயே தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன். ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருளவும்.

வரவனையான் said...
6:52 PM, May 12, 2008

அதிலும் ஒரு கொழுத்த பார்ப்பு இரண்டு சிறுமிகளிடம் காசு வாங்கிக்கொண்டு பிரசாதம் "விற்பனை" செய்ததை கண்டு நமக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சகோதரி பொங்கியது இன்னும் கண்ணுகுள்ளே இருக்கு லக்கி.

ஆனா அண்ணன் "முருகனடிமை" உண்மைத்தமிழனை அழைத்து போயிருந்திருக்கலாம் என்கிற எண்ணம் நமக்கு இயல்பாய் வந்ததையும் நினைவுகொள்ள வேண்டும்.

உடன்பிறப்பு said...
8:52 PM, May 12, 2008

//“அந்த அளவுக்கு வேலை பார்த்திருக்கோம் லக்கி!” என்றார். சென்னை திமுகவினர் சொம்படித்துக் கொண்டு சேகர்பாபுவிடம், கலைராஜனிடமும் கோட்டை விட்டுக் கொண்டிருப்பது குறித்த ஏளனம் அந்த பதிலில் சூசகமாக இருந்ததாக எனக்குப் பட்டது.//

உண்மை தான் லக்கி. சென்னை தி.மு.க.வின் கோட்டை என்பது மாறி வருகிறதோ?

Anonymous said...
9:01 PM, May 12, 2008

தண்டாயுதபாணி. கோயில் முழுக்க ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயை கூட விட்டு வைக்காமல் லஞ்சமாக வாங்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. கருவறைக்கு முன்பு வெளிப்படையாக ஒரு குடுமி செம வசூல் செய்துக் கொண்டிருந்தார். ///// இந்த விளக்கெண்ணை நக்கலுக்கெல்லாம் யோனிகொண்டானுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஏன் உத்தபுரம் பிள்ளைமார் பற்றி எழுதினால் பிள்ளைமார் தோழர்கள் எல்லாம் கோவிச்சுகுவாகளோ. முதன் முதலில் இந்த தூரத்த அரசுப்பேருந்துகளீல் கடந்த ஆளு எல்லாம் திராவிடதமிழனாக குதிக்கிறதெல்லாம் ஓவரப்பு, என்னத்த தமிழ் சமூகத்த தூக்கி நிறுத்துறகளோ. உங்களை (தோழர், உடன்பிறப்புகள்) எல்லாம் திசையன்விளை வரைக்கும் கல்லுப்பட்டி, சாத்தூர் வழியா அரசுப்பேருந்தில் அனுப்பி விட்டாத் தெரியும், உள்ளூர் தமிழர்களுக்கே போறாட நிறையா இருக்குன்னு. மறைமலைநகர் தாண்டியும் தமிழ்நாடு இருக்குப்பா! கொடைக்கானல் போன தோழர்களிடம் வத்தலக்குண்டு காலேஜ் கட்டத்தினை பற்றி விசாரிக்கவும். 'நிதானத்தில்' பயணம் பண்ணியிருந்தா அவுகளுக்கு தெரிஞ்சிருக்கும். இந்த அரைவேக்காட்டு அனுபவத்தினால்தான் அன்பே சிவத்தையும், தசாவதாரத்தினையும் வெட்டியா கிழிக்கமுடியுது, விருமாண்டியோட கதைக்களத்த பற்றி தெரிஞ்சிருக்கனும்னா உசிலம்பட்டி, சேடபட்டி, உத்தபுரம் பற்றி தெரிஞ்சிருக்கனும். இப்பதான் திண்டுக்கல்ன்னா, நல்லா வெளங்கிடும்டா சாமிகளா. இவ்வளவு சொல்லியாச்சு, ஜிகர்தண்டா பற்றியும் சொல்லிடுவோம். உண்மையிலே ஜிகர்தண்டா குடிக்கனும்னா, மதுர கீழவாசல் சிக்னல்ல இருக்கிற Syndicate Bank பக்கத்தில இருக்கிற ஒரு சொளராஷ்ரா கடையில குடிக்கனும், அங்க குடிச்சா எதுவும் தூக்காது.

முரளிகண்ணன் said...
9:38 PM, May 12, 2008

திண்டுக்கல் பிரியாணி எப்படி இருந்தது? சேச்சிகளின் டிரேட் மார்க் அகல நெற்றியும் நீண்ட கூந்தலும் தானே?

அரவிந்தன் said...
2:21 AM, May 13, 2008

//சேச்சிகளின் 'ட்ரேட்மார்க்கை'//

நெற்றியில் இருக்கும் சந்தனம் தானே அந்த ட்ரேட்மார்க்..?

அரவிந்தன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
11:21 AM, May 13, 2008

//'திண்டுக்கல் சர்தார்' அண்ணன் உண்மைத்தமிழன் பத்துமணி நேர பேருந்துப் பயணம் என்று சொல்லியிருந்தார்.//

என்னடா இது? புதுசு, புதுசா பட்டப் பேர் சேர்க்குறீங்க..? இருக்குற பேரே போதும்டா சாமி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
11:24 AM, May 13, 2008

//தாம்பரம் தாண்டினால் திமுகமயம்தான். விழுப்புரம் வரை ஓரளவுக்கு பாமக. சில இடங்களில் விஜயகாந்தும் ஃப்ளெக்ஸ் போர்டுகளில் தம்பதி சமேதரராய் பல்லிளிக்கிறார். அதிமுகவுக்கு என்ன ஆச்சி? சென்னையை தாண்டி கட்சி இருக்கிறதா இல்லையா?//

இப்ப உன் கட்சிதான் ஆளும் கட்சியாச்சே.. அதான், கைல டப்பு நிறைய இருக்கும்போது செலவழிக்கிறதுக்கு என்ன குறைஞ்சா போச்சு.. அதான் பளபளான்னு இருந்திருக்கும்..

அ.தி.மு.க. எதிர்க்கட்சி.. அதன் தங்கத் தலைவியை 20 நாளா யாருமே நேர்ல பாக்கலையாம்..?இந்த லட்சணத்துல தலைமை இருந்தா, அந்தக் கட்சி எப்படியிருக்கும்.. இப்படித்தான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
11:25 AM, May 13, 2008

//திருச்சி திரையரங்குகள் பலவற்றிலும் பலான மேட்டர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.//

எந்த ஊருக்குப் போனாலும் இது மட்டும் எப்படி ராசா உன் கண்ணுல படுது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
11:28 AM, May 13, 2008

//திண்டுக்கல்லுக்கு பகல் பண்ணிரண்டரை மணிவாக்கில் தான் போய் சேரமுடிந்தது. காலை எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தால், வரவனையோடு, செந்தழல்ரவியோடும் கொடைக்கானல் சென்றிருக்கலாம். நான் தாமதமாகப் போய் சேர்ந்ததால் கொடைக்கானல் திட்டமே திவாலாகி விட்டது.//

கொடைக்கானல் தப்பிச்சுச்சு.. அங்கேயெல்லாம் போயிட்டு ஒரு நாள்ல திரும்பி வர்றது தப்புடா கண்ணு.. அடுத்த வாட்டி 2 நாள் தங்குறாப்புல பிளான் போட்டு போ.. அதான் ஹேப்பி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
11:29 AM, May 13, 2008

//ரவியின் பேச்சில் நகைச்சுவை குறைந்திருக்கிறது, தத்துவம் அதிகரித்திருக்கிறது. ம்... திருமணம் ஒரு போதிமரம்!//

கொஞ்சம் வயசும் ஏறிருச்சுன்னு நினைக்கிறேன்.. அதான் லேசா பக்குவம் வந்திருக்கும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
11:30 AM, May 13, 2008

//ஆணாதிக்க அப்பாக்களாலும், மகன்களாலும் தமிழ்ப்பெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை நின்றபடியே சமையல்கட்டில் கழிப்பதால் மூட்டு தேய்ந்து விடுகிறது என்று என் அம்மாவுக்கு இதே பிரச்சினை வந்தபோது சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் சொல்லியிருந்தார்.//

கரெக்ட்.. அந்த டாக்டரை பாராட்டணும்.. தொழிலையும் தாண்டி ஒரு பொதுவான உண்மையைச் சொல்லிருக்காரே..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
11:33 AM, May 13, 2008

//திண்டுக்கல்லில் யார் பார்த்தாலும் கருப்பு, சிவப்பு கரைவேட்டி கட்டியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், ஐ.பெரியசாமி. ”இங்கெல்லாம் இப்போ அதிமுகவையே காணலையே?” என்று ஆச்சரியத்தோடு வரவனையிடம் கேட்டதற்கு, “அந்த அளவுக்கு வேலை பார்த்திருக்கோம் லக்கி!” என்றார்.//

மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர்.. அதிலும் தில்லான அமைச்சர்.. தளபதியாக ஒரு மகன்.. பல நூறு உடன்பிறப்புக்கள்.. பிறகென்ன வேண்டும்..

நிலக்கோட்டைல போய் கால் வைச்சுப் பாரு தம்பி.. இதுக்கு மேல பேஜாராயிருவ..

அதிமுகல பேர் சொல்ற மாதிரி ஒருத்தரையும் காணோம்.. அதுலேயும் அந்த கட்சி மாவட்டச் செயலாளர் காரை விட்டிறங்காத ரத்தத்தின் ரத்தம்.. கட்சி வளருமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:04 PM, May 13, 2008

//சென்னை திமுகவினர் சொம்படித்துக் கொண்டு சேகர்பாபுவிடம், கலைராஜனிடமும் கோட்டை விட்டுக் கொண்டிருப்பது குறித்த ஏளனம் அந்த பதிலில் சூசகமாக இருந்ததாக எனக்குப்பட்டது.//

பின்ன இருக்காதா? தென்சென்னையில் சிட்டெனப் பறந்து வேலை பார்க்கும் கிட்டுவை, தலையில் குட்டி குப்புறப் படுக்க வைத்திருப்பது யார்? உங்க கட்சிதானே.. பிறகு எப்படி வேலை நடக்கும்..?

வடசென்னையில் வயதான பலராமன்.. கட்சியளவில் சரி.. போராட்டக் களம் என்று வந்தால் பட்டென ஆட்களைத் திரட்டும் அளவுக்கு முனைப்பு காட்டும் ஆள் வேண்டாமா?

ஒரு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பூத் கலவரத்தில் அப்போதைய சட்டப் பேரவையின் துணை சபாநாயகரும் தற்போதைய அமைச்சருமான பரிதிஇளம்வழுதி, நடுரோட்டில் கல்லெடுத்து எறிந்து தொண்டரோடு, தொண்டராக சாதனை படைத்ததை மறந்துவிடாதே தம்பீ..

இப்படியெல்லாம் செஞ்சாத்தான் நாலு பேரு அண்ணாத்தன்னு சொல்லிட்டு செட் சேருவானுக.. இல்லீன்னா.. அண்ணன் எப்ப காரை விட்டு இறங்குவாரு.. கும்பிடு போட்டுட்டு டாஸ்மாக் கடைப் பக்கம் ஒதுங்கலாம்னுதான் பார்ப்பாங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:07 PM, May 13, 2008

//மாலை பழனி பயணம். சிறுவயதில் பழனி என்றாலே எனக்கு முதலில் 'துக்ளக் - சிட்டுக்குருவி புகழ்' டாக்டர் கா.காளிமுத்துதான் நினைவுக்கு வருவார். அவருக்கு அடுத்து சித்தன்னநாதன் விபூதியும், ஜெண்டில்மேன் திரைப்படமும் நினைவுக்கு வரும்.//

எல்லாருக்கும் இதேதான்..

டாக்டர் காளிமுத்துவின் வீடு இருக்கும் தெருக் கடைசியிலேயே அவருடைய தயாரிப்பு மாதிரியே சித்த மருந்துகளை போலியாகத் தயாரித்து விற்கும் ஒரு கடையும் இருக்கு..

சித்தனாதன் சன்ஸ்தான் பழனி முருகனுக்கு மிக, மிக வேண்டப்பட்ட பஞ்சாமிர்த கம்பெனி.. எத்தனை கட்சி மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் பஞ்சாமிர்த சப்ளையில் அவர்களை விரட்டியடிக்க ஆளே இல்லை.

கையில் நமக்கு பஞ்சாமிர்தத்தை ஊற்றி, அவர்கள் இப்போது பல்கலைக்கழகமே அமைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்கள்..

ம்.. முருகனை நம்பினோர் கைவிடப்படார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:09 PM, May 13, 2008

//தண்டாயுதபாணியை காண தமிழர்களை விட கேரளத்தவர்களுக்கு ஆர்வம் அதிகம் போலிருக்கிறது. பழனி முழுக்க சேச்சிகள். சேட்டன்களை அடையாளம் காணமுடியவில்லை.//

முருகன்தான் திராவிடக் கடவுளாச்சே.. திராவிடர்களுக்குப் பிடிக்காமயா இருக்கும்.. ஏதோ கனெக்ஷன் ஆதியிலே இருந்தே இருக்கும்போலத் தெரியுது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:11 PM, May 13, 2008

//சேச்சிகளின் 'ட்ரேட்மார்க்கை' வைத்து அவர்களை சுலபமாக கண்டுகொள்ளமுடிகிறது.//

ஒரு நல்ல விஷயத்தை பெரிய மனுஷத்தனமா எழுதும்போது இது திரில்லாம் சின்னப்புள்ளத்தனமா எழுதக் கூடாது..

ஆமா.. 'டிரேட் மார்க்'குங்கறது அந்த வட்டமான, களையான முகம்தான தம்பீ..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:13 PM, May 13, 2008

//உண்மையான முருக பக்தர்கள் பலரும் பல மணிநேரமாக க்யூவில் நின்று தாவூ தீர்ந்துக் கொண்டிருக்க, போலி பக்தர்களான எங்களுக்கு ராஜ அலங்கார வி.ஐ.பி. தரிசனம் தந்தார் தண்டாயுதபாணி.//

முருகனைப் பார்க்கப் போயாச்சு.. அப்புறமென்ன போலி பக்தர்.. உண்மையான பக்தர்ன்னு..? யாராயிருந்தாலும் வரவழைக்கணும்னு முடிவு பண்ணிட்டான்னா வரவழைச்சே தீருவான்..

வி.ஐ.பி. தரிசனத்துக்கு கொடுத்து வைச்சிருக்கணும்.. கன்னத்துல போட்டுக்க தம்பீ..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:14 PM, May 13, 2008

//கோயில் முழுக்க ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயை கூட விட்டு வைக்காமல் லஞ்சமாக வாங்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. கருவறைக்கு முன்பு வெளிப்படையாக ஒரு குடுமி செம வசூல் செய்துக் கொண்டிருந்தார். நந்தனம் சிக்னல் போலிஸ்காரருக்கு கூட இந்த அளவுக்கு வசூல் ஆகுமா என்பது சந்தேகமே!//

எந்த ஊர்க் கோயிலுக்குப் போனாலும் இதுதான் பிரச்சினை.. முருகன் வாங்கச் சொல்லலை.. அவனுக்குக் கொழுப்பு.. வாங்குறான்.. அதுக்கும் கோயிலுக்கும், முருகனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை..

லக்கிலுக் said...
12:15 PM, May 13, 2008

உ.தமிழன் அண்ணாச்சி!

என்ன கொடுமை இது? இந்தப் பதிவுக்கு மட்டும் இதுவரை பதிமூணூ பின்னூட்டம் போட்டிருக்கீங்க? இதுக்கு பதிலா பெருசா ஒரு பதிவே நீங்க போட்டுட்டு இருக்கலாம். பதில் மொய் வெக்கிறதுக்குள்ளே எனக்கு தாவூ தீர்ந்து டவுசர் கிழிவது உறுதி :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:16 PM, May 13, 2008

//என்னால் அடையாளம் காணமுடியாத ஒரு பச்சை பாட்டில் திரவம் ஆகியவை வரவனையின் கையில் அப்போதிருந்தது.//

உனக்கே தெரியலைன்னா எங்களுக்கு எப்படித் தெரியும்..? வரவணை கைல இருக்கும்போதுதான் அது பாட்டில்ன்னு தெரிஞ்சதா..? உள்குத்துன்னா என்னன்னு உங்ககிட்டதாண்டா கத்துக்கணும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:19 PM, May 13, 2008

//சாப்ட்வேர் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் Datamining உத்தியைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவுக்கான சக்சஸ்ஃபுல் ஃபார்முலாவை அடையாளம் காணவேண்டும் என்று செந்தழல் ரவி வற்புறுத்தினார்.//

இதிலென்ன பார்முலா..?

அவனவன் மனசுக்குள்ள ஒரு முடியாமை.. தன்னால் அடைய முடியாத வெறுமை.. அடக்க மாட்டாத தூக்கம்.. முடிக்க இயலாத கொண்டாட்டம்.. இவையெல்லாம் அடங்கியிருக்கு..

இதையெல்லாம் ஒண்ணா சேர்த்து கரெக்ட் பார்முலால கலந்து யார் கொடுக்கிறானோ அவனே ஜெயிப்பான்..

பார்முலாவை கலக்கும்போது ஒண்ணு, ரெண்டு கூட, குறைய போயிருச்சுன்னா புளிப்பு, கசப்பு, துவர்ப்பு மாதிரி நம்ம முகம் சுழிஞ்சிரும்..

ஆமா.. இதெல்லாம் இந்த மாதிரி நேரத்துலதான் தோணுமா? மத்த நேரத்துலதான் இந்த யோசனை வராதா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:20 PM, May 13, 2008

//சினிமாவைப் பொறுத்தவரை வெற்றியோ, தோல்வியோ எந்த ஃபார்முலாவுக்குள்ளும் அடக்கமுடியாது என்று வாதிட்டேன். நமக்கு (ரசிகர்களுக்கு) எது பிடிக்கும், பிடிக்காது என்பது நமக்கே தெரியாத நிலையில் சினிமாக்காரர்களுக்கு எப்படி தெரியும்?//

இதுக்கு முந்தின கமெண்ட்டுல சொன்ன பதில்தான் இதுக்கும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:23 PM, May 13, 2008

//இரவு வரவனை வீட்டு மொட்டை மாடியில் தூக்கம். நடுநிசியில் பம்ப்செட் மோட்டார் ஓடுவதைப் போல 'டுர்.. டுர்..' என்று ஹை-டெசிபலில் சத்தம் கேட்டது. எழுந்து சுற்றும், முற்றும் பார்த்தேன், ஆளரவமில்லை. அந்த சத்தம் வரவனையின் கொறட்டைச் சத்தம் என்பதை நீண்ட ஆராய்ச்சிக்கு பின்பே அறிய முடிந்தது. சட்டை காலரை இழுத்து காதை அழுந்த மூடிக்கொண்டு தூங்கினேன்.//

அடப்பாவி.. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டியேடா.. அந்த மனுஷனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.. அதுக்குள்ள இப்படியொரு பிட்டை ஓட்டுட்டியே.

இதைப் படிச்சிட்டு எவனாவது பொண்ணு தரேன்னுட்டு வருவானா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:24 PM, May 13, 2008

//மறுநாள் காலை தோழர் சுகுணா திவாகருக்கு திருமணம் என்ற கிரிமினல் குற்றம் நடக்க இருந்த மண்டபத்துக்கு சென்றோம். நாங்கள் உள்ளே நுழையும்போது தான் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டார்கள்.//

இதுக்காடா 500 கி.மீ. தள்ளியிருந்து கல்யாணத்துக்குப் போறேன்னு குதியா குதிச்சு போன.. மாப்பிள்ளைக்குத் தோழனா முதல் நாள் ராத்திரில இருந்து கூட இருந்திருக்க வேணாம்..? கொடுமை..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:26 PM, May 13, 2008

//அ.மார்க்ஸ் தலைமையில் திருமணம் நடந்தது. பறையொலி முழங்க சுகுணா நாண் பூட்டினார். அதன் பின்னர் 'பார்ப்பனீயம், இந்துத்துவா, சாதி, சமயம் இவற்றை விலக்கி, அறசிந்தனைகளின் மதிப்பீட்டில் சமதர்ம வாழ்வினை பகிர்ந்துகொள்வதாக' மணமக்கள் உறுதிமொழி எடுத்தார்கள். கிறிஸ்தவத் திருமணங்களில் போது கூட மணப்பெண்கள் நாணியபடியே உறுதிமொழி எடுப்பதை கவனித்திருக்கிறேன். காட்டுமிராண்டி தமிழ் சமூகம் பெண்ணுக்கென விதித்து வைத்திருக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பருப்பு கருமங்களை விலக்கி மிகத ்தைரியமாக மணமகள் உறுதியான குரலில், நாணிக் கோணாமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டது அந்த சூழலில் மிக முக்கியமானது.//

இதுதான் மேட்டர்..

தாலி கட்டியதை சுகுணாவும் எழுதியிருக்கிறார்.. வாழ்க்கைச் சூழலுக்கேற்ப சிற்சில விட்டுக் கொடுத்தல்களை மேற்கொள்ளுவதில் எந்தத் தவறுமில்லை..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:28 PM, May 13, 2008

//தெருவெங்கும் பேனர்களில் அஞ்சாநெஞ்சன், அஞ்சாநெஞ்சனின் துணைவியார், அஞ்சாநெஞ்சனின் புதல்வர் மூவரும் சிரித்தப்படியே போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.//

பேனர் வரைந்தவருக்கு ஒரு மாத குடும்பச் செலவுக்குப் பணம் கிடைத்திருக்குமே.. நல்லதுதானே.. என்ன செய்ய?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:28 PM, May 13, 2008

//அஞ்சாநெஞ்சன் என்னவோ எளிமையாகத்தான் இருக்கிறார். உடனிருக்கும் 'அல்லக்கைஸ்' தான் அதிகமாக ஆடுகிறார்கள் என்று தெரிகிறது.//

இதைத்தான் ரொம்ப வருஷமா எல்லாரும் சொல்லிட்டிருக்காங்க.. புரிஞ்சா சரி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:30 PM, May 13, 2008

//ஜெயலலிதாவுக்கு வருவது போல பெரிய ‘கான்வாய்' வரிசையில் சுமோ காரில் அழகிரி வந்தார். வந்து ஓரிரு நிமிடங்களிலேயே திரும்பிவிட்டார். அந்த ஓரிரு நிமிடங்களுக்காக கல்யாணவீட்டுக்காரர் குறைந்தது பத்து லட்சம் ரூபாய் செலவழித்திருப்பார்.//

செலவழிச்ச காசை வட்டியும், முதலுமா சம்பாதிக்கவா தெரியாது அவங்களுக்கு.. அதெல்லாம் அள்ளிருவாக.. அதுக்குத்தான கூப்பிட்டிருந்திருக்காங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:33 PM, May 13, 2008

//இப்போது திண்டுக்கல்லிலும் ஜிகர்தண்டா கிடைக்கிறது. வரவனை, நான், ரவி மூன்று பேரும் ஒரு பாய் கடையில் ஜிகர்தண்டா அடித்தோம். ஜிகர்தண்டா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, கடையில் ஜிகர்தண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த கரைவேட்டி பெருசு ஒருவர் “நீங்கள்லாம் கல்யாணம் ஆனவுங்களா? கல்யாணம் ஆனவுங்க ஜிகர்தண்டா சாப்பிட்டா.. சும்மா ஜிவ்வுன்னு ஏறும்...” என்றார்.//

டட்லி ஸ்கூல் பிராட்டஸ்டண்ட் சர்ச் சுவற்றை ஒட்டினார்போல் நிறைய வண்டிகள் இருக்கும்.. ஜில்ஜில் என்று இருக்கும்..

ஜிகர்தண்டா சாப்பிட்டால் என்னவோ ஜிவ்வுன்னு ஏறும்னு வருஷக்கணக்கா நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன். ஆனா 'என்ன ஏறும்?'னுதான் ஒருத்தனும் சொல்ல மாட்டேங்குறான்..

கூடவே பக்கத்தில் பீமபுஷ்டிஹல்வா என்று போர்டு போட்டு அர்னால்டு ஸ்டைலில் ஒருவர் உடல்கட்டைக் காட்டும் புகைப்படத்தை மாட்டி வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள்..

இதுவெல்லாம் எங்க ஊர் கண்ணீர் நினைவுகள்.. சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:34 PM, May 13, 2008

//“நாங்க ரெண்டு பேரும் பேச்சுலர்ஸ், அவருதான் பெருசு. அவருக்கு மட்டும் கல்யாணம் ஆயிடிச்சி” என்று ரவியைக் காட்டி சொன்னார் வரவனையான்.//

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பேச்சுலர்ன்னு பிலிம் காட்டுவ..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:36 PM, May 13, 2008

//வரவனையான் said...
அதிலும் ஒரு கொழுத்த பார்ப்பு இரண்டு சிறுமிகளிடம் காசு வாங்கிக்கொண்டு பிரசாதம் "விற்பனை" செய்ததை கண்டு நமக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சகோதரி பொங்கியது இன்னும் கண்ணுகுள்ளே இருக்கு லக்கி.//

கொடுமைதான் வரவனை.. தப்பு செய்றவன் ஆண்டவன் முன்னாடியே வந்து நின்னு தைரியமா செய்றான்னா கலிகாலம்னு சொல்றதைத் தவிர வேற என்னத்த சொல்றது..?

//ஆனா அண்ணன் "முருகனடிமை" உண்மைத்தமிழனை அழைத்து போயிருந்திருக்கலாம் என்கிற எண்ணம் நமக்கு இயல்பாய் வந்ததையும் நினைவுகொள்ள வேண்டும்.//

ஆஹா.. என் நினைப்பு அப்பவும் உங்களுக்கு இருந்ததுக்கு தேங்க்ஸ்..

அப்பன் முருகன் அப்போ நினைக்கலைன்னு நினைக்குறேன்.. நானும் பழனிக்கு போய் வருஷக்கணக்காயிருச்சு.. இந்த வருஷம் ஒரு தடவை போகலாம்னு இருக்கேன்.. போகும்போது கண்டிப்பா வரேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:40 PM, May 13, 2008

//ஜிகர்தண்டாவில் சேர்க்கப்படும் கடற்பாசி, முருங்கைகாய்க்கு இணையான குணம் கொண்டதாம்.//

இதுதான் விஷயமா..? ஆமா முருங்கைக்காய்ல அப்படியென்ன ஸ்பெஷல் குணம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:41 PM, May 13, 2008

//லக்கிலுக் said...
எப்போதுமே பதிவு போட்டு முடித்ததும் செல்ஃப் எடிட்டிங் செய்வது வழக்கம். இன்று ஏனோ எடிட் செய்யாமலேயே தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன். ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால் பொறுத்தருளவும்.//

இதுக்கு முந்தின கமெண்ட்ல ஒரு வார்த்தைய நான் எடிட் பண்ணித்தான் போட்டிருக்கேன்..

வேற ஒண்ணும் உள்குத்து இல்லியே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:45 PM, May 13, 2008

//முரளிகண்ணன் said...
திண்டுக்கல் பிரியாணி எப்படி இருந்தது?//

தலப்பாகட்டி நாயுடு கடைன்னா ஒரு டேஸ்ட் இருக்கும்.. மத்த கடைகள்னா கண்டுபிடிக்கவே முடியாது..

//சேச்சிகளின் டிரேட் மார்க் அகல நெற்றியும் நீண்ட கூந்தலும்தானே?//

முரளி.. இது உங்க ஸ்டைலா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:46 PM, May 13, 2008

//அரவிந்தன் said...
//சேச்சிகளின் 'ட்ரேட்மார்க்கை'//
நெற்றியில் இருக்கும் சந்தனம் தானே அந்த ட்ரேட்மார்க்..?//

ஆஹா.. கேரள சேச்சிகள்ன்னா எல்லாரும் எந்த அளவுக்கு ஆராய்ச்சில இறங்குறாங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:57 PM, May 13, 2008

அது யாரு தம்பீ ஒரு அனானி உள்ள பூந்து விளாசிருக்காரு..

ரொம்ப நாள் தோஸ்த்தோ..?

'யோனிகொண்டான்'னு பேர் சொல்லிக் கூப்பிட்டிருக்காரே..

பேர் 'வெச்சவக' ராயல்டி கேட்டு வர மாட்டாங்களா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
12:59 PM, May 13, 2008

//உண்மையிலே ஜிகர்தண்டா குடிக்கனும்னா, மதுர கீழவாசல் சிக்னல்ல இருக்கிற Syndicate Bank பக்கத்தில இருக்கிற ஒரு சொளராஷ்ரா கடையில குடிக்கனும், அங்க குடிச்சா எதுவும் தூக்காது.//

அன்பு அனானியாரே..

எனக்கு ஒரு டவுட்..

'எதுவுமே தூக்கலை'ன்னா அப்புறம் எதுக்கு ஜிகர்தண்டா குடிக்கணும்? பச்சைத் தண்ணிய குடிச்சிட்டுப் போறது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:01 PM, May 13, 2008

//உங்களை (தோழர், உடன்பிறப்புகள்) எல்லாம் திசையன்விளை வரைக்கும் கல்லுப்பட்டி, சாத்தூர் வழியா அரசுப்பேருந்தில் அனுப்பி விட்டாத் தெரியும், உள்ளூர் தமிழர்களுக்கே போறாட நிறையா இருக்குன்னு.//

பிரபுதேவா மாதிரி உட்கார்ந்துக்கிட்டே டான்ஸ் ஆடிருக்கலாம்.. ஊர்ப் போய்ச் சேர்றதுக்குள்ள நாலு இடத்துல எலும்பு தடம் புரள்வது நிச்சயம்..

இதைத்தானே அனானியாரே சொல்ல வந்தீங்க.. அதுக்கேன் இம்புட்டு கோபம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:04 PM, May 13, 2008

//கொடைக்கானல் போன தோழர்களிடம் வத்தலக்குண்டு காலேஜ் கட்டத்தினை பற்றி விசாரிக்கவும்.//

அதுக்கெதுக்கு வத்தலக்குண்டு வரைக்கும் போகணும் அனானி.. இங்கேயே.. சென்னையிலேயே.. சைதாப்பேட்டை பஸ்ஸ்டாண்ட்டுக்கு எதுத்தாப்புல இருக்குற ஆதிதிராவிட மாணவர்கள் ஹாஸ்டலை ஒரு ரவுண்ட் அடிச்சாலே தெரிஞ்சிருது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:06 PM, May 13, 2008

//முதன் முதலில் இந்த தூரத்த அரசுப்பேருந்துகளில் கடந்த ஆளு எல்லாம், திராவிடத் தமிழனாக குதிக்கிறதெல்லாம் ஓவரப்பு//

அப்போ திராவிடத் தமிழன்னா சுத்திக்கிட்டே இருக்கணும்ன்றீங்களா அனானி.. ஒண்ணும் புரியல..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:09 PM, May 13, 2008

//'நிதானத்தில்' பயணம் பண்ணியிருந்தா அவுகளுக்கு தெரிஞ்சிருக்கும்//

தம்பி நிதானத்துலதான் போயிருக்கார் அனானி.. நீங்கதான்..

//இந்த அரைவேக்காட்டு அனுபவத்தினால்தான் அன்பே சிவத்தையும், தசாவதாரத்தினையும் வெட்டியா கிழிக்க முடியுது, விருமாண்டியோட கதைக ்களத்த பற்றி தெரிஞ்சிருக்கனும்னா உசிலம்பட்டி, சேடபட்டி, உத்தபுரம் பற்றி தெரிஞ்சிருக்கனும். இப்பதான் திண்டுக்கல்ன்னா, நல்லா வெளங்கிடும்டா சாமிகளா.//

எல்லா சினிமாவையும் விமர்சிக்கணும்னா அந்த ஊர்ல வந்து அழுது, புரண்டு, விசாரிச்சு, தங்கித்தான் எழுதணும்னா அந்தந்த டைரக்டர்ஸ்கூட செய்யாதது அனானி..

நாங்க பாவம்.. ஏதோ காசு கொடுத்துப் பார்த்த பாவத்துக்கு ஏதோ எழுதுறோம.. எங்களைப் போய் விரட்டுறீகளே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:12 PM, May 13, 2008

இது 43-வது கமெண்ட்டுன்னு நினைக்கிறேன்..

போதும்.. காலைல இருந்து ஆபீஸ்ல பயங்கர வேலை.. கையொடிக்கிற மாதிரி இருந்துச்சு.. அதையும் சமாளிச்சு இப்படி அடிச்சுத் தள்ளிருக்கோம்னா பாத்துக்க தம்பீ..

இதே மாதிரி நான் போட்ட அல்லாத்துக்கும் மருவாதையா தனித்தனி பதிலா போடலை..

நீ சாப்பிட்ட 'ஜிகர்தண்டா' உனக்கு எந்த 'பயனை'யும் தரக்கூடாதுன்னு முருகனை வேண்டிக்குவேன்..

லக்கிலுக் said...
1:15 PM, May 13, 2008

உ.தமிழன் அண்ணாச்சி!

ஆங்கிலத்தில் Steal the show என்று பதத்தை பயன்படுத்துவார்கள். அதன் அர்த்தம் இன்றுதான் புரிகிறது. நான் போட்ட பதிவென்றாலும் முழுக்க முழுக்க இப்பதிவில் ராஜாங்கம் செலுத்தியிருப்பது நீங்கள் தான்!

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் எழுதுவதற்கு பதிலாக ஒரு தலையணை சைஸ் புத்தகமே எழுதிவிடலாம் போலிருக்கிறது :-(

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:25 PM, May 13, 2008

ஐயையோ தம்பீபீ..

இதை மறந்திட்டனே..

//ஏற்கனவே திண்டுக்கல்லுக்கு சில முறை சென்றிருந்தாலும், அவை அலுவலக ரீதியான பயணமாக நண்பர்களுடனான உல்லாசப் பயணமாக இருந்தது.//

அப்போ அலுவல் ரீதியான பயணமும், நண்பர்களுடனான உல்லாசப் பயணமும் ஒண்ணாயிருச்சு.. வாழ்க உனது அலுவலகம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:27 PM, May 13, 2008

//இதுவரை அரசு பேருந்தில் தனியாக இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை. அருகில் அமர்ந்திருந்த பயணிகள் உம்மணாம் மூஞ்சிகளாக அமைந்துவிட்டதால் தனிமை கொன்றது.//

இதுக்குத்தான் நிறைய பேர் டிரெயினுக்கு ஓடுறாங்க.. எவ்வளவு நேரமானாலும் பக்கத்துல இருக்கிறவர்கிட்ட பேசாம போய்ச் சேர்ந்திரலாம். ஆனா எதுத்தாப்புல முகத்தோடு முகம் பார்க்கிறவர்கிட்ட பேசாம இருக்கவே முடியாது..என்ன கரெக்ட்டா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
1:29 PM, May 13, 2008

//மாறாக அவரது பதிவுகளை போல மிக நீண்டு பண்ணிரண்டு மணி நேர அலுப்பூட்டும் பயணமாக அமைந்துவிட்டது.//

அடப்பாவி.. முதல் பாராவுலேயே குப்புறக் கவுத்திட்டியா..

இவ்ளோ லேட்டா எனக்கு உறைக்குதே..?

41 கமெண்ட்டும் வேஸ்ட்டு..

Anonymous said...
2:08 PM, May 13, 2008

உண்மைத்தமிழன் அண்ணே, இவ்வளவு சொன்ன நீங்க மேல இருக்கிற உண்மை கமண்ட மட்டும் அனானியா வந்து சொன்ன காரணம் என்னவோ ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
3:06 PM, May 13, 2008

//Anonymous said...
உண்மைத்தமிழன் அண்ணே, இவ்வளவு சொன்ன நீங்க மேல இருக்கிற உண்மை கமண்ட மட்டும் அனானியா வந்து சொன்ன காரணம் என்னவோ?//

அடப்பாவி 42 கமெண்ட் போடுறவன், எதுக்குடா ராசா அனானியா போடணும்..? எழுதியிருந்தவனா இருந்தா நானே பேர் போட்டுத் தாக்கிருக்க மாட்டேன்..

புத்தியிருந்தா யோசிங்கப்பூ..

அது நான் இல்ல.. இல்லவே இல்ல..

லக்கிலுக் said...
3:13 PM, May 13, 2008

யோவ் அனானி!

அண்ணன் எனக்கு 40 கமெண்டு போட்டதைப் பார்த்து உனக்கு வயிறெரிகிறதா? ஏன்யா இங்கே வந்து சிண்டு முடியறே?

நானே நாப்பது கமெண்டையும் படிக்கறதுக்குள்ளே தாவூ தீர்ந்துபோயி உட்கார்ந்திருக்கேன்! :-(

Anonymous said...
4:02 PM, May 13, 2008

அடப்பாவி 42 கமெண்ட் போடுறவன், எதுக்குடா ராசா அனானியா போடணும்..? ///// சில உண்மைகளை இப்படி சொல்லுறதுதான் நல்லதுன்னு நினைச்சிருக்கலாம்
இதை நாங்க நம்பனும்னா, அது யாருன்னு கண்டுபிடிச்சு அப்பாவி லக்கி டிரவுசர கிழிச்சது யாருன்னு சொல்லுங்க

அது நான் இல்ல.. இல்லவே இல்ல../////// இப்படி சத்தியம் பண்ணுறது எல்லாம் பார்த்தா அந்த 3வது கமண்ட்குள்ள் உருத்துற உண்மையிருக்கும் போல. லக்கி வழக்கம் போல தலைவர் மாதிரி அமைதி காக்கும் போதே நினைச்சேன், இப்போ சத்தியத்துக்கு அப்புறம் உறுதியாகுது

Anonymous said...
4:07 PM, May 13, 2008

ஏன்யா இங்கே வந்து சிண்டு முடியறே?////////
லக்கி, தலையில சிண்டு இருக்கு(ந்தது)ன்னு ஒத்துக்குற மாதிரி இருக்கு. சிண்டு இருந்தால் தானே முடிய முடியும். பூனைக்குட்டி இல்லை, புலியே வெளியே வந்துடாப்ல தெரியுது.

Anonymous said...
4:07 PM, May 13, 2008

உண்மைத்தமிழனுக்கும் தலையில சிண்டு இருக்கோ?

பென்ஞ்ச இருப்போர் சங்கம்

லக்கிலுக் said...
4:39 PM, May 13, 2008

//பூனைக்குட்டி இல்லை, புலியே வெளியே வந்துடாப்ல தெரியுது.//

அதுதான் ஏற்கனவே கிளிஞ்சிடுச்சே :-(

யோவ் அனானி! கண்ணுக்கு தெரியாத தெய்வமே.. யாருய்யா நீயி.. வார்த்தைக்கு வார்த்தை ஆசிட்டால கழுவி ஊத்தறே? :-)

Anonymous said...
4:44 PM, May 13, 2008

அதுதான் ஏற்கனவே கிளிஞ்சிடுச்சே ////
இந்த 'கிளி'ஞ்சிடுச்சே Parrot. நம்ம டிரவுசருக்கு சிறப்பு லகரம் (ழ) போட்டு எழுதனும். Self editing la தான் வண்டி ஓடுது போல.

ஆனாலும் தமிழ் வா'ள்'க. நம்ம தமிழ் அம்மாவோட 'அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க' மாதிரியான தமிழ் பற்று போல இருக்கே!!

Anonymous said...
5:02 PM, May 13, 2008

ஓர்க் ஹவர் ஓவரு, இனிமே காண்டுல வர்ர கமண்ட் அல்லாம் அப்பால நாளிக்கி ஓர்க் அவர்ல ரிலிஷ் செய்யப்படும்

இங்கணம்
வலையுலக சூப்பர்ஸ்டார் முகமூடி பின்னூட்ட பயிற்சிப்பள்ளி
சிலுக்குவார்பட்டி

Anonymous said...
5:33 PM, May 13, 2008

போன கமண்ட்ல இருக்கிற க்ளு என்னான்னு புரியவில்லையா லக்கி,(கமண்ட் எல்லாம் யாருன்னு, முகமூடின்னு சொல்லி உலக ஞானத்த காட்ட வேணாம்) இதுகெல்லாம் சனாதான தர்மம் புரியனும்னோ, கடைபிடிக்கனும்னோ, எபோதுமே பூணூலா, 'காரியத்துக்கு' மட்டும் பூணூலன்னு யோசிக்க அவசியமில்லை. சிறுமூளையை (செந்தழல் ரவி) உபயோகியுங்க

SP.VR. SUBBIAH said...
5:37 PM, May 13, 2008

////ஆங்கிலத்தில் Steal the show என்று பதத்தை பயன்படுத்துவார்கள். அதன் அர்த்தம் இன்றுதான் புரிகிறது. நான் போட்ட பதிவென்றாலும் முழுக்க முழுக்க இப்பதிவில் ராஜாங்கம் செலுத்தியிருப்பது நீங்கள் தான்!////

உண்மைதான் லக்கியாரே!
பதிவிற்கு மட்டும் 40 பக்கம் நோட்புக் உபயோகிப்பார் என்று எண்னியிருந்தேன். இப்போது பின்னூட்டத்திற்கும் 40 பக்க நோட்புக். நல்ல
வளர்ச்சி. அடித்துக்கொள்ள ஆளில்லை!

முரளிகண்ணன் said...
8:07 PM, May 13, 2008

அய்யா உண்மைத்தமிழா என்ன இது. வலையுலக சுனாமி பதிவுல பின்னூட்ட புயலா வீசிட்டீங்க.

Anonymous said...
10:28 PM, May 13, 2008

எல்லா சினிமாவையும் விமர்சிக்கணும்னா அந்த ஊர்ல வந்து அழுது, புரண்டு, விசாரிச்சு, தங்கித்தான் எழுதணும்னா ///// உண்மைத்தமிழன் அண்ணாத்தே நீங்க குவாகாத்தி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அளவுக்கு நீட்டி முழக்குவிகன்னு,(கொடுமுடி அனுபவத்துக்கு சரி, ஆனால் ஆரப்பாளையம் கிராஸ்ரோடு முத்து ரவுடிதனம்,,,,ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா) நேரா கடைசிக்கு பொட்டிக்கு வந்திட்டேன். அதுனால இத்து விட்டுப்போச்சு. சங்க இலக்கியம், சக்கர்த்தாழ்வார், சர்ச் பாதிரியார், ஸ்கார்ச், காஸ்ட்ரோன்னு எல்லாத்தையும் புத்தகத்திலே பார்த்திட்டு, நல்லமநாயக்கனூர், விளாம்பட்டி ஜமீந்தார் பற்றி தெரியலன்னு சொல்லுறேன். அந்த சமூகம் பற்றி தெரியாததால் தான் விருமாண்டி பற்றி விமர்சனம் குறைவா இருக்கு. ஊர் ஊரா போய் லாட்ஜ்ல ரூம் போட்டு சமூககுறைகளை களைவதற்கு நாம் என்ன சேலம் சிவராஜ் பரம்பரையா என்ன ! இன்னிக்குதான் திண்டுக்கல் வந்திருக்காரு, நிலக்கோட்டை பொன்னம்மா யாருன்னு தெரியுமா பூத் ஏஜெண்டுக்கு. அதுகுள்ள 1ரூபா லஞ்சத்துக்கு எதிரா எகத்தாளமா ஒரு பேச்சு. என்னிக்கு சாயல்குடி, சூரங்குடி, குளத்தூர் எல்லாம் நாம் பார்த்து,,,,,,,

Anonymous said...
1:13 AM, May 14, 2008

அப்போ திராவிடத் தமிழன்னா சுத்திக்கிட்டே இருக்கணும்ன்றீங்களா அனானி.. ஒண்ணும் புரியல..///////
பெருவாரியான சமூகப்பழக்க வழக்கங்களை முடிஞ்சவரைக்கும் தெரிஞ்சுகிட்டு, அப்புறம் சிலவற்றை நக்கல் பண்ணலாம்ன்னு அர்த்தம். பழனி பேருந்துநிலைய பொதுகழிப்பிடத்தில் 1ரூபாய்க்கும் 2ரூபாய்க்கும் நடக்கிற கொள்ளையை!! பார்த்திட்டு, பெருவாரியான ஏலக்காரர்களை அசிங்கப்படுத்தினால் அது எப்படி அரைகுறையோ அத்துதான் இத்து. ஏலம் அரசியல்,, காண்ராக்டர் கொள்ளை, அதுக்கு லஞ்சம்ன்னு Choas theroy எல்லாம் பேசக்கூடாது.

செந்தழல் ரவி said...
8:53 PM, May 14, 2008

:)))))))))))

செந்தழல் ரவி said...
8:54 PM, May 14, 2008

Unmai Thamizan Anna

Why this Kolai Veri ?

வெண்ணை said...
1:04 PM, May 15, 2008

anne tamil manatula nama padivugala eppadi inaipadu konjam solringala....

nanri

Anonymous said...
12:53 PM, May 16, 2008

வந்துடாருப்பா, கோழித்திருடன் புல் ஓவர் போட்டுகிட்டு, கண்டுபிடிக்க!

லைவ்!

லைவ்!

தொடர்புக்கு!

மின்னஞ்சல் :
luckylook32@gmail.com

கைப்பேசி :
+919841354308

மின் சந்தா

Your email address:


Powered by FeedBlitz

இடுகைகள்

Followers